இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸித்ரத்துல் முன்தஹா

படம்
ஏ ழாவது சொர்க்கத்தின் எல்லையில் "ஸித்ரத்துல் முன்தஹா" என்கிற "ஷஜாரா" இருக்கிறதாம். ஸித்ரத்துல் முன்தஹா என்றால் எல்லையின் முடிவில் இருக்கும் இலந்தை மரம். ஷஜாரா என்றால் பெருவிருட்சம். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் சூழ அமைந்த அந்த பெருவிருட்சத்தின் வேர், ஆறாம் சொர்க்கம் வரை நீள்கிறதாம். வேர்ப் பகுதியிலிருந்து ஸல்ஸபீல், கவ்ஸர், நைல், யூப்ரடீஸ் ஆகிய நான்கு பெருநதிகள் உற்பத்தியாகின்றதாம். விருட்சத்தின் இலைகள் யானைகளின் காதுகளை ஒத்ததாகவும், அதன் இலந்தைப் பழங்கள் பெரிய கூஜாக்கள் போலவும் இருக்குமாம். மரத்தைச் சுற்றிலும் எப்போதும் தங்கத்தினாலான வெட்டுக்கிளிகள் பறந்துகொண்டே இருக்குமாம். ஸித்ரத்துல் முந்தஹாவைத் தாண்டி யாருமே செல்ல முடியாதாம். பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் உயிரினங்கள், அவற்றின் செயல்களைப் பற்றிய குறிப்புகள் யாவும் இறுதியில் இந்த விருட்சத்தைத்தான் சென்றடைகின்றன. அதே போல மேலேயிருந்து கீழே கொண்டு வரப்படும் இறைக்கட்டளைகளும் இங்குதான் வந்தடைகின்றன. இவை இரண்டுமே வானவர்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்று ஒரு ஹதீஸ் சொல்கிறது. இன்னொரு சுவாரஸ்யமான செய்

சித்தார்த்தன்

படம்
மு ந்தைய நாள் இரவு வரை பித்துப் பிடித்தவன் போலிருந்த சித்தார்த்தன் காலையில் தெளிவுடன் அரசவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அவனருகே வந்த யசோதரையிடம், "உன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட எண்ணி இருந்தேன், யசோதரா." என்றான்.  "என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?" என்றாள் அதிர்ச்சியடைந்தவளாய் யசோதரா. சித்தார்த்தன் கடந்த சில தினங்களாகவே அவனுக்கு ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்களையெல்லாம் மெதுவாக விளக்கி, "இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு அவசியம் ஏதுமில்லைதான். ஆனால் நேற்று நள்ளிரவு படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்பதை நீ மட்டுமாவது நிச்சயம் தெரிந்துகொள்ளல் வேண்டும், யசோதரா". சித்தார்த்தன் கூறியதைக் கேட்டு உரக்கச் சிரித்தாள் யசோதரை.  "ஏன் சிரிக்கிறாய் யசோதரா?" என்று மெல்லிய புன்னகையுடன் வினவினான் சித்தார்த்தன்.  "எத்தனையோ ஞானிகள் காடுகளிலும் மலை முலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், மரத்தடியிலும் தவம் செய்தும் கிட்டாத ஞானம் தங்களுக்கு மாத்திரம் படுக்கையிலேயே கிடைத்துவிட்டதை எண்ணிச் சிரித்தேன், ஸ்வாமி.&quo

வேர் பிடித்த விளைநிலங்கள்

படம்
வே தாகமத்தில் பதிமூன்றாம் அதிகாரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகளைக் கடந்த வருடம் இங்கு பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பலரிடம் பலமுறை அதைப் பற்றி சொல்வதுண்டு. சொல்வதற்குக் காரணமும் உண்டு. பொதுவாகவே நான் சந்திக்கும் இளைஞர்கள் அத்தனைப் பேரிடமும் பாகுபாடின்றி அவர்களின் வளர்ச்சிக்காக என்னுடைய வழிகாட்டுதல்களை வழங்குவதுண்டு. கேட்பதற்குக் காதுள்ளவர்கள் கேட்கிறார்கள். அதில் சிலர் செயல்படுத்தவும் செய்கிறார்கள். மற்றவர்கள் காதுள்ளவர்களின் வளர்ச்சியைப் பார்த்துப் பொருமுகிறார்கள்.அத்தகைய அனுபவம் அண்மையில்கூடக் கிடைத்தது. ‘நெய்தலின் பிள்ளை’ ஜோ டி குருஸ் அண்ணனுடைய தன்வரலாற்று நூலான "வேர் பிடித்த விளைநிலங்கள்" தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் மேற்சொன்ன பதிமூன்றாம் அதிகாரத்து வரிகளிலிருந்தே நூலைத் தொடங்கி இருக்கிறார். எனக்கும் அண்ணனுக்குமான பந்தம் ஆத்மார்த்தமானது. அவரும் நானும் பல புள்ளிகளில் இணைந்திருப்பதாக உணர்ந்ததுண்டு. தற்போது இந்தப் பதிமூன்றாம் அதிகாரப் புள்ளியிலும். இன்னும் பல புள்ளிகள் என்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புலப்படுகிறது. நூலின் தொடக்க வர

ஸீரோ யூரோ

படம்
இன்று (05-மே-2020) கார்ல் மார்க்ஸின் பிறந்த நாள்.  இரண்டு வருடங்களுக்கு முன்பு மார்க்ஸின் இருநூறாவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியது ஜெர்மனியிலுள்ள அவர் பிறந்த ட்ரிய(ர்) நகரம். ரணகளப்படுத்தி விட்டார்கள் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  கார்ல் மார்க்ஸ் உருவம் பொறித்த போக்குவரத்து சமிக்ஞைகளை நகரெங்கும் நிறுவியிருந்தார்கள். அதை இன்றுகூட ஒரு சில இடங்களில் காணலாம். மார்க்ஸ் சிவப்பு உருவத்தில் நிற்கச் சொல்லி கைகாட்டினால் நிற்க வேண்டும். அவருடைய பச்சை உருவம் நடக்க ஆரம்பித்தால் நாம ும் அவரோடு சேர்ந்து நடக்க வேண்டும்.  கார்ல் மார்க்ஸ் பியர், கார்ல் மார்க்ஸ் வைன் என்று மார்க்ஸ் மதுபானங்களை எல்லாம் விற்றதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், "டஸ் கப்பிடால்" புத்தகத்தைக் கையில் ஏந்தியிருக்கும் அந்த ரப்பர் மார்க்ஸ் வாத்து பொம்மையை எதற்கு விற்பனை செய்தார்கள் என்பது இன்று வரை எனக்கு விளங்கவில்லை.  இவையனைத்துக்கும் மேலாக, அவருடைய சித்தாந்தத்திற்குச் சிறப்பு செய்யும் வகையில்  ட்ரிய(ர்) நகர சுற்றுலாத்துறை  " ஸீரோ  யூரோ "  தாள்களை  வெளியிட்டார்

இயேசுவும் பேதுருவும் நானும்

படம்
நேற்று என் கனவில் இயேசுபிரானும் சீமோன் பேதுருவும் வந்திருந்தார்கள். வியப்பு என்னவென்றால் அந்தக் கனவில் இயேசுவாகவும் பேதுருவாகவும் இருந்தது நானேதான். வெறும் வேடமாகத் தெரியவில்லை. சாட்சாத் நானேதான். அதுவும் இயேசுவாக இருந்த என்னுடைய முகத்திலிருந்து ஞான ஒளி வீசியது. இருவரும் போதி மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் வேத வசனங்களையெல்லாம் மாற்றித் தவறாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தோன்றியது.   இயேசுவாக இருந்த நான் பேதுருவாக இருந்த என்னிடம், “பேதுரு, நான் போகுமிடத்திற்கெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து வர உன்னால் இயலாது.” என்றேன்.  பேதுருவாகிய நான் இயேசுவாகிய என்னிடம், “ஆண்டவரே, ஏன் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றேன்.  இயேசுவாகிய நான் மர்மமாய் புன்னகைத்தேன். அந்தக் காரிருளில் அவரது முகத்தைப் பேதுருவாகிய நான்  நோக்கினேன். இருள் கொண்ட வானில் நிலவொளியாய் என்ன ஒரு தேஜஸ் இயேசுவான என் முகத்தில்!  இயேசுவாகிய நான் பேதுருவாகிய என்னைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ, பேதுரு? இப்படிச் சொல்லும் நீதான் வருங்காலத்தில் நான் சொன்னதையெல்லா

கதம்ப சாம்பார்

படம்
க டந்த இரு தினங்களாக சமையலறையை என்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு கதம்ப சாம்பார் செய்தேன். இது என்னுடைய சொந்த சமையல் குறிப்பு. பெயர்கூட நான் வைத்ததே. ஏற்கனவே அந்தப் பெயரை யாராவது பயன்படுத்தி இருந்தால் சண்டைக்கு வராதீர்கள். இந்தச் சோதனை முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்த சாயிக்கும் ப்ரியாவுக்கும் நன்றி.  கதம்ப சாம்பார் செய்துகொண்டிருக்கும் போதே இந்தக் குட்டி காணொளியை எடுத்து எங்கள் குடும்ப வாட்சேப் குழுவுக்கு அனுப்பினேன். அங்கு எனக்கு ஒரு நான்கைந்து "அப்ரென்டிசுகள்" இருக்கிறார்கள். அதிலும் எனக்கு வாய்த்த மைத்துனர்கள் இருக்கிறார்களே. சுடுதண்ணீருக்குக்கூட செய்முறை விளக்கம் கேட்கும் ரக சமையல் பழகுநர்கள்.  மகள் காயத்ரி, "கதம்பம் என்றால் என்ன சித்தப்பா?" என்று கேட்டாள். கதம்பம் என்றால் கூட்டுக்கலவை என்று பொருள். வீட்டிலுள்ள எல்லா காய்கறிகளையும் நறுக்கிப் போட்டு, குறைவான அளவு தேங்காய்த் துருவலைச் சேர்த்து, சாம்பார் பொடி மட்டுமல்லாது, மிளகு, தனியா, சீரகப் பொடிகளையும் அளவாகச் சேர்த்து சமைத்தேன். வழக்கமாக சாம்பாரில் சேர்க்கும் புளிக் க

வால்பாறையின் வனப்பும் பல வண்ண வலிகளும்..

படம்
ச மீபத்திய என்னுடைய சுற்றுலாக்களிலேயே நான் மிகவும் ரசித்தது கடந்த ஜூலை மாதம் நாங்கள் மேற்கொண்ட வால்பாறை பயணம்தான். அப்போது அங்கு கடும் மழைப் பொழிவு. நண்பர்களும் உறவுகளும் போகவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள் . நண்பர் பாபு, “அதனால்தான் நீங்கள் போகவேண்டும்” என்றார். கிளம்பினோம். ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. வால்பாறையும் அதன் சுற்றுப் பகுதிகளும் பச்சை வண்ணப் போர்வை போர்த்தியிருந்தன. இடையிடையே அருவிகள், சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்த ஆறுகள், வன விலங்குகள், நன்கு பராமரிக்கப்பட்ட சாலையில் வழிந்தோடிக்கொண்டிருந்த மழைநீர் என்று பார்த்த மாத்திரமே என்னை ஆனந்த நிலைக்கு கொண்டு போனது இயற்கை. இங்கு நான் இணைத்திருக்கும் புகைப்படங்கள் அப்போது எடுத்தவை. கேமரா கைவசம் இல்லை. கைபேசியில் எடுத்ததுதான். இந்தப் புகைப்படம் வால்பாறையிலிருந்து அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சோலையாறு அணைக்கருகே எடுத்தது. உரலிக்கல்லைக் கடந்து மலைப்பாதையின் ஒரு வளைவிலிருந்து வெளியே வந்த போது தெரிந்த இந்தக் காட்சியைக் கண்டவுடன், சாரதியிடம் வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு கீழே இறங்கினோம். இடப்புறம் நீர்

சாட்சி

படம்
எ ன்னுடைய மகனின் யூட்யூப் சானலுக்காக "பைசைக்கிள் தீவ்ஸ்" திரைப்படம் பற்றி அவன்   பேசுவதைப் பதிவு செய்து கொண்டிருந்தேன். திரைப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று தடம் மாறி, "உண்மையான கலை என்பதின் அடையாளம் என்ன?" என்று உணர்ச்சிப்பெருக்கோடு கலையைப் பற்றி பேச ஆரம்பித்தான். இது அவன்தானா என்கிற வியப்பு எனக்கு. ஒரு கட்டத்தில், "Audience should feel it in the skin!" என்று கைகளைத் தேய்த்துக் காண்பித்தான். பேசி முடித்த பிறகு கைப்பேசியில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டு, "This is  your best, Sai. I had goosebumps!" என்றேன். புன்னகை ஏந்திய முகத்துடன் அவனுடைய வழக்கமான பாணியில், "ஓ.." என்று மட்டும் சொன்னான். அவன் அகவயமானவன். ஆனால் காணொளிகளைப் பார்த்தால் இந்தக் கூற்றை நீங்கள் நம்ப மாட்டீர்கள். தமிழ் பற்றி, அவன் வாசிக்கும் புத்தகங்கள் பற்றி, அவனுக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றி, பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்கள், SCRATCH தளம் போன்றவை பற்றியெல்லாம் காணொளிகளை வெளியிட்டு வருகிறான். ஆனால், காமெராவை நிறுத்திவிட்டால் போதும், அவன் முற்றிலும

தாய்

படம்
சி றுவயதில் இரவு உணவு மட்டுமாவது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒரு விதி இருந்தது. தனியாகச் சாப்பிடுவது என் தந்தைக்குப் பிடிக்காது. இன்றைக்கு வீட்டுக்குச் சென்றாலும் அவருடைய அதே புலம்பலைக் கேட்கலாம். சிறுவயதில் அப்படி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டேயிருக்க நான் கேட்டது – ‘நன்றாக மென்று சாப்பிடுங்கள்‘ என்பதுதான். வாயிலேயே பாதி வேலை முடிய வேண்டும் இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் வரும் என்பார். என்னளவில் இது வாசிப்புக்கும் பொருந்தும். மாடுகள் அசைபோட்டுச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு படைப்பையும் நான் வெறுமனே வாசித்து முடித்துவிட்டுத் தூக்கி எறிவதில்லை. வாசித்து விட்டு வெகுநேரம் அசைபோடுவது வழக்கம். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாக இருந்தால் நான்கு நாட்களுக்குக்கூட அசைபோட்டுக்கொண்டே இருப்பேன் – "மாடுகளைப் போன்று". அசைபோட அசைபோட படைப்பின் சாரம் எனக்குள் இறங்குவதை உணர்ந்திருக்கிறேன்.  நான் இதுவரை வாசித்திருக்கும் உலகின் சிறந்த இலக்கியப் படைப்புகள் பெரும்பாலா