சிறப்பு தொகுப்புகள்

Saturday, September 6, 2014

வெற்றிகளும் தோல்விகளும்..

அந்தப் பாட்டையில் எல்லோரும் வெற்றிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்! ஒரே வெற்றியை பல பேர் தூக்கிக்கொண்டு ஓடுவதையும் காண முடிகிறது. அந்த ஓட்டக்காரர்களுக்கிடையேயான வெற்றி உரிமைப் போராட்டத்தில் சில வெற்றிகள் துண்டு துண்டாக உடைந்து போகின்றன. உடைந்த துண்டுகளையும் விடாமல் தூக்கிகொண்டு ஓடுகிறார்கள். நாதியற்ற தோல்விகள் அவர்களின் ஓட்டத்தில் தரையில் நசுங்கி, சிதைந்துச் சாகிறது.

(எண்ணத்தூறல்)No comments:

Post a Comment