இடுகைகள்

November, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடி

படம்
(சிறுகதை) இன்னும் சில நாட்களில் மொத்தமாய் கொட்டித் தீர்ந்துவிடும். ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனத…

'முடி' சிறுகதை - சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ்

படம்
சொல்வனம் இணைய இதழ் - இசை, தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமண்யம், ஐந்தாம் ஆண்டு நிறைவு, அசோகமித்திரன் மற்றும் சிறுகதைச் சிறப்பிதழ்களைத் தொடர்ந்து, 115-ஆவது இதழை பெண்கள் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளார்கள்.

அதன் நீட்சியாக வெளிவந்துள்ள இதழ் 116-இல் என்னுடைய சிறுகதை 'முடி' இடம்பெற்றுள்ளது.

'முடி' சிறுகதைக்கான இணைப்பு: http://solvanam.com/?p=36766

என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு கதை. வாசிப்புக்கு நன்றி!