இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடைசிக் கடிதம்..

படம்
இன்று காலை கண் விழித்தவுடன் வழக்கம் போல் கைபேசியை எடுத்து, ஜிமெயில் பெட்டியை திறந்து பார்த்தேன். மின்னஞ்சல் பட்டியலில் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களிடமிருந்து வந்திருந்த கடிதம் தான் முதலில் கண்ணில்  பட்டது. 'அன்புள்ள மாதவன், ஒரு துயரச் செய்தி. விமர்சகரும், எழுத்தாளருமான வெங்கட்..' என்ற வரியைக் கண்டவுடன் 'அந்தச் செய்தியாக' நிச்சயம் இருக்கக்கூடாது என்கிற பரபரப்புடன் அதைத் தட்டினேன். அதே செய்தி தான்! '..வெங்கட் சாமிநாதன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்'.    
இன்று சரஸ்வதி பூஜை என்பதால் என் மனைவி அதிகாலை நாலரை மணிக்கே எழுந்து, அப்போதுதான் பூஜையை ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு செய்தியை சொல்லக் கூட தோன்றவில்லை. அங்கே அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில் 'அம்மாவின் தேன்குழல்'  புத்தகம் மட்டும்  கண்ணில் பட்டு, மீண்டும் படுக்கையறைக்குச் சென்று மெத்தையின் மீது அமைதியாக அமர்ந்து விட்டேன். 
'அம்மாவின் தேன்குழல்' - என்னையும் வெ.சா அவர்களையும் இணைத்து வைத்த சிறுகதை. 
பெல்ஜியத்திற்கு வந்த பிறகு உண்டான வெறுமையை நிரப்புவதற்கு எழுத ஆரம்பித்து, எழுதியதை என் நண்பர்க…