இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செஹோவின் துப்பாக்கி

படம்
ஞா யிறன்று மாலை ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்ப்பது நிச்சயமாக நேர விரயம் என்பதால் என்ன திரைப்படம் என்று சொல்ல விரும்பவில்லை. அதில் ஒரு வருமானவரித் துறை அதிகாரி தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று திடீர்ச் சோதனை செய்யும் காட்சியைப் பார்க்கும்போது என்னுடைய மகனிடம், "அந்த ஏர்கூலரில்தான் பணம் இருக்கிறது" என்றேன். நான் சொன்னது போலவே பணம் அதில்தான் இருந்தது.  என் மகனுக்கு ஒரே வியப்பு. "எப்படிப் பா கண்டுபிடிச்ச?" என்றான்.  "ஏர் கூலர் வர ஃப்ரேமை வழக்கத்தைவிட அதிக நேரம் காட்டினார்கள் அறிவாளிகள். அதனால் அது நிச்சயம் அடுத்த காட்சியில் மீண்டும் வரப் போகிறது என்று யூகிப்பது எளிது." என்று கூறிவிட்டு, "உன்னைப் போன்று கதைகள் எழுதுபவர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய யுத்தி ஒன்று இருக்கிறது சொல்லவா? செஹோவ்ஸ் கன் ப்ரின்சிபிள்." என்றேன்.  "ஷூர் பா. சொல்லு." திரைப்படம் முடிந்த பிறகு அவனுக்கு அதை விரிவாக விளக்கினேன்.  "ஆன்டோன் செஹோவ்" ஒரு தலைசிறந்த சிறுகதை ஆசிரியர். இலக்கிய உலகில் எட்கர் ஆலன் போவை

சிறுவர்களுக்கான புத்தகப் பட்டியல்

படம்
இ லண்டனில் வசிக்கும் நண்பன் முரளி சிறுவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அனுப்பச் சொன்னான். அந்தப் பணியை என்னைவிட என் மகனே  செய்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியதால் அவனிடம் கோரிக்கை வைத்தேன். உடனே அனுப்பிவிட்டான்.  இதோ முகநூலில் அவன் வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்: * * * * * * * * * *  RECOMMENDED LIST OF BOOKS  My dad's friend asked me to send him the list of books I have read. These are the English books that I have read - listed in alphabetical order. Novel series' are separated below. I have not also included the Dutch and Tamil books I have read. I will make a separate list soon.  Books Aesop's Fables Around the World in 80 Days D'Aulaires' Greek Mythology Diary of a Wimpy Kid Fantastic Beasts & The Crimes of Grindelwald (The Original Screenplay) Global Warming Great Rulers of India Gulliver's Travels Human Body - a children's encyclopedia Illustrated Stories of Charl

அம்மாவின் (கொரோனா) காமெடிகள் (4)

"ஹலோ.." "சொல்லு மா.. நாட்ல என்ன நடக்குது" "நீ ஒரு மாசத்துக்கு முன்ன சொன்னதெல்லாம் நடக்குது பா. ஒன்னுமே புரியல. கோவிலுக்குக்கூட போக முடியல. கோவில், மசூதி, சர்ச் எல்லாத்தையும் மூடிட்டானுங்க"  "நல்லதுதானே மா" "உனக்குத்தான் சாமி தேவையில்லை. எங்களுக்கு வேணுமே பா. கஷ்ட காலத்துலயே கோவிலை மூடினா எப்படி?"  "தேகோ தேவாலயா ப்ரோக்தா."  "எனக்கு டச்சு தெரியாதே பா" "மாம்ஸ். வீட்டுக்குள்ளேயே ஒரு இந்துத்துவர வெச்சிக்கிட்டு சமஸ்க்ருதத்தை டச்சுனு சொல்றியே வெட்கமா இல்ல?"  "எனக்கு தமிழ் போதுண்டா கண்ணா. ஆமா அப்படீன்னா என்ன?" "தேகமே தேவாலயம். அத விட்டுட்டு வெளிய கோவில்லயும், சாமியாருங்க கிட்டயும் கடவுள தேடினா, தேடிட்டே இருக்கவேண்டியதுதான். ஆயிரம் கோவிலுக்குப் போனாலும், ஆயிரம் சாமியார்களை பார்த்தாலும், தன் மேல நம்பிக்கை வைக்காதவன்தான் பெரிய நாத்திகன்." "அடேயப்பா அட்டகாசமா இருக்கே. அப்ப உனக்கு திரும்பவும் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா?" "ஏம்மா, தேகமே தேவாலயம்னா அதுக்கு உள்ள உ

எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு..

படம்
எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு,  நேற்று பக்தர்களுக்கு என்னுடைய செய்தியைச் சொன்னேன். இன்றைக்கு உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நானும் ஒரு அக்நாஸ்டிக் வகையறாதான். உங்களின் அத்தனை நியாயங்களையும் அறிந்தவன். அதே சமயம் கடவுள் தத்துவத்தைப் புரிந்து கொண்டவன். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதத்திலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளை ஓட்டி விட்டோம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு  அரைத்த மாவையே அரைக்கப் போகிறோமோ தெரியவில்லை. இந்தப் பதிவு மறுப்பாளர்களுக்கும், சாமான்ய பக்தர்களுக்குமானது. அடிப்படைவாதிகளுக்கானது அல்ல. அவர்கள் நாம் சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. சில மூர்க்க நாத்திகர்களும் அப்படித்தான் என்றாலும், அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்பவர்க ள் என்பதால், சற்று காது கொடுத்துக் கேட்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மனிதனின் மிகப் பெரிய பிரச்சனைகள் யாவை என்று என்னைப் பட்டியலிடச் சொன்னால் இவற்றைச் சொல்வேன். 1. பிரிவு 2. நோய்மை 3. பணம் 4. மரணம் இவையே மனிதனின் மிகப் பெரிய பிரச்சினைகளும், அச்சங்களும் ஆகும். எல்லா ச

கோகுல் எனும் சினிமா கூகுள்

படம்
முகநூலில் ஒரு சிலரை அவர்களுக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து வருகிறேன். அதில் ஒருவர் தமிழினி மின்னிதழின் ஆசிரியர் கோகுல் பிரசாத். வழக்கமான விருப்பச் சொடுக்குகளைத் தாண்டிய உறவு அது. அவர் வெளியிட்டிருக்கும் "உலகின் சிறந்த திரைப்படங்கள்" மற்றும் "உலகின் சிறந்த இயக்குநர்கள்" பட்டியல்களைப் பார்த்தேன். பிரமிப்பாக இருக்கிறது. இது ஒரு மகத்தான முயற்சி. அவர் ஒரு சினிமா காதலர் என்பதை அறிவேன். ஆனால் அவர் வாழ்வில் சினிமா மட்டுமே இருக்கிறது என்பதை ஏற்கனவே ஒருமுறை அவரிடமிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைப் பகிர்ந்ததன் மூலம் அறிந்துகொண்டேன். எனக்கெல்லாம் பட்டியல் போடுவதற்குப் பொறுமையே இருக்காது. அவருடைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் ஒரு அகவயமான மனிதர் என்று அனுமானித்து வைத்திருக்கிறேன். அகவயமானவர்கள் பொறுமைசாலிகள். ஆழமானவர்களும்கூட.  பட்டியல்கள் அவசியமா? புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். நான் வழக்கமாக பிறர் பரிந்துரைப்பதன் பேரில் எந்த ஒரு புத்தகத்தை வாங்கி வாசிப்பவன் இல்லை. அதே சமயம் உலகின் தலைசிறந்த படைப்பாளிகள் பலரை விமர்சகர்களின் பட்டியல்கள் மூலமாகவும், எனக்குப் பிடி

ஒப்புதல் வாக்குமூலம்

கவிதை ஒரு பெகாஸஸ் குதிரை அதன் மீது லாவகமாகப் பாய்ந்தேறி எண்ணங்களைத் துரத்திச் செல்லும் வித்தை அறிந்தவன் நானில்லை  தானாகவே தேடி வந்து முன் விழும் எண்ணப் பாறைகளுக்கு உருக்கொடுக்கும் சிற்பியுமில்லை  பேராற்றலுடன் சொற்களின் பின் ஓடி நொடியும் ஓட்டக்காரனுமில்லை  கவிஞனாவது என் இலக்கும் இல்லை என் கவிதைகளில் இலக்கணத்தைத் தேடுகிறீர்கள் என் கவிதைகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறீர்கள் என் கவிதைகளின் வகைமை என்னவென்று அலசுகிறீர்கள் என் கவிதைகளின் தரத்தை அளவிடுகிறீர்கள் என் கவிதைகளை பிறர் கவிதைகளுடன் ஒப்பிடுகிறீர்கள் என் கவிதைகளைப் பாராட்டுகிறீர்கள் என் கவிதைகளைத் தூற்றுகிறீர்கள்  இனியும் இவையெல்லாம் வேண்டாம் என் கவிதைகளைப் பொருட்படுத்தாதீர்கள் ஏனெனில் அவை கவிதைகளே இல்லை.

வேறு வழியில்லை

என்னைப் பற்றிய உண்மைகளை விடவும்  என்னைப் பற்றிய பொய்கள் என்னைச் சார்ந்தவர்களுக்கு  மிகவும் பிடிக்கிறது ஏனெனில் என்னைப் பற்றிய பொய்கள்  அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப் போவதாக இருக்கின்றன என்னைப் பற்றிய பொய்கள் அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கின்றன என்னைப் பற்றிய பொய்கள் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன இப்படி எதுவாக இல்லாவிட்டாலும் என்னைப் பற்றிய பொய்கள் வளைக்கக் கூடியதாக இருக்கின்றன தங்களுக்கு வேண்டியது போல் வளைத்துக் கொள்ள முடிகிறது அப்படி வளைக்கும் முயற்சியில் என்னைப் பற்றிய உண்மைகளின் அழகை சிறிது சிதைக்கவும் தயங்குவதில்லை அவர்கள் என்னைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் நிராகரிக்கிறார்கள் வெறுக்கிறார்கள் சிதைக்கிறார்கள் முடிவில் விலகி ஓடிச் சென்று விடுகிறார்கள் ஒரு கட்டத்தில் என்னைப் பற்றிய பொய்களே என்னைப் பற்றிய உண்மைகளாகவும் ஆகிவிடுகின்றன தனிமரமாய் இந்த வேடிக்கைகளை அவை தரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னைப் பற்றிய உண்மைகளுக்கு.

போணி

படம்
திருப்பத்தூர் நகரிலுள்ள சி.கே.சி தியேட்டர் எதிரில் அமைந்த அந்தத் தலைகீழ் 'ப' வடிவில் அமைந்த நீண்ட ஓலைக் குடிசை வீட்டில், மொத்தம் மூன்று படுக்கை அறைகள். இரண்டு சிறிய படுக்கையறைகளுக்கு அடுத்து மூலையில் கோழிகளுக்கான ஒரு திறந்த அறையும் உண்டு. அப்பா அப்போது கோழி வளர்த்து வந்தார். மூன்றாவது படுக்கையறை சமையற்கட்டுடன் கூடிய சற்றுப் பெரிய அறை. அதனுடைய அளவு பத்துக்கு பத்தாகவோ அல்லது அதைவிட சற்று அதி கமாகவோ இருக்கலாம். சரியாக நினைவிலில்லை. குடிசை வீடு என்பதால் குள்ளமானவர்களும் குனிந்துதான் உள்ளே நுழைய வேண்டும். இல்லையெனில் தலை இடிக்கும். முதல் அறையில் என் பெற்றோர்களுடன் நானும் என் தம்பியும் வசித்து வந்தோம். இரண்டாவது அறையில் என் சித்தப்பாவும் சித்தியும். மூன்றாவது பெரிய அறையில் என் அத்தையின் குடும்பம் உட்பட மீதி அனைவரும். பெரிய குடும்பம் எங்களுடையது.  எங்கள் அறையில் வழக்கமாக அம்மாவும் தம்பியும் கட்டிலின் மீது கொசுவலைக்குள் படுத்துக்கொள்வார்கள். நானும் அப்பாவும் தரையில் பாய் விரித்து அதன் மீது படுத்துக் கொள்வோம். இரவு நேரங்களில் அப்பா எதிர்வீட்டு ஆறுமுகம் மிட்டாய் கடையில் அமர்ந்து நள்ள