இடுகைகள்

அண்மைய பதிவு

குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

படம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் "ஹோட்டல் காஸ்ஆனஸ்".   
ஹோட்டல் காஸானஸ் "ஆனஸ்" என்பது ஆசனவாயேதான் (Anus). "என்னக் கொடுமை இது?" என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. "மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது" என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் 'யூப் ஃபன் லீஸ்ஹௌட்' என்கிற டச்சு வடிவமைப்பாளர். 
விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். 'குதவறைக்குள் முதலிரவு&#…

மாயபுரி

(சிறுகதை)

நான் எங்கோ வட இந்தியாவில் இருக்கிறேன். எந்த மாநிலம் என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தெருமுனையில் வைக்கப்பட்டிருக்கும் இருபதடி உயரப் பதாகை ஒன்று அந்த ஊரின் பெயர் மாயாபூர் என்று எடுத்துச் சொல்லுகிறது. ஊரே கோலாகலமாக இருக்கிறது. ஊரெங்கும் தோரணங்கள் கட்டி, தெரு முழுதும் சிவப்புக் கம்பளம் விரித்து வைத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அந்த ஊருக்கு உரையாற்ற வருகிறாராம். காதை செவிடாக்கும் அளவுக்குக் கோஷங்கள், பட்டாசு வெடிச்சத்தங்கள் எல்லாமும் கேட்கிறது. ஆனால் யாரையுமே அங்கு காணமுடியவில்லை. ஊரே வெறிச்சோடிப் போயிருக்கிறது. திருவிழாக்கோலம் பூண்ட ஊரில் திடீரென்று ஒரு கலவரம் வெடித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போன்றதொரு தோற்றத்தைத் தருகிறது. பிறகு இந்தச் சத்தங்கள் மட்டும் எங்கிருந்து வருகின்றன என்று மோடி உரையாற்றப் போகும் அரங்கத்துக்கு வெளியே நின்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்போது தொலைவில் ஒருவர்  ஜீப்பில் நின்றபடி கையசைத்துக்கொண்டே வருவது தெரிகிறது. அவர் மோடியேதான். பிரதமர் தனியாக வந்துகொண்டிருக்கிறார். அவரைச் சுற்றி யாருமே இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள்கூட இல்லை. …

அங்கு மட்டும்

'எங்கும் கடவுளே!'  என்று கூறும் எந்த மதத்தவனும்  வேற்று மத ஆலயத்துக்குச்  செல்ல மறுப்பதன் மூலம்  அங்கீகரிக்கிறான் - அங்கு மட்டும்  அவன் கடவுள் இல்லை  என்பதை.

உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்..

குறிப்பு : "உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.." - கடந்த முறை இந்தியாவிலிருந்து பெல்கியம் திரும்பும் பொழுது அபுதாபி விமான நிலையத்தில் உறவுகளின்,  நண்பர்களின் சிந்தனைக்காக எழுதியது.
இந்தியாவுக்கு இரண்டு வார விடுமுறை எல்லாம் போதாது. நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று நினைத்த பலரை இந்த முறையும் சந்திக்க இயலவில்லை. செய்ய நினைத்த பல விஷயங்களைச் செய்ய முடியவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுபவன் நான். ஆனால், காலம்? அது ஓடிக்கொண்டே இருக்கிறதே. எனக்காக நிற்க மறுக்கிறதே, என் நினைவுகளைப் போலவே. இன்னும் சில நிமிடங்களில் அபுதாபியிலிருந்து ப்ரசல்சுக்குச் செல்லும் விமானம் கிளம்பிவிடும். ஆனால், அதற்கு முன்பு சில வார்த்தைகள். இது வெறும் பகிர்வல்ல. அனுபவிக்காத எதையும் எழுதவோ பகிரவோ கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. எத்தனை பேர் ஏலாதி படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதை என்னுடைய ஏலாதி என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆறுக்கு அதிகமாகவே இருப்பினும்.   
1. உடல்நலம் பேணுங்கள்
பசித்தால் மட்டும் புசியுங்கள். இன்னும் கொஞ்சம் பசி இருக்கும் பொழுதே உண்பதை நிறுத்திவிடுங்…

உணவுமுறைத் தேர்வு முரண்பாடு : "குறைவே நிறைவு"

படம்
எழுத்தாளர் ஜெயமோகன் பேலியோ உணவுமுறைப் பற்றி எழுதியிருந்த கட்டுரைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த இரத்தவகை உணவுமுறையைப் பற்றி நியாண்டர் செல்வன் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து மீண்டும் நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அவருடைய தளத்தில் கடிதங்கள் பிரசுரிக்கப்படுவதில் இருக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. துறை வல்லுநர்களிடமே உடனடியாகத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய டின்னிட்டஸ் பிரச்சினையைப் பற்றி அவருக்குக் கடிதம் எழுதியபோதே இதை உணர்ந்திருக்கிறேன். யோகம், ஆயுர்வேதம், மருத்துவம் என்று பல்துறை வல்லுநர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்தது. டின்னிட்டஸ் பிரச்னையில் உழன்றுகொண்டிருக்கும் பல வாசகர்களிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. அவர்களில் பலருடன் இன்றளவும் தொடர்பிலிருக்கிறேன்; அவ்வப்போது நலம் விசாரித்தும் வருகிறேன். இந்தியாவில் வசித்து வரும் ருவாண்டா தேசத்துப் பெண்ணொருத்தி என்னை அண்ணனாகவே பார்க்கிறாள். இது டின்னிட்டஸ் வழி உறவு. இன்னும் இப்படி எத்தனையோ உறவுகள். 
நியாண்டர் செல்வன் அவர்களை வல்ல…

போதிதர்மரும் தங்கமீன்களும்

படம்
என்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, "நீயே அவருக்குக் கடிதம் எழுது.." என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்கு எழ…

புத்தனின் போதி

படம்
சளைக்காமல் சாகசம் பாடி  செவிக்குருதி யாசிக்கிறது மூட பக்தி
வாளைச் சுழற்றியபடி  வம்பிழுக்க வருகிறது  மூர்க்க புத்தி 
துளிச் சலனமின்றி  சாவதானமாக நிற்கிறது   புத்தனின் போதி.