இடுகைகள்

August, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் முதல் கதையும்.. நட்பும்..

என் முதல் கதை ‘காக்கா பையன்’. எட்டாம் வகுப்பு படிக்கும்போது எழுதினேன் என்று நினைக்கிறேன். என் தம்பி அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். என் நண்பன் புகழேந்தியும் நானும் அந்தக் கதையை எழுதினோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதன் அவசியத்தைப் பற்றி அந்த வயதிலேயே நாங்கள் எழுதிய குறுங்கதை. பிறகு அதை நாடகமாகவும் எழுதி நாங்களே அதை டேப் ரிகார்டரில்பதிவு செய்து நண்பர்களுக்கு போட்டுக் காட்டலாம் என்று முடிவு செய்தோம்.

கதையில் மொத்தம் நான்கைந்து பாத்திரங்கள் என்று நினைக்கிறேன். காட்சி நடப்பது ஒரு தேநீர் கடையில். தேநீர் கடைக்காரர் அவரது மகன் ‘காக்காய்’ பற்றி வாடிக்கையாளர் நண்பரிடம் புலம்பும் பாத்திரம். (பையனுக்கு ஆட்டிசம் போன்ற ஏதோ ஒரு பிரச்சினை. ஆட்டிசம் பற்றியெல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது) புகழேந்தி நண்பர் பாத்திரத்தை எடுத்துக்கொண்டான். நானே மீதி மூன்று பாத்திரங்களை ஏற்று வெவ்வேறு குரலில் பேசி அந்த நாடகத்தைப் பதிவு செய்தோம். என் தம்பிக்கு இது நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு அந்த நாளை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. அதே சமயம், அவசர நண்பர்கள் வாழும் உலகில் …