இடுகைகள்

லுடோவிகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்..

படம்
' அ ன்டூஷாப்லே ' (Intouchables) என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பற்றியும், குறிப்பாக அதன் பின்னணி இசை பற்றியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தோழா' திரைப்படம் அன்டூஷாப்லேவைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறுகிறார்கள். தழுவல் மட்டுமா என்பதை நீங்களே பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள். நான் சொல்ல வந்தது அந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்த 'லுடோவிகோ எநௌடி ' (Ludovico Einaudi) எனும் இசை மாமேதையைப் பற்றி. கடந்த வருடத்தில் பல இரவுகள் எனக்கு லுடோவிகோ எனும் கடவுளால்தான் நகர்ந்திருக்கிறது. 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றித் தெரியாது. ஆனால் நோய் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித்திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயம் விரைவில் வெளியில் வரும். டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில்...