இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயந்திரர்கள்

படம்
எந்திரன் திரைப்படத்தில் ROBOT-ஐ மனிதனாக மாற்ற முயலுவார்கள். எந்திரன் என்றவுடன் உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது. கவலைப்படாதீர்கள். இந்த இடுகையில் எந்திரன் திரைப்படத்தைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை. ஆனால், எந்திரன் திரைப்படத்தின் கரு இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமானது. 'எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஊட்டி, ஒரு பெண்ணை நேசிக்கச் செய்வார்கள்’.
சில நாட்களுக்கு முன்பு கூட இது தொடர்புடைய செய்தி ஒன்றை வாசித்தேன். இத்தாலி நாட்டிலுள்ள பைசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 'FACE' என்கிற மனித உணர்வுகளைப் வெளிப்படுத்தக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளார்களாம். FACE ரோபோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘HEFES’ என்கிற மென்பொருளைக் கடந்த முப்பது வருடங்களாக படிப்படியாக உருவாக்கி வந்துள்ளார்கள் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.
ஒரு இயந்திரத்தை சிரிக்க வைக்கவும், கோபப்பட வைக்கவும் கிட்டத்தட்ட ஒரு மனிதனின் அரை ஆயுள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று FACE பற்றியோ, HEFES பற்றியோ நான் எழுதப்போவதில்லை. இதற்கு நேர்மாறாக, ‘ஆராய்ச்சியாளர்களின் உதவியின்றி’ தன்னிச்சையாக நடந்துகொண்டிருக்கும்…

என் இனிய சக இந்தியனே...

படம்
தொடர்ந்து (நீண்ட) கட்டுரை வடிவிலேயே எனது வலைப்பூவில் பதிவுசெய்து வருவதால், ஒரு மாறுதலுக்காக இந்தக் கவிதை வரிகளை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:


சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்திலிருந்து விழுந்து மரித்த செய்தியைப் படித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.


இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, "இதுபோன்ற விபத்துக்கள் மாதாமாதம் நடக்கின்றது மாதவன். போன மாதம் கூட துறையூரிலும், கிருஷ்ணகிரியிலும் வாகனத்தில் அடிபட்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம். பொறுப்பே இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்." என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். 


பெல்கிய நாட்டில் ஒவ்வொருமுறை சாலையை கடக்க முயலும்போதும், சாலையின் மறுபக்கம் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் கூட வரிக்கோடிற்கு பத்தடி தள்ளி நின்று, நான் முழுவதுமாகக் கடக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கும்.  இதைப் பார்க்கும்போதெல்லாம் 'மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது’. உண்மையாகவே இவற்றையெல்லாம் ரசிப்பதைவிட, நம் நாட்டில் இப்படி இல்லையே என்கிற ஆதங்…

என்னைக் கவர்ந்த மனிதர்கள்..

எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ ஜாம்பவான்களைவிடவும், ஒருபடி மேலே சென்று, பெரிதாக நாம் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனால், என் ஆதர்ச எழுத்தாளர்களின் சீரிய எழுத்துக்களின் உந்துதலாலும், தமிழ் மேல்கொண்ட காதலாலும், மனதில் உதிப்பதையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கடைஞன் நான்.  
சில சமயங்களில் மின்னல்போல் பளீரென ஒரு எண்ணம் வெட்டும். அந்த எண்ணத்தின் பின்னால் இடியைப் போல கிடுகிடுவென சிறிதுநேரம் ஓடினால், அதைப்பற்றிய கடந்தகாலப் பதிவுகள் அனைத்தும் நம் முன்னே வந்து கொட்டும். சிதறிவிழும் சிந்தனைகளைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கோர்த்துப் பார்த்தால் அது ஒரு கவிதையாகவோ, கட்டுரையாகவோ மாறுகிறது.    
இந்த இடுகையில் நான் எழுதப்போகும் விஷயம் கூட அப்படி பளீரென மின்னிய ஒன்று தான். சில நாட்களுக்கு முன்னாள், ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கருத்தரங்கில் அமர்ந்திருந்த போது உதித்த எண்ணம். ஆனால், வேடிக்கை என்னவென்றால் இதற்கு தலைப்பு வைக்கத்தான் மெனெக்கெட்டு சிறிது நேரம் சிந்திக்க வேண்டியதாய் போயிற்று.
என்னைப்பொறுத்தவரைமனம்என்பதுஒரு 'விவாதக்கள…