இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு பிதாமகரின் அஸ்தமனம்

படம்
  எ ன் தந்தையார் சிறுவயதிலேயே எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த உன்னதமான அவருடைய நண்பர்களில் முதன்மையானவர் டாக்டர் சம்பந்தம். வெறும் குடும்ப மருத்துவராக மட்டுமன்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு பெரியப்பாவாக, நலம்விரும்பியாக, வழிகாட்டியாக, நண்பராகப் பழகியவர். வாழ்க்கை எனும் குருஷேத்திரப் போரில் பீஷ்ம பிதாமகராக என்னருகே நின்று எனக்கு வழிகாட்டியவர்; ஜாம்பவானாக என்னுடைய பலத்தை எனக்கு நினைவூட்டியவர்; எத்தனையோ தருணங்களில் மனம் சஞ்சலமடைந்து இந்த உலகின் மீது வெறுப்புற்று விடுபட எண்ணிய போது கண்ணனாக கீதோபதேசம் செய்து, என் அகக் கண்களைத் திறந்து வைத்து என் வாகனத்தின் திசையை மாற்றிவிட முயன்று என் சாரதியாகத் திகழ்ந்தவர். பார்த்த சாரதி அவர். இன்றைக்கு நான் நானாக இருந்து பலருக்கு வழிகாட்டுவதற்கும், என்னுடைய இன்றைய நிலைக்கு முக்கியமானதொரு காரணமாகவும் இருந்தவர். நான் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அலைந்தவர். உண்மையில் இவற்றையெல்லாம் அவருடைய மகன்களுக்குக்கூட செய்திருப்பாரா என்பது சந்தேகமே. பார்த்த சாரதி என்று கூறினேன். உண்மைதான். இளம் வயதில் அடிக்கடி மனம் சஞ்சலமடைபவனாக இருந்திருக்கிறேன். அவருடைய மர