இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"இயக்குநருடன் ஒருநாள்" ஆவணப்படம்

படம்
அ ப்பாவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்பது என் வெகுநாள் கனாவாக இருந்து வந்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பொள்ளாச்சி பலூன் திருவிழாவுக் காக தாயகம் வந்தபோது அது சாத்தியமானது. ஆவணப்படம் எடுத்த அன்றைக்கு முந்தைய நாள் நள்ளிரவுதான் ஊருக்கு வந்தேன்.   அடுத்தநாள் பெயருக்கேற்றவாறு ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். படப்பிடிப்பு  என்பது பெரிய சொல். கைப்பேசியைக் கொண்டு நானே பதிவு செய்தது. பயன்படுத்திய கிம்பலிலும் மோட்டார் பிரச்சினை இருந்தது. சரியாக வேலை செய்யவில்லை. மைக் எதுவும் பயன்படுத்தவில்லை.  பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை. மனைவி   ப்ரி யாதான்  கேள்விகளைக்  கேட்டாள் .  என்னென்ன கேள்விகள்  கேட்கலாம்   என்பதை  விமானத்தில் தாயகம் வரும் போது  ப்ரியாவும்   நானும் பேசிக் குறிப்பெடுத்துக் கொண்டோம் . மேலும் பழைய வாழ்க்கை என் நினைவுகளில் இருந்து அகலவில்லை. அதனால் சிரமமிருக்கவில்லை.    முதல் பாகத்தை அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் வெளியிட்டேன். இரண்டாம் பாகத்தையும் அதற்கடுத்த மாதமே  வெளியிட்டேன். எடிட்டிங் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று இரவுகளில் செய்

ஓஷினென் ஏரி

படம்
த ற்போது "கான்டெர்ஸ்டிக்" என்கிற அழகிய சிற்றூரில் தங்கியிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல உறக்கம் அரிதாக வாய்த்திருக்கிறது. நேற்று காலை எழுந்தவுடன் சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன். மலைகளின் பின்னணியில் ஒரு சிறிய அழகிய தேவாலயம் தெரிந்தது. சாளரத்தை திறந்த சமயம் தற்செயலாக ஆலயமணி அடித்தது. வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை (டின்னிட்டஸ் தவிர்த்து). பிறகுதான் அது தந்த உத்வேகத்தில் "நீலக்கன்னியின் கண்ணீர்" பதிவை எழுதி முகநூலில் பதிவிட்டேன். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு உப்பரிகையில் நின்று காலை நேர சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்த பனிமலையையும், நீல வானத்தையும், தூரத்தில் தெரிந்த அருவியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். கையில் இந்தியத் தேநீர். வேறு என்ன வேண்டுமெனக்கு! அம்மாவை வாட்சேப்பில் அழைத்து இந்தக் காட்சிகளைக் காட்டினேன். பிறகு சிற்றுண்டி அருந்திவிட்டு முகநூலில் என்னுடைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு பதிலளித்துவிட்டு, நண்பர்களுடன் அளவளாவிவிட்டு, நேற்றைய நாளைத் துவக்கினோம்.  நேற்றைய திட்டம் "ஓஷினென்ஸீ" (Oeschinensee) என்று ஜெ

நீலக் கன்னியின் கண்ணீர்

படம்
நே ற்று மாலை ப்ளாவ்ஸீயைப் பார்க்கப் போயிருந்தோம். "ப்ளாவ்ஸீ" (Blausee) என்றால் நீலக்கடல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெர்மன் மொழியில் "ஸீ" என்றால் ஏரி. எனவே, ப்ளாவ்ஸீ என்பதை "நீல ஏரி" என்று மொழிபெயர்க்கலாம். "கான்டெர்" பள்ளத்தாக்கில் "கான்டெர்க்ரூன்ட்" என்கிற இடத்தில் உள்ளது இந்தக் கண்கவர் ஏரி. அவ்வளவு ஒன்றும் பெரிய ஏரியெல்லாம் இல்லை. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற ஏரிகளான தூன், ப்ரீன்ஸ், லேமான் போன்ற ஏரிகளுடன் ஒப்பிட்டால் ப்ளாவ்ஸீயை குளம் அல்லது குட்டை என்றே சொல்லவேண்டும். "லூஸான்" நகரைச் சுற்றியுள்ள "லேமான்" ஏரிதான் ஐரோப்பாவிலேயே ஆகப் பெரிய நன்னீர் ஏரி.  ப்ளாவ்ஸீயின் சிறப்பு அதன் பளிங்கு போல் தெளிந்த வானீல நிற நீர். இதை வழக்கமான சொல் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முற்றிலும் உண்மை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தின் முடிவில் உருவான பனிச்சரிவின் காரணமாக உருவான ஏரி என்கிறார்கள். ஏரியை ஒட்டி "கான்டெர் ஆறு" ஓடுகிறது. ஏரியைச் சுற்றிலும் சதா மேகங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் மலைகள் சூழ