இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாயபுரி

(சிறுகதை) நா ன் எங்கோ வட இந்தியாவில் இருக்கிறேன். எந்த மாநிலம் என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தெருமுனையில் வைக்கப்பட்டிருக்கும் இருபதடி உயரப் பதாகை ஒன்று அந்த ஊரின் பெயர் மாயாபூர் என்று எடுத்துச் சொல்லுகிறது. ஊரே கோலாகலமாக இருக்கிறது. ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, தெரு முழுதும் சிவப்புக் கம்பளம் விரித்து வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அந்த ஊருக்கு உரையாற்ற வருகிறாராம். காதை செவிடாக்கும் அளவுக்குக் கோஷங்கள், பட்டாசு வெடிச்சத்தங்கள் எல்லாமும் கேட்கிறது. ஆனால் யாரையுமே அங்கு காணமுடியவில்லை. ஊரே வெறிச்சோடிப் போயிருக்கிறது. திருவிழாக்கோலம் பூண்ட ஊரில் திடீரென்று ஒரு கலவரம் வெடித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தைத் தருகிறது. பிறகு இந்தச் சத்தங்கள் மட்டும் எங்கிருந்து வருகின்றன என்று மோடி உரையாற்றப் போகும் அரங்கத்துக்கு வெளியே நின்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது தொலைவில் ஒருவர்  ஜீப்பில் நின்றபடி கையசைத்துக்கொண்டே வருவது தெரிகிறது. அவர் மோடியேதான். பிரதமர் தனியாக வந்துகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி யாருமே இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள்கூட இல்