இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளன்

(சிறுகதை) அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவு செய்துவிட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி, நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒன்றாகப் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது அறையில் இருவரும் பேசிய காட்சி என் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டிருந்தது. அவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்ட நானும், என் திறமையின்  மீதும், என் மீதும் அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்த அவரும் அன்றைக்கு கடுமையாக விவாதம் செய்து கொண்டிருந்த காட்சி அது. “   கார்த்திக், யு ஆர் எ குட் ரைட்டர்!  எழுது .  வேண்டாம்னு   சொல்லல .  பட் , ஜாப விட்டுட்டு விவசாயம் பண்ண போறேன்; ஃ புல்   டைம்  ரைட்டர் ஆகப் போறேன்னு   சொல்றதெல்லாம்   எனக்கு   சரியா   படல  பா. பிலீவ் மி. ஐ ஸீ எ வெரி ப்ரைட் ஃபியூச்சர் பார் யு இன் ஐ.டி   ஃபீல்ட் இட்செல்ஃப்.” என்று அறிவுரை கூறினார் பாலா. “ஐ நோ பாலா.  பட் , ஐ.டி ஈஸ் நாட் மை  பேஷ ன். எழுத்து என்னோட கனவு.” “நீ இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்க. அந்த ஃபீல்டு பத்தி உனக்கு என்ன தெரியும்? அத