இடுகைகள்

June, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வார்லி ஓவியம்

தி ஹிந்து தமிழ் இதழின் சுவர் ஓவியம் கட்டுரைத் தொடரில் கடந்த வாரம் 'வார்லி ஓவியம்' பற்றிய சுவையான செய்திகளை வாசித்தேன். இந்த ஓவியக்கலை மகாராட்டிரம் குஜராத் மாநில எல்லைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினரான வார்லி மக்கள் உருவாக்கி வளர்த்த ஓவியக்கலை. மனிதன் குகைகளில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை ஓவியங்களாக வரைய முற்பட்டு உருவானதே இந்த ஐயாயிரம் வருடங்கள் தொன்மையான ஓவியக்கலை. வார்லி பழங்குடியினர் தங்களுடைய மண்சுவர்களில் காவி வண்ணம் பூசி அதன் பின்புலத்தில் அரிசி மாவைத் தண்ணீரில் குழைந்தது உருவாக்கிய வெள்ளை பூச்சில் ஓவியங்கள் வரைவார்களாம். பெண்களால் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் அவர்களின் அன்றாடப் பணிகளே இடம்பெற்றிருகின்றன. சூரியனுக்கு வட்டம், மலைகளுக்கு முக்கோணம், வண்டிகளுக்கு சதுரம், செவ்வகம் என்று இந்த ஓவியங்கள் பெரும்பாலும் அடிப்படை வடிவங்களைக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. தெய்வ உருவங்களையோ, மதச் சடங்குகளையோ காண முடியவில்லை என்பது மற்றொரு சிறப்பு. இங்கே இணைப்பில் நான் பகிர்ந்திருப்பது என் தோழி வரைந்த வார்லி ஓவியம். பிறந்த நாள், திருமணம், இதர பிற விழாக்களில்…

ஔரங்கசீப் எனும் புதிர்!

படம்
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பைப் பற்றி வாசிப்பது என்பது எனக்கு திகட்டாத ஒரு விஷயம். அவிழ்க்க முடியாத ஒரு புதிர் அவர்.

ஒரு புறம் பார்த்தால் - ஆட்சியைக் கைப்பிடிப்பதற்காகத் தன் உடன்பிறந்தவர்களுடனேயே போரிட்டவர்; இறுதியில் அவர்களைக் கொன்றவர். தான் மிகவும் நேசித்த மகள் செப்-உன்-நிசாவையே சிறையிலடைத்தவர். தந்தை ஷாஜஹானை வீட்டுக் காவலில் வைத்தவர். அவர் மறைந்த பிறகு அவர் விருப்பப்படி அரச மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடத்தலாம் என்று அவரது சகோதரி ஜஹானாரா அனுமதி கேட்டும், எளிய ஊர்வலம் போதும் என்று மறுத்தவர். மறுபுறம் - எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரம் அறவே பிடிக்காது. தாஜ்மகால் அவருக்குப் பிடிக்காமல் போனதில் பெரிய வியப்பில்லை. அரசாங்கப் பணத்தை சொந்த செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையாளர். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அவருடைய தந்தையின் இறுதி ஊர்வலம் பற்றி கூறினேன். அவ்வளவு ஏன்.. தன்னுடைய இறுதி ஊர்வலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆலம்கீர் அவருடைய உயிலில் எழுதி வைத்திருப்பதைப் படித்தால் மீண்டும் வியப்பு வந்து தொற்றிக் கொள்கிறது. காபூலில் இருந்து தமிழகம் வரை பறந்து விரிந்து கிடந்த இந்தியாவை …

ஈரம்

கடந்து போகும்
அத்தனை மேகங்களும்
பொழிவதில்லை நீருடை மேகங்கள்
கூடிநின்று ஆர்ப்பரித்து
ஈரமீந்துவிட்டுப் போகின்றன வறட்டு மேகங்கள்
வெறுத்து விலகிச்
சென்று விடுகின்றன ஆயினும் அவைதம்
நிழலால் நிலத்தை
நனைத்துவிட்டே போகின்றன நீர் மேகமோ நிழல் மேகமோ
நிலத்தின் ஈரம்
இரண்டுக்கும்தான்.

சில வரங்களுக்காக..

பிறருக்காக நாம் முடிவெடுக்க நேரிடும் தருணங்கள் கத்தி முனையில் நடப்பது போன்றது; அபாயகரமானது. ஆயினும் நண்பர்களின் நலன் கருதி, அவர்களுக்காக நான் எடுத்த முடிவுகள் சில தவறாக முடிந்திருக்கிறது. ஒரு சிலருக்கு உண்மையான நோக்கத்தோடு உதவி செய்ய விழைந்து, அதில் மற்ற நண்பர்களையும் ஈடுபடுத்தி, பிறகு அந்த முடிவுகள் ஏற்படுத்திய பாதகங்களால் அவர்களது நட்பையும் இழந்து, இருபுறங்களிலிருந்தும் சாபங்களைப் பெற்று, பெரும் சிக்கல்களில் என்னை புகுத்திக்கொண்டு மனதை ரணப்படுத்திக்கொண்டதருணங்கள் பல. ஒரு மலரின் அழகை ரசித்து விட்டு, வாசத்தை நுகர்ந்து களிப்புற்று, பின்பு அதைப் பறித்து தலையில் வைத்துக்கொள்ளும்போது சிறு முள் குத்தியது என்பதற்காக, எப்படி அந்த மலரை கசக்கி நசுக்கி வீசி எறிந்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற நல்லாத்மாக்கள் ஒவ்வொருமுறையும் கண்டும் காணாதவாறு வெறுப்புடன் கடந்து போகும்போதும், மறைந்திருந்து தாக்கும்போதும் என் தந்தையின் நாட்குறிப்பில் ஒருமுறை நான் படித்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்: "என் சிறகுகள் முறிக்கப்படுகின்றன
என் எதிரிகளால் அல்ல
என் ம…

கற்றலே வாழ்க்கை

படம்
இன்று உலக புத்தக தினம். காலை எழுந்தவுடன் என் மகனிடம், 'இன்று உலக புத்தக தினம். நாம் இருவரும் ஒன்றாக புத்தகம் ஒன்றை வாசிக்கலாமா?' என்று யோசனைதெரிவித்தேன். குதூகலத்துடன், 'என்ன புத்தகம்? என்ன புத்தகம்?' என்று கேட்டான். 'நீ போய் உன் அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா.' என்றேன். அவன் தேர்ந்தெடுத்த புத்தகம் 'ரிச்சர்ட் டேவிட் பாக்' எழுதிய 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' என்கிற புத்தகம். சிறப்பான இந்நாளில் வாசிப்பதற்கு எத்தனை பொருத்தமானதொரு புத்தகம். இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் சிறுவயதில் தன்னுடைய கையொப்பமிட்டுப் பரிசளித்த புத்தகம்.

சிறுவயதில் நானும் என் தம்பியும் ஒன்றாக வாசித்த புத்தகம். இன்றைக்கு அவன் சுருங்கி என்னுடன் வாசித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் என்ன, ஒரு பத்தி படிப்பதற்குள் ஓராயிரம் கேள்விகள், கிளைக் கதைகள். மகாபாரதத்தை வியாச முனி சொல்லக் கேட்டு எழுதியபோது நிச்சயம் விநாயகர் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கவேண்டும். 'பறப்பது என்பதே இரையைத் தேடுவத…

நீரூற்று நகரம்

படம்
கடந்த வாரம் 'ஸ்பா' (SPA) நகரம் சென்றிருந்தேன். ஸ்பா, பெல்கியத்தின் (Belgium) தெற்கு வலோனிய பிராந்தியத்திலுள்ள ஒரு குறுநகரம். வடக்கே ப்ளெம்மிய பிராந்தியத்தின் எல்லையில் நான் வசிக்கும் தீனன் நகரிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தூரம். குறுக்குச் சாலைகளற்ற அதிவிரைவு சாலை கிட்டத்தட்ட ஸ்பா வரை செல்வதால் ஐம்பது நிமிடங்களில் சென்று விடலாம். அங்கிருந்து லக்சம்பர்க், ஜெர்மனி, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளையும் சுமார் ஒரு மணிநேர கார் பயணத்தில் தொட்டுவிடலாம்.

பெல்கியத்திலேயே எழில்மிக்க பகுதி எது என்று யாரைக் கேட்டாலும் 'ஆர்டென்' (Ardennes) மலைத்தொடரைத்தான் கூறுவார்கள். பெல்கியத்தில் தொடங்கி லக்ஸம்பர்க், பிரான்ஸ் நாடுகள் வரை பரந்து விரியும் இந்த வனப்பகுதி விடுமுறை விடுதிகளுக்கும், ஓய்வகங்களுக்கும் புகழ்பெற்றது. எழுபது பேர் தங்கக்கூடிய அளவிற்கு பெரும் பண்ணை வீடுகளும் உண்டு. என்னுடன் பணியாற்றும் பல நண்பர்கள் அடிக்கடி ஆர்டென் வனப்பகுதிக்கு சென்றுவிடுவார்கள். ஒரு வருடத்துக்கு முன்பே தெளிவாகத் திட்டமிட்டு முன்பதிவு செய்துவிடுவார்கள். அத்தகைய 'ஆர்டென் வனப்பகுதியின் முத்து&#…