சின்ன விஷயங்களின் மனிதனுடன்..
' வ ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ' சின்ன விஷயங்களின் மனிதன் ' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்? புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்: "யானையைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து." எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்! இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனை...