இடுகைகள்

பாலமுரளிகிருஷ்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எந்தரோ மகானுபாவுலு..

படம்
அ ம்மா என்னை  வயிற்றில் தாங்கியிருக்கும்  போது அப்பா தினமும் ' பாலமுரளிகிருஷ்ணா ' அவர்கள் பாடிய ' பத்ராசல ராமதாஸ் ' கீர்த்தனைகளை தினமும் இரவு நேரங்களில் போடுவாராம். ஆனால் நான் பிறப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு அந்த கேஸட் தொலைந்துபோயிருக்கிறது. அதன் பிறகு எனக்கு இரண்டு (அல்லது மூன்று) வயதாகும் போது அதே கேஸட்டை சென்னையிலிருந்து மீண்டும் வாங்கி வந்தாராம். அதில் வரும் முதல் பாடலின் இசையைக் கேட்டவுடன் விரைந்து சென்று டேப் ரிகார்டர் அருகே நின்றுகொண்டு பாட முயன்றேனாம். பல வருடங்கள் கழித்து  கோயமுத்தூரில்  ஒரு கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு விடுமுறையில் நான் அதே ஆல்பத்தின் சி.டியை வீட்டுக்கு வாங்கி வந்தேன். அப்போது என் தந்தை என்னிடம் வியந்து, சிலாகித்து சொன்ன விஷயம் இது. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமானதொரு இசையாக இருந்திருக்கிறது பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரல். நேற்றிரவுகூட அவர் பாடிய ' எந்தரோ மகானுபாவுலு ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு தெலுங்கு ஓரளவிற்கு புரி...