இடுகைகள்

January, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உனக்குள் ஒருவன்.. அவனே நீ!

படம்
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையநாள் இரவு விருந்திற்கு பெல்கிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.
அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் சற்று குறைவாகவே (குறைவு என்றால் '6 டிகிரி செல்சியஸ்'!!!) இருந்தது. அதனால் உணவருந்திவிட்டு மேலுறைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டபடி பேசிக்கொண்டே கால்நடையாக லூவன் நகர வீதிகளில் நடந்து சென்றோம்.
அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. (ஆனால், அவ்வாறு இருப்பதில் தவறொன்றும் இல்லை. இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே வேறொரு முக்கியமான விஷயத்தைப் பற்றி அடுத்த இடுகைகளில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது - அது 'MBTI'. MBTI-ஐப் பற்றி நான் அறிந்துகொண்ட நாளன்று ஞானம் பெற்றுவிட்டதைப்போல் உணர்ந்தேன். என்னை முழுவதுமாய் உணர்ந்து, மற்ற மனிதர்களையும் நான் கூர்ந்து நோக்க ஆரம்பித்த நாளது.)  
அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட. வெளிநாட்டவர்களில் (உண்மையில் நான்தானே இங்கு வெள…