சிறப்பு தொகுப்புகள்

Friday, May 30, 2014

அ..ஆ..இ..

மனிதனின் இடுப்புச் சுற்றளவு - 0.001 கிலோ மீட்டர் (என்று வைத்துக்கொள்வோம்) 

பூமியின் சுற்றளவு - 40075 கிலோமீட்டர் 
வியாழனின் சுற்றளவு - 448969 கிலோமீட்டர் 
சூரியனின் சுற்றளவு - 4368175 கிலோமீட்டர் 
ரைஜலின் சுற்றளவு - 340717650 கிலோமீட்டர் 
மு-செபேயின் சுற்றளவு - 2839313750 கிலோமீட்டர் 
கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு - 6202808500 கிலோமீட்டர் 

இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம்... 

மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு ...... இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து? 

அகம்பாவம்... ஆணவம்... இறுமாப்பு...!

அந்த மனிதன் ஒருவேளை அந்த நட்சத்திரத்தை  விட ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா?

தூசு நான்!

ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை என் பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு! 

எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம்.. ஆணவம்.. இறுமாப்பு..?நன்றி: வல்லமை

6 comments:

 1. அவரவர் தன்னைப் புரிந்து கொண்டால் சரி...!

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரி! ஒப்பீடு உதவாது!

   Delete
 2. மிக அருமையான கருத்து! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, சுரேஷ்!! நலமா?

   Delete
 3. #எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம்.. ஆணவம்.. இறுமாப்பு..?#
  காரணம் ,ஈ தான் !உங்களுக்கே உரித்தான 'ஈ 'டில்லாத சிந்தனை !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும், ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி, ஐயா!!!

   Delete