இடுகைகள்

வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஔரங்கசீப் எனும் புதிர்!

படம்
மு கலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் பற்றி வாசிப்பது என்பது எனக்கு திகட்டாத ஒரு விஷயம். அவிழ்க்க முடியாத ஒரு புதிர் அவர். ஒரு புறம் பார்த்தால் - ஆட்சியைக் கைப்பிடிப்பதற்காகத் தன் உடன்பிறந்தவர்களுடனேயே போரிட்டவர்; இறுதியில் அவர்களைக் கொன்றவர். தான் மிகவும் நேசித்த மகள் செப்-உன்-நிசாவையே சிறையிலடைத்தவர். தந்தை ஷாஜஹானை வீட்டுக் காவலில் வைத்தவர். அவர் மறைந்த பிறகு அவர் விருப்பப்படி அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தலாம் என்று அவரது சகோதரி ஜஹானாரா அனுமதி கேட்டும், எளிய ஊர்வலம் போதும் என்று மறுத்தவர். மறுபுறம் - எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரம் அறவே பிடிக்காது. தாஜ்மகால் அவருக்குப் பிடிக்காமல் போனதில் பெரிய வியப்பில்லை. அரசாங்கப் பணத்தை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையாளர். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அவருடைய தந்தையின் இறுதி ஊர்வலம் பற்றி கூறினேன். அவ்வளவு ஏன்.. தன்னுடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆலம்கீர் அவருடைய உயிலில் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் மீண்டும் வியப்பு வந்து தொற்றிக் கொள்கிறது. காபூலில் இருந்து தமிழகம் வரை பறந்து விரிந்து கிட...