இடுகைகள்

விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்பதாவது மேகமும் ஏழாவது சொர்க்கமும்

படம்
தை மாதம் பிறந்து மூன்று வாரங்களாகி விட்டது. இருப்பினும் இந்த இடுகையை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! 'ஒரு காரியத்தை செய்யாமலேயே இருப்பதை விட, கால தாமதமானாலும் செய்து முடித்து விடுவது சாலச் சிறந்தது' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று ஒன்று உண்டு. நான்கு வார இடைவெளிக்குப் பிறகு இந்த இடுகையைப் பதிவு செய்கிறேன். சிங்கப்பூரிலிருந்து நண்பர் ஜெகதீசனிடமிருந்து இதுகுறித்து கடிதமே வந்துவிட்டது, “மாதவன், நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பதிவு மெளனமாக இருக்கிறதே? புதிய இடுகைகளே காணோமே? தொடர்ந்து எழுதுங்கள்!” என்று . என்ன செய்வது? வார நாட்களில் - இயந்திரத்தனமான அலுவலகப் பணி, மாலை வேளையில் மகனுடன் விளையாட்டு, முகநூல் மற்றும் இணைய உலாவல், சமீபத்தில் வாங்கிய சில புத்தகங்கள் வாசிப்பு, திடீரெனத் தோன்றும் கதைகளுக்கான கரு மறந்து போகுமுன் அப்போதே ஒரு பக்க சிறுகதைகளை எழுதி முடித்து விடுதல், சில சமயங்களில் அந்த மனநிலை மாறுமுன்பே முழுக்கதையையுமே எழுதி முடித்து விடுதல்… வார ஈறுகளில் - சில மாதங்களாகவே நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கில நாவலை ...