இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டின்னிட்டஸ் டு டீட்ஸே

க டந்த மூன்று வாரங்களாக மார்புப் பகுதியில் ஊசியால் தைப்பது போன்றதொரு வலி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அத்தோடு மூச்சுத்திணறலும் கைகோர்த்துக் கொண்டுவிட்டது. மனைவியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வருபவன். உணவுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வந்தவன். இதயக் கோளாறாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் தாயகத்திலிருந்து திரும்பியதிலிருந்து உடலியக்கமே அதிகம் இல்லாமல் போய்விட்டது. நடுவில் பன்றிக் காய்ச்சல் வேறு வாட்டி வதைத்துவிட்டது. கடந்த புதனன்று நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கிறிஸ்டோபர், "உனக்கு சுவாசக் கோளாறு இருக்கிறதா? என்னால் இந்த இம்பல்ஸை வடிகட்ட முடியவில்லை" என்றார். "ஆமாம். ஓரிரு வாரங்களாகவே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவரிடம் போகவேண்டும்" என்றேன். அடுத்தநாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு காரோட்டிக்கொண்டு போகும்போது மீண்டும் நெஞ்சுப் பகுதியில் பயங்கர வலி. அதைத் தொடர்ந்த மூச்சுத்திணறல். ஒழுங்காக வீடு போய் சேர்வோமா என்கிற சந்தேகம் எழுந்

அம்பேத்கர் அழுதுகொண்டிருக்கிறார்..

படம்
நே ற்று முழுவதும் ஒரு பேயைப் போல் வாசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஆப்தால்மிக் மைக்ரைன் காரணமாக ஒருமுறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் நான் பார்வையின்றி இருந்தபோது, அம்பேத்கரைத்தான் நினைத்துக்கொண்டேன். தனக்குப் பார்வை குறைபாடு வந்தபோது, "புத்தகங்கள் படிக்க முடியாமல் போய்விடுமே!" என்று அழுதாராம். நானும் அதேபோல் அந்த இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு, "இப்படியே இருந்துவிட்டால் இனிமேல் எப்படி புத்தகங்கள் வாசிக்கப்போகிறேன்" என்று சிந்தித்து வருந்திக்கொண்டிருந்தேன். உண்மையில் வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்ற காலத்தில் அம்பேத்கர் ஒரு நாளைக்கு இருபது மணிநேரங்கள் படிப்பாராம். "வாசிக்க நேரம் இல்லை" என்று கூறுபவர்கள் கவனிக்க. அவரிடம் நான் காதல் கொண்டதற்குப் பல காரணங்களில் முதன்மையான காரணமும் இதுவே - "புத்தகங்களின் மீதான அவரது காதல்". பாம்பே சட்டக் கல்லூரி முதல்வராக அவர் இருந்தபோது அவரது வீட்டு நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயி

நான் இல்லாத சமயம்..

அன்பே, நான் இல்லாத சமயம் என்னைப் பற்றி  தேவதை என்றொருவன் சொல்லக்கூடும்  போக்கிரி என்று இன்னொருவனும் மடையன் என்று மற்றொருவனும் ஏமாற்றுப் பேர்வழி என்று எவனோ ஒருவனும் பித்தன் சித்தன் சாத்தான் என்று பல பேரும் பலவிதமாய் பேசக்கூடும் அத்தனையும் உண்மை! நம்புவாயாக.. ‘உன்னைப் பற்றி நீயே சொல்’ என்று கேட்பாயானால் 'நான் ஒரு நிலைக்கண்ணாடியாய் வாழ்ந்தேன்' என்பேன்.

காலை 8.45 மணிக்கு புனித யாகோபு சதுக்கத்தில்

காலை 8.45 மணி . லூவன் நகரத்தின் புனித யாகோபு சதுக்கம் பேருந்து நிறுத்தம் . என்னுடைய நாள் துவங்கும் நேரமும் இடமும் இது . தினமும் ஆறு மணிக்கே எழுந்து விட்டாலும் , ஆறிலிருந்து எட்டு வரை நான் செய்யும் அத்தனைக் காலைக்கடன்களையும் ஒருவித தியான நிலையிலேயே செய்து முடிப்பேன் . ஆறுமணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டுத் தூங்கும் நண்பர்கள் பலர் காலையில் செய்வதை பார்த்திருக்கிறேன் . அலாரம் அடிக்கும் போது , கை மட்டும் விழித்துக்கொண்டு ஒரே அழுத்தாக சேவலின் கழுத்தை நெறிப்பது போல , அலாரத்தை அழுத்தி உறக்கநிலைக்கு அனுப்பிவிட்டு அதுவும் தூங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து முறையாவது அந்தக் கையுடன் அலாரம் பரிதாபமாகப் போராடும் . நான் நிச்சயம் அந்த ரகம் அல்ல . அலாரம் அடித்த அடுத்த நொடி குபீரென்று விழித்தெழுந்து , ஸ்னூஸ் செய்துவிட்டு , கண்களை மூடிக்கொண்டு படுக்கையிலேயே அமர்ந்து தியானம் செய்யத் தொடங்குவேன் . தியானம் தொடங்கிய சில நொடிகளில் தலை தொங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து ஸ்னூஸ்களுக்கு என் தியானம் தொடரும் . அதிலும் திங்கட்கிழ