ராபின் வில்லியம்ஸ்


ந்த மனிதரைப் பார்க்கும் போதெல்லாம், 'கடவுள் இவருக்கு மட்டும் முகத்தில் புன்னகையை தைத்துப் படைத்து விட்டாரா?' என்று தோன்றும்.

'Good Will Hunting', 'Dead Poets Society', 'Mrs.Doubtfire', 'Jumanji' என்று அவரது பல திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில், "Good Will Hunting" ஒவ்வொரு மருத்துவரும் பார்க்கவேண்டிய திரைப்படம். "Dead Poets Society", ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்கவேண்டிய திரைப்படம். 'Mrs.Doubtfire', ஒவ்வொரு தந்தையும் பார்க்கவேண்டிய திரைப்படம்.

'Mrs.Doubtfire' and Jumanji are very special to me. இளம்வயதில் என் தந்தையோடும், தம்பியோடும் சேர்ந்து பலமுறை பார்த்து ரசித்த திரைப்படங்கள் இவை. இப்போது அதே திரைப்படங்களை என் மகனோடு சேர்ந்து திரும்பவும் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த முறை இந்தியாவிற்குச் சென்ற போது, என் தந்தை Jumanji -ஐ அப்போதுதான் முதன் முறையாக பார்ப்பது போல என் மகனுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு என் மகனிடம், 'ஆலன் பாரிஷ் இறந்து விட்டார்!' என்று கூறினேன். 'ஆ.. கெடையாது.. அவர் சும்மா கேம் விளையாடிட்டு   ஜுமாஞ்சி பாரஸ்ட் போயிருப்பார். நாம கேம் கண்டின்யூ பண்ணா வந்துடுவார்.' என்றான்.

Robin, you are a great entertainer for generations!! Rest in peace!

குறிப்பு: ஆகஸ்டு மாதம் 13-ஆம் தேதி முகநூலில் நிலைத்தகவலாக பதிவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..