இடுகைகள்

திலீப்குமார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லாக்கப்.. விசாரணை.. தடம்..

படம்
லா க்கப் நாவலும், விசாரணை திரைப்படமும் தெரியும். அது என்ன தடம்? லாக்கப் நாவலை இன்னும் வாசிக்கவில்லை. எங்கும் விசாரணை பற்றிய பேச்சாய் இருப்பதால் மிகுந்த ஆவலுடன் இன்று விசாரணை படம் பார்த்தேன். ஆந்திரத்தில் பூங்காவில் தங்கி பிழைப்பு நடத்தி வரும் மூன்று தமிழக இளைஞர்களை காவல்துறையினர் ஒரு விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். படத்தின் ஒன்பதாவது நிமிடம், காவல்நிலையத்தில் ஒரு அதிகாரி தனக்கு ராசியானதொரு லத்தியைத் தேர்ந்தெடுத்து அந்த இளைஞர்களை விளாச ஆரம்பித்த கணம் வரைதான் நான் படத்தோடு இருந்தேன். அதன் பிறகு என் மனம் தடம் மாறி திலீப் குமார் அவர்களின் 'தடம்' சிறுகதைக்குள் விழுந்துவிட்டது. தடம் சிறுகதையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு போராளி லாக்-அப்பிற்குள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளையும், அத்தருணத்தில் அவனுடைய மனவோட்டத்தையும் செறிவாக பதிவு செய்திருப்பார் திலீப். விசாரணைக்கும் தடத்திற்கும் இருக்கும் ஒற்றுமை லாக்-அப்பிற்குள் விசாரணையின் பெயரால் குற்றவாளிகள் சந்திக்கும் சித்திரவதைகளும் அதிகாரிகளின் குரூரமும்தான். தடம் சிறுகதையை வாசித்திராதவர்களை விசாரணை நிச்சயம் பாதித்திருக்...

கணையாழியின் 34-ஆம் பக்கம்

படம்
வி டுமுறை கழிந்து பெல்ஜியம் வந்து சேர்ந்தவுடன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தேன்:  "கடந்த ஒரு மாத காலமாக பேய்த்தனமாக ஓடிக்கொண்டிருந்தேன். வீட்டில் இருந்ததைக் காட்டிலும் காருக்குள் இருந்த நேரம் அதிகம். எத்தனை நண்பர்கள்.. அதில் எத்தனை புதியவர்கள்.. எத்தனை சந்திப்புகள்.. புத்தக கண்காட்சி உட்பட எத்தனை விழாக்கள்.. எத்தனை உணவகங்கள்.. எத்தனை கடைகள்.. அத்தனையும் வெறும் கனவோ என்று தோன்றுகிறது. கனவு கலைந்தெழுந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். வெறுமை என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது." சூழ்ந்திருந்த வெறுமையை கொன்றழித்து நிரப்பும் விதமாய் வந்தது அவருடைய கடிதம்.   ' Kanayazhi of Feb carries an article on your short story collection ' என்று எழுதியிருந்தவர் தமிழ் இலக்கிய உலகின் எதிர்க்குரலும், மூத்த கலை விமர்சகரும், எழுத்தாளருமான  திரு. வெ.சா  (வெங்கட் சாமிநாதன்).  திரு.வெ.சா அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்   கடித்தத்தைப் பார்த்தவுடனேயே மேக்ஸ்டருக்குச் சென்று   கணையாழி  பிப்ரவரி இதழை தேடிக் கண்டுபிடித்தேன். அவரது இ...