இடுகைகள்

ஸ்டீபன் ஹாக்கிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்..

படம்
க டந்த வருடம் கோடை விடுமுறைக்கு தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத் தவிர. அவற்றிற்கு மட்டும் என்ன ஆனதோ? ஆனால், அவைகளிடம்தான் நானும் என் மகனும் அன்றாடம் மாலைவேளைகளில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குத் திரும்பியவுடன் முதலில் தோட்டத்திற்குத்தான் செல்வேன்.   'Hey Boys!' என்றுதான் அவர்களை அழைப்பேன். அவர்கள் வளர வளர அவர்களோடு நானும் என் மகனும் செல்ஃபியெல்லாம்  எடுத்திருக்கிறோம். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலையை பார்த்தவுடன் அனைவருமே வருத்தம் அடைந்தோம். 'My Boys!!' என்று சோக ஸ்மைலியோடு நண்பர்களுக்குச் செய்தி அனுப்பினேன். நண்பர்களுக்கும் காரணம் தெரியவில்லை. "தெரியவில்லை மேடி. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து நீரூற்றினோம். ஆனால் தக்காளிச் செடிகள் மட்டும் செத்துவிட்டது போல் தெரிகிற...

எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

படம்
மு தலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும். இனி இந்தக் கட்டுரையில் நான்  எழுதி  இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.   'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிட்டஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் க...