இடுகைகள்

குறுங்கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சித்தார்த்தன்

படம்
மு ந்தைய நாள் இரவு வரை பித்துப் பிடித்தவன் போலிருந்த சித்தார்த்தன் காலையில் தெளிவுடன் அரசவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அவனருகே வந்த யசோதரையிடம், "உன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட எண்ணி இருந்தேன், யசோதரா." என்றான்.  "என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?" என்றாள் அதிர்ச்சியடைந்தவளாய் யசோதரா. சித்தார்த்தன் கடந்த சில தினங்களாகவே அவனுக்கு ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்களையெல்லாம் மெதுவாக விளக்கி, "இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு அவசியம் ஏதுமில்லைதான். ஆனால் நேற்று நள்ளிரவு படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்பதை நீ மட்டுமாவது நிச்சயம் தெரிந்துகொள்ளல் வேண்டும், யசோதரா". சித்தார்த்தன் கூறியதைக் கேட்டு உரக்கச் சிரித்தாள் யசோதரை.  "ஏன் சிரிக்கிறாய் யசோதரா?" என்று மெல்லிய புன்னகையுடன் வினவினான் சித்தார்த்தன்.  "எத்தனையோ ஞானிகள் காடுகளிலும் மலை முலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், மரத்தடியிலும் தவம் செய்தும் கிட்டாத ஞானம் தங்களுக்கு மாத்திரம் படுக்கையிலேயே கிடைத்துவிட்டதை எண்ணிச் சிரித்தேன், ஸ்வாமி....

நிறங்கள் – ஒரு பார்வை

படம்
அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா. காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்! அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த 'மிதம்', அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம். வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் 'சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்' ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது. ...

சுருட்டிக்கொள்ளாத வால்

படம்
(குறுங்கதை) அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன். நல்ல நாய்தான்.  ஆனால், அந்த வால்? அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு  பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன். ஆனால், அந்த வால்? அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் தருகிறேன்...

சிராய்ப்பு

படம்
(குறுங்கதை) அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன், வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ 'ஷா'வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை. வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் மட்டும் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான். சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான். வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள். அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக். "என்ன ஆச்சுடி குட்டி" என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான். "இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு ...