சிறப்பு தொகுப்புகள்

Thursday, May 15, 2014

வெகுதொலைவில்..

அது ஒரு நதிப்பிரவாகம்.
அதன் கரையோர மரத்திலிருந்து
காற்றில் உதிர்ந்த 
இலையென விழுந்தேன்..
அடித்துச் சென்றது பிரவாகம்.
இருப்பினும் எப்படியோ
சுழிக்குள் சிக்காமல் 
சிதையாமல் மூழ்காமல்
லாவகமாய் அதன்மேலே
தவழ்ந்து சென்று
வேறேதோவோர் கரையில் 
ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் -
'
என்னை விட்டு நான்
வெகுதொலைவு வந்துவிட்டதை!'.

(
எண்ணத்தூறல் - 6)

No comments:

Post a Comment