ஒப்புதல் வாக்குமூலம்
கவிதை ஒரு பெகாஸஸ் குதிரை அதன் மீது லாவகமாகப் பாய்ந்தேறி எண்ணங்களைத் துரத்திச் செல்லும் வித்தை அறிந்தவன் நானில்லை தானாகவே தேடி வந்து முன் விழும் எண்ணப் பாறைகளுக்கு உருக்கொடுக்கும் சிற்பியுமில்லை பேராற்றலுடன் சொற்களின் பின் ஓடி நொடியும் ஓட்டக்காரனுமில்லை கவிஞனாவது என் இலக்கும் இல்லை என் கவிதைகளில் இலக்கணத்தைத் தேடுகிறீர்கள் என் கவிதைகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறீர்கள் என் கவிதைகளின் வகைமை என்னவென்று அலசுகிறீர்கள் என் கவிதைகளின் தரத்தை அளவிடுகிறீர்கள் என் கவிதைகளை பிறர் கவிதைகளுடன் ஒப்பிடுகிறீர்கள் என் கவிதைகளைப் பாராட்டுகிறீர்கள் என் கவிதைகளைத் தூற்றுகிறீர்கள் இனியும் இவையெல்லாம் வேண்டாம் என் கவிதைகளைப் பொருட்படுத்தாதீர்கள் ஏனெனில் அவை கவிதைகளே இல்லை.