இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"பறவைப் பெண்" - ஸ்விட்சர்லாந்தின் சகுந்தலை

படம்
சு விட்சர்லாந்தின் "பெர்னீசிய ஓபெர்லாந்து" (உயர்நிலம்) மண்டலத்திலுள்ள ஆடெல்போடென்  என்கிற மலைகிராமம் சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிரசித்தி பெற்றது. இங்குதான் பனிச்சறுக்கு உலகக் கோப்பை போட்டியும் நடக்கிறது. கிராம மையத்தில் இருக்கும் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான 'எங்ஸ்ட்லிகெனை' பார்த்து ரசிப்பதற்கென்றே பிரத்யேகமாக மனிதன் உருவாக்கிய உப்பரிகைதான் இந்த மலைகிராமம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள் ஆடல்போடெனர்கள். அதை நான் மறுக்கப் போவதில்லை. அருவியை அருகே இருந்து பார்க்கவேண்டுமென்றால் இரண்டு மணிநேரம் நடந்துதான் செல்லவேண்டும். அதற்காகவே நடைபாதையையும், பிரத்யேகமாக பாலங்களையும் அமைத்திருக்கிறார்கள். எங்ஸ்ட்லிகென் ஆல்ப் மலை உருகித் தோற்றுவிக்கும் அருவியும், இன்னும் பல நீரோடைகளும் ஒண்றிணைந்து உருவாகும் எங்ஸ்ட்லிகென் நதி வளைந்து நெளிந்து பள்ளத்தாக்கில் ஓட, அதனுடன் இணைந்து கண்கவர் மலைப்பாதையில் காரோட்டிக்கொண்டு செல்வது என்பது என்னளவில் ஸென் நிலையைத் தரும் செயல். மேகங்களோடு சதா முட்ட