இடுகைகள்

February, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரம்மாவைக் கண்டோம்

படம்
இந்த இடுகையின் தலைப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் 'இந்த பிரம்மா யார்?' என்று உங்களுக்கு நிச்சயம் கேள்வி எழுந்திருக்கும். அவர் வேறு யாருமல்ல; சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவனே தான்!

'இந்த மனிதர் கதை எழுதுவார் என்று தெரியும். இப்போது கட்டுரைக்குள்ளும் கதையை நுழைக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது' என்று நீங்கள் நினைப்பது எனக்கு டெலிபதி மூலம் வந்தடைந்து விட்டது.

ஆனால் இது கதையும் அல்ல; ஆன்மீகக் கட்டுரையும் அல்ல. மாறாக, ஒரு பதின்மூன்று வயது சிறுவன், தனது ஒன்பது வயது தம்பியுடனும், முப்பது-நாற்பது வயது மதிக்கத்தக்க பெரியவர்களுடனும் புரிந்த ஆன்மீகப் பயணங்களின் அனுபவக் கட்டுரை. ஆகையால் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நான் ஏதோ தவறாக எழுதிவிட்டேன் என்று வெகுண்டெழுந்து வந்து எனது வலைப்பதிவை முடக்கப் போராடாமல், நீங்களும் ஒரு பதிமூன்று வயது சிறுவனின் மனநிலைக்குச் சென்று படித்து ரசிக்கவும். சிறுவயது நினைவுகளைப் போல இனிமை தரக்கூடிய விஷயம் வேறொன்று இருக்க முடியுமா?


"வாழ்க்கையிலும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" என்ற திரைப்பட வசனம் எனக்கு மிகவும் பி…

ஒன்பதாவது மேகமும் ஏழாவது சொர்க்கமும்

படம்
தை மாதம் பிறந்து மூன்று வாரங்களாகி விட்டது. இருப்பினும் இந்த இடுகையை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

'ஒரு காரியத்தை செய்யாமலேயே இருப்பதை விட, கால தாமதமானாலும் செய்து முடித்து விடுவது சாலச் சிறந்தது' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று ஒன்று உண்டு.
நான்கு வார இடைவெளிக்குப் பிறகு இந்த இடுகையைப் பதிவு செய்கிறேன். சிங்கப்பூரிலிருந்து நண்பர் ஜெகதீசனிடமிருந்து இதுகுறித்து கடிதமே வந்துவிட்டது, “மாதவன், நீண்ட நாட்களாக உங்கள் வலைப்பதிவு மெளனமாக இருக்கிறதே? புதிய இடுகைகளே காணோமே? தொடர்ந்து எழுதுங்கள்!” என்று.
என்ன செய்வது?
வார நாட்களில் - இயந்திரத்தனமான அலுவலகப் பணி, மாலை வேளையில் மகனுடன் விளையாட்டு, முகநூல் மற்றும் இணைய உலாவல், சமீபத்தில் வாங்கிய சில புத்தகங்கள் வாசிப்பு, திடீரெனத் தோன்றும் கதைகளுக்கான கரு மறந்து போகுமுன் அப்போதே ஒரு பக்க சிறுகதைகளை எழுதி முடித்து விடுதல், சில சமயங்களில் அந்த மனநிலை மாறுமுன்பே முழுக்கதையையுமே எழுதி முடித்து விடுதல்…
வார ஈறுகளில் - சில மாதங்களாகவே நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கில நாவலை முடிக்க வேண்டியிருப்பதால் …