இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என் இனிய சக இந்தியனே...

படம்
தொடர்ந்து (நீண்ட) கட்டுரை வடிவிலேயே எனது வலைப்பூவில் பதிவுசெய்து வருவதால், ஒரு மாறுதலுக்காக இந்தக் கவிதை வரிகளை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு: சில மாதங்களுக்கு முன்னால், சென்னையில் ஒரு குழந்தை பள்ளி வாகனத்திலிருந்து விழுந்து மரித்த செய்தியைப் படித்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.  இது பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, "இதுபோன்ற விபத்துக்கள் மாதாமாதம் நடக்கின்றது மாதவன். போன மாதம் கூட துறையூரிலும், கிருஷ்ணகிரியிலும் வாகனத்தில் அடிபட்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம். பொறுப்பே இல்லாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்." என்று தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.  பெல்கிய நாட்டில் ஒவ்வொருமுறை சாலையை கடக்க முயலும்போதும், சாலையின் மறுபக்கம் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் கூட வரிக்கோடிற்கு பத்தடி தள்ளி நின்று, நான் முழுவதுமாகக் கடக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்கும்.  இதைப் பார்க்கும்போதெல்லாம் 'மனம் சிறிது வலிக்கத்தான் செய்கிறது’. உண்மையாகவே இவற்றையெல்லாம் ரசிப்பதைவிட, நம் நாட்டில் இப்படி இல்லையே...