இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் தினம் and some thoughts

படம்
இ ன்றைக்கு இங்கே பெல்ஜியத்தில் தேர்தல்.  ப்ரஸல்ஸ் நகரில் ஓரிரு பதாகைகளைப் பார்த்தேன். நான் வசிக்கும் தீனன் நகரில் அதையும் காணமுடியவில்லை. இதுவரைக்கும் ஒரேயொரு பரப்புரையை பார்க்கும் பாக்கியம்கூட கிட்டவில்லை. தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லை. எந்தவொரு கட்சிக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல் கிடையாதாம். முகநூலிலும் இந்த பெல்ஜியம் நண்பர்கள் ஒரு மீம்ஸ்கூட போடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். அட மீம்ஸ் வேண்டாம். ஒரு சின்ன நிலைத்தகவல்? ஒரே ஒரு வலதுசாரி கட்சி மட்டும் முகநூல் விளம்பரங்களில் "முதலில் நம் மக்கள் " (ஏர்ஸ்ட் ஆன்ஸ மென்ஸென் ) என்று நம்மூரைப் போன்றே முழக்கமிட்டு வருகிறார்கள். அதிலும்கூட அப்படியொரு சாத்வீகம். மற்ற கட்சிகளின் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு எனக்கென்னவோ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரப் படங்கள் போன்று தெரிகிறது. பார்த்த மாத்திரத்திலேயே கொட்டாவி வருகிறது. ஒரு உக்கிரம் வேண்டாமா? நல்லவேளையாக இன்று தேர்தல் என்பதை மறக்கவில்லை. தேர்தல் என்றால் ஒரு கொண்டாட்டமாக இருக்கவேண்டாமா? பைசா செலவில்லாமல் தேர்தலை நடத்திக்கொண்டிருக்கும் இது என்ன விந்தையானதொரு ஜனநா

கடத்தியவளும் கடத்தப்பட்டவளும்

படம்
நே ற்று காலை அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு இளம் பெண் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றாள். ஆனால் அது பாதசாரிகள் கடக்கக்கூடிய இடமில்லை. நல்லவேளையாக நான் குறைவான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்திவிட்டேன். அவள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் நடைமேடைக்கே திரும்பிவிட்டாள். நான் புன்னகைத்துக்கொண்டே 'கடந்து செல்லுமாறு' அவளுக்கு சைகை செய்தேன். குற்றவுணர்ச்சியும் அதனால் விழைந்த வெட்கமும், நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் கலந்ததொரு புன்னகையை என் மீது வீசிக்கொண்டு என்னைப் பார்த்து எதையோ சொல்லியபடி கடந்து சென்றாள். பின்காட்டியூடே மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன். அதே புன்னகையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். அதன் பிறகு அந்தப் புன்னகை சூடிய முகம் நேற்றைய நாள் முழுவதும் என் கண்களை விட்டு அகலவில்லை. எனக்குள் மகிழ்ச்சியை உற்பத்தி செய்துகொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சி என் செயல்களில் வெளிப்பட்டது. மின்னஞ்சல்களுக்குக்கூட பதில்களை புன்னகையோடு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு செல்ஃபி எடுத்துப் பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக

உங்கள் 15% என்ன?

படம்
செ ன்னையில் ஒருமுறை அப்பாவுடன் அவருடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வுகளுக்காக தீவிரமாக என்னைத் தயார் செய்துகொண்டிருந்த காலம். விழாவுக்கு வந்திருந்த நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அப்பாவின் நண்பர். நான் எப்போதும்போல் அசட்டுத்தனமாக அவரிடம், "இன்றைய அரசியல் சூழலில் எப்படி உங்களால் நேர்மையுடன் பணியாற்ற முடிகிறது" என்று கேட்டேன். அவரோ புன்னகைத்தபடி, "நல்ல கேள்வி. நம் சாலைகளை எடுத்துக் கொள்வோம். போக்குவரத்து சமிக்ஞையில் மஞ்சள் விழுந்தவுடன் முடிந்தால் வண்டியை நிறுத்திவிட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் இதை யார் இங்கு பின்பற்றுகிறார்கள்? அவ்வளவு ஏன், சிவப்பு விழுந்தால்கூட பலர் நிற்பதில்லை. நமக்கு முன்னால் விதியை மதிக்காமல் சென்று கொண்டிருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அது நம் கையில் இல்லை. ஆனால், நாம் வண்டியை நிறுத்திவிட்டால் நமக்குப் பின்னால் வருபவன் நின்றே ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை, அவன் நம்முடைய வாகனத்தை இடிக்கலாம

இரட்டை வாள்

படம்
' மி யாமோட்டோ முசாஷி' பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'கென்ஸே' அவர். கென்ஸே என்றால் ஜப்பானிய மொழியில் 'வாள் புனிதர்' என்று பொருள். சிறந்த வாட்போர்த்திறன் கொண்ட போர்வீரர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பட்டம் அது. ஆனால் அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு ஒருவர் வெறும் சாமுராயாக இருந்தால் போதாது. ஜப்பானிய தற்காப்புக் கலையான 'கென்ஜுட்சு'-வில் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். கென்ஜுட்சுவின் ஒரு தனித்துவமான வடிவமான இரட்டை வாள் சண்டை உத்திதான் 'நிதோஜுட்சு'. அதில் கைதேர்ந்தவர் முசாஷி. அதை உருவாக்கியவரும் அவரே. ஜப்பானிய டைகோ டிரம்மர்களால் ஈர்க்கப்பட்டு இந்த பாணியை உருவாக்கி இருக்கிறார். வாள்வீச்சு மட்டுமல்லாமல் எழுத்து, வாழ்க்கைத் தத்துவம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, சித்திர எழுத்து, ஓவியம், போர்த்தந்திரம் என்று பல பரிமாணங்கள் கொண்ட சுவாரசியமான மனிதர். முசாஷியின் ஒன்பது கோட்பாடுகளில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்த ஒன்று - "பல வித்தைகளில் தேர்ச்சித்திறம் பெற்றிருக்கவேண்டும்” என்பது. நமக்குத் தெரிந்த உத்தியே ஆக