இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"பறவைப் பெண்" - ஸ்விட்சர்லாந்தின் சகுந்தலை

படம்
சு விட்சர்லாந்தின் "பெர்னீசிய ஓபெர்லாந்து" (உயர்நிலம்) மண்டலத்திலுள்ள ஆடெல்போடென்  என்கிற மலைகிராமம் சர்வதேச பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிரசித்தி பெற்றது. இங்குதான் பனிச்சறுக்கு உலகக் கோப்பை போட்டியும் நடக்கிறது. கிராம மையத்தில் இருக்கும் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான 'எங்ஸ்ட்லிகெனை' பார்த்து ரசிப்பதற்கென்றே பிரத்யேகமாக மனிதன் உருவாக்கிய உப்பரிகைதான் இந்த மலைகிராமம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள் ஆடல்போடெனர்கள். அதை நான் மறுக்கப் போவதில்லை. அருவியை அருகே இருந்து பார்க்கவேண்டுமென்றால் இரண்டு மணிநேரம் நடந்துதான் செல்லவேண்டும். அதற்காகவே நடைபாதையையும், பிரத்யேகமாக பாலங்களையும் அமைத்திருக்கிறார்கள். எங்ஸ்ட்லிகென் ஆல்ப் மலை உருகித் தோற்றுவிக்கும் அருவியும், இன்னும் பல நீரோடைகளும் ஒண்றிணைந்து உருவாகும் எங்ஸ்ட்லிகென் நதி வளைந்து நெளிந்து பள்ளத்தாக்கில் ஓட, அதனுடன் இணைந்து கண்கவர் மலைப்பாதையில் காரோட்டிக்கொண்டு செல்வது என்பது என்னளவில் ஸென் நிலையைத் தரும் செயல். மேகங்களோடு சதா முட்ட

கோஷங்கள்

"ஜெய் ஸ்ரீராம்!" "தமிழ் வாழ்க!"  "பெரியார் வாழ்க!" "பாரத் மாதா கீ ஜே!" "ஏர்ஸ்ட ஆன்ஸ மென்ஸன்" "காவேரி நம்மது" கோஷங்கள் எந்த மொழியில் கத்தப்பட்டாலும் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன நானொரு எளிய மனிதன் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கூட்டத்துக்கு எதிரிலும் ஒரு எளிய மனிதன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறான் அவன் என்னைப் போன்றவன் எளிய மனிதர்களின் மீதான கூட்டங்களின் தாக்குதலே இந்தக் கோஷங்கள் அவை என்னை அமைதியிழக்கச் செய்கின்றன.

நடைபாதையில் ஒரு கலைப்படைப்பு

படம்
கடந்த ஞாயிறன்று நண்பர்களுடன் பன்னிரண்டு கிலோமீட்டர் நடைபயணம் புரிந்தேன். நடப்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்குமாக அமைக்கப்பட்ட பிரத்யேகமான பாதை அது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாதைகளில் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த முறை நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை ஒட்டிய நிலப்பரப்பில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இந்த "திருகுசுருள் வடிவ அறுகோண பார்வைக் குழாய்" கலைப்படைப்பு என் கண்களை கவர்ந்திழுத்தது. "ஹெலிக்ஸகன்" என்று அழைக்கப்படும் இந்தக்  கலைப்படைப்பை வடிவமைத்தவர் "ஃப்ரடெரிக் வாஸ்" என்னும் கலைஞர். பிரபஞ்சம் என்பது சிக்கலான ஒன்றோடொன்று இணைந்ததொரு வலைப்பின்னல். இயற்கையில் மையமாகத் திகழும் அறுகோணம், சுருள் போன்ற வடிவியல் வடிவங்களை இணைத்து ஒரு புதிய வடிவத்தை இந்தப் படைப்பின் மூலம் உருவாக்கியுள்ளார் ஃப்ரடெரிக். சுருள் வடிவம் டி.என்.ஏ-வைக் குறிக்கிறது. அறுகோணம் கார்பன் அணுவைக் குறிக்கிறது. அறிவியல் அறிந்தவர்களுக்கு இந்த இரண்டு வடிவங்களின் முக்கியத்துவம் தெரியும். அவ்வளவு ஏன் பள்ளிக்கே போகாத தேனீக்களுக்குக்கூட அறுகோணத்தின் அருமை தெரியும். இந்தப

வாசக சாலையில் ஒரு நடைப்பயணம்

படம்
காலநிலை மாற்றம் பெல்ஜிய வானிலை மீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பேய் மழை. இங்கு பெய்யும் மழை அங்கு பெய்திருக்கக்கூடாதா என்று எழுதியிருந்தேன். அடுத்த நாளே சென்னையில் மழை. ஆனால் இப்போது இங்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களில் எவ்வளவு மாற்றம்! நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் மே, ஜூன் மாதங்களில் கம்பளிச் சட்டை அணிந்து அலுவலகத்துக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது. ஆனால் கடந்த மாதம் ஆல்ப்ஸ் மலை மீதே அரைக்காற்சட்டையுடன் நடைப்பயணம் புரிந்துகொண்டிருந்தேன். இருந்தாலும் என்னைப் போன்றவர்களைத் தாயகம் நன்றாகவே தயார் செய்து அனுப்பிவைத்திருப்பதால் வெப்ப அலைகள் அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பாவம் நண்பர்கள் அதிக அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். என் மகனே "உஸ், புஸ்ஸென்று" அமர்ந்திருக்கிறான். இங்குள்ள வயதானவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மின்விசிறிகூட இருக்காது. முன்பெல்லாம் இதுபோன்ற அதி வெப்ப நாட்கள் வருடத்துக்கு ஐந்தாறு முறை வரும். அதனால் மின்விசிறி இ

தண்ணீர்.. தண்ணீர்..

படம்
அம்மாவிடம் சென்னை மாநகரின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். தோழி யாஷிகாவும் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்களுடன் வாட்சேப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவற்றில் தெரிவது தண்ணீரே இல்லை. வேதியியல் ஆய்வகங்களில் குப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றதொரு மஞ்சள் திரவம். "இந்த திரவத்துக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முன்னூறு ரூபாய் கொடுக்கவேண்டியதாய் இருக்கிறது. நாங்களாவது பரவாயில்லை. குடிப்பதற்கும், சமையலுக்கும் வேண்டிய தண்ணீரை விலைக்கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை செய்பவர் வீட்டில் இந்தத் தண்ணீரைத்தான் பருகுகிறார்கள். இதைக் கொண்டுதான் சமைக்கிறார்கள். ஏன் நமக்கு மட்டும் இந்த நாதியற்ற நிலைமை? அரசாங்கம் என்ன செய்கிறது? கட்டுகிற வரிப்பணமெல்லாம் எங்குதான் போகிறது?" என்கிற வினாக்களுடன் அந்த குறுஞ்செய்தி ஒரு குறுங்கட்டுரையைப் போல் நீண்டுகொண்டே சென்றது. நியாயமான கேள்விகள்தான். அதில் ஒரு கேள்வி, "இதைப் பற்றி நீங்கள் ஏன் எழுதக்கூடாது?" என்பது.  "என்னுடைய ஐந்து கொடுங்கனவுகள்" என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கிற எ

படைப்பாளியும் எதிர்ப்புகளும்

முகநூலில் என்னுடைய இயக்கம் அதிகரித்திருப்பதை அங்கு என்னைத் தொடரும் உணர்ந்திருக்கலாம். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். 'பாலில் விஷம்' என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லை. ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருந்தேனே ஒழிய என்னுடைய அன்றாட நடப்பு குறிப்புகள் எழுதுவதை என்றுமே நிறுத்தியதில்லை. முகநூலை எனது நாட்குறிப்புச் சுவடியாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் இங்கே நான் பகிரும் பதிவுகள் என்னுடைய நாட்குறிப்புச் சுவடியின் ஒரு பகுதி மட்டுமே. நான் இதுவரை எழுதியிருக்கும் அத்தனையுமே பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதற்கு என்னைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று எண்ணுகிறேன்.  நண்பர் வெங்கட் ஒருமுற

காஃப்கா கஃபேவும் ப்ரூகல் பாதையும்..

படம்
நண்பர்கள் பாபு, ஆலினுடன் ப்ரசல்ஸ் நகர வீதியில் உலவிக் கொண்டிருந்தபோது ஒரு அருந்தகத்தின் பெயர் என் கவனத்தை ஈர்த்தது - "காஃப்கா கஃபே". அருந்தகத்துக்கு காஃப்காவின் பெயரா என்று ஆச்சர்யப்பட்டோம். "நீ காஃப்காவை வாசிக்கிறாயா? ஹெவி ஸ்டஃப் ஆயிற்றே!" என்றார் ஆலின். நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் எனக்கு காஃப்கா, அல்பேர் காம்யு போன்ற எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதே என் பெல்ஜியம் நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்கெல்ல ாம் இந்தியாவில் என்ன வேலை என்பது போன்று பார்வை வீசியிருக்கிறார்கள். காஃப்காவின் "உருமாற்றம்" (The Metamorphosis) பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். அதைவிடவும் அவருடைய "தீர்ப்பு" (The Judgement) கதைதான் சிறந்ததென்பது என் தீர்ப்பு. என்னை உலுக்கிப்போட்டதொரு இலக்கியப் படைப்பு அது.  உண்மையிலேயே இந்த அருந்தகத்துக்கு ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்களா என்றொரு சம்சயம் எனக்கு. நம்மூரில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் இவர்கள் பெயரிலெல்லாம் தேநீர் கடைகளைப் பார்த்து நமக்குப் பழக்கமில்லையே. சாரு ந

நூறு செம்மறி ஆடுகள்

படம்
ப்ரஸல்ஸ் விமான நிலையத்துக்கு ஒரு மாத காலத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய சுவாரசியமான செய்தி ஒன்றை இன்று வாசித்தேன். விமான நிலையத்துக்கு அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் வந்து போவார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. ஏனெனில் இந்த முறை விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மேன்மைவாய்ந்த நூறு செம்மறி ஆடுகள்.  விமானங்கள் புறப்படும்போதும் தரையிறக்கத்தின் போதும் எழும்பும் சத்தம் வெளியில் கேட்க ாமலிருக்க, விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மண்மேடுகளில் வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் பாரிய புல்லறு பொறிகளைக் கொண்டு புல்மட்டத்தை சரிசெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து அந்தப் பணியைச் செய்வதற்கு செம்மறி ஆடுகளை வரவழைத்துள்ளார்கள். ஜூன் மாத இறுதி வரை அவை அங்கு மேய்ச்சலில் இருக்கும். புல்வெளி மேடுகளுக்கான பராமரிப்பு வேலையும் ஆயிற்று. ஆடுகளுக்குச் சுவையான விருந்தும் ஆயிற்று. இது ஒரு கால்நடை நட்புத் தீர்வு மட்டுமல்ல, நல்லதொரு சூழல் நட்புத் தீர்வும்கூட.  இதைப் பற்றி நண்பர் கார்த்திக்கிடம் மாலை பேசிக்கொண

சிலைகளும் குறிப்புகளும் (1)

படம்
ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில் நடந்து செல்லும்போது கண்களுக்கு விருந்தாகும் எளிமையான நினைவுச்சின்னங்கள், சிற்ப வேலைப்பாடுகளில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லையென்றாலும் சிலவற்றுக்குப் பின்னால் சுவாரசியம் தாங்கிய கதைகளும் இருக்கவே செய்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரேக்கக் கடவுளான ஜீயஸ் காளையாக உருமாறி வந்து ஐரோப்பாவைத் தூக்கிக்கொண்டு செல்லும் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் பெயர்காரணத்தை விளக்கியிருந்தேன். அந்தப் படம் பெல்ஜியத்திலுள்ள லூவன் நகரில் எடுத்தது. அங்குதான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வசித்தேன். என் சொந்த ஊரை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அதே அளவுக்கு லூவனையும் நேசிக்கிறேன். மாணவர்களின் நகரமான லூவன் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளின் கதைக்களமாக இருந்திருக்கிறது என்பதை வாசித்தவர்கள் அறிவீர்கள்.  ஊசிமுனையில் குத்தப்பட்ட வண்டு, நிர்வாண கோலத்தில் மிதந்துகொண்டிருக்கும் பெண், தலையில் தண்ணீரை ஊற்றியபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், ரொட்டி விற்பவன் என்று சாதாரண மனிதர்களுக்கான நினைவுச்சின்னங்களை லூவன்

தேர்தல் தினம் and some thoughts

படம்
இ ன்றைக்கு இங்கே பெல்ஜியத்தில் தேர்தல்.  ப்ரஸல்ஸ் நகரில் ஓரிரு பதாகைகளைப் பார்த்தேன். நான் வசிக்கும் தீனன் நகரில் அதையும் காணமுடியவில்லை. இதுவரைக்கும் ஒரேயொரு பரப்புரையை பார்க்கும் பாக்கியம்கூட கிட்டவில்லை. தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லை. எந்தவொரு கட்சிக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல் கிடையாதாம். முகநூலிலும் இந்த பெல்ஜியம் நண்பர்கள் ஒரு மீம்ஸ்கூட போடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். அட மீம்ஸ் வேண்டாம். ஒரு சின்ன நிலைத்தகவல்? ஒரே ஒரு வலதுசாரி கட்சி மட்டும் முகநூல் விளம்பரங்களில் "முதலில் நம் மக்கள் " (ஏர்ஸ்ட் ஆன்ஸ மென்ஸென் ) என்று நம்மூரைப் போன்றே முழக்கமிட்டு வருகிறார்கள். அதிலும்கூட அப்படியொரு சாத்வீகம். மற்ற கட்சிகளின் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு எனக்கென்னவோ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரப் படங்கள் போன்று தெரிகிறது. பார்த்த மாத்திரத்திலேயே கொட்டாவி வருகிறது. ஒரு உக்கிரம் வேண்டாமா? நல்லவேளையாக இன்று தேர்தல் என்பதை மறக்கவில்லை. தேர்தல் என்றால் ஒரு கொண்டாட்டமாக இருக்கவேண்டாமா? பைசா செலவில்லாமல் தேர்தலை நடத்திக்கொண்டிருக்கும் இது என்ன விந்தையானதொரு ஜனநா

கடத்தியவளும் கடத்தப்பட்டவளும்

படம்
நே ற்று காலை அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு இளம் பெண் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றாள். ஆனால் அது பாதசாரிகள் கடக்கக்கூடிய இடமில்லை. நல்லவேளையாக நான் குறைவான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்திவிட்டேன். அவள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் நடைமேடைக்கே திரும்பிவிட்டாள். நான் புன்னகைத்துக்கொண்டே 'கடந்து செல்லுமாறு' அவளுக்கு சைகை செய்தேன். குற்றவுணர்ச்சியும் அதனால் விழைந்த வெட்கமும், நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் கலந்ததொரு புன்னகையை என் மீது வீசிக்கொண்டு என்னைப் பார்த்து எதையோ சொல்லியபடி கடந்து சென்றாள். பின்காட்டியூடே மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன். அதே புன்னகையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள். அதன் பிறகு அந்தப் புன்னகை சூடிய முகம் நேற்றைய நாள் முழுவதும் என் கண்களை விட்டு அகலவில்லை. எனக்குள் மகிழ்ச்சியை உற்பத்தி செய்துகொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சி என் செயல்களில் வெளிப்பட்டது. மின்னஞ்சல்களுக்குக்கூட பதில்களை புன்னகையோடு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு செல்ஃபி எடுத்துப் பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக

உங்கள் 15% என்ன?

படம்
செ ன்னையில் ஒருமுறை அப்பாவுடன் அவருடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வுகளுக்காக தீவிரமாக என்னைத் தயார் செய்துகொண்டிருந்த காலம். விழாவுக்கு வந்திருந்த நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அப்பாவின் நண்பர். நான் எப்போதும்போல் அசட்டுத்தனமாக அவரிடம், "இன்றைய அரசியல் சூழலில் எப்படி உங்களால் நேர்மையுடன் பணியாற்ற முடிகிறது" என்று கேட்டேன். அவரோ புன்னகைத்தபடி, "நல்ல கேள்வி. நம் சாலைகளை எடுத்துக் கொள்வோம். போக்குவரத்து சமிக்ஞையில் மஞ்சள் விழுந்தவுடன் முடிந்தால் வண்டியை நிறுத்திவிட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் இதை யார் இங்கு பின்பற்றுகிறார்கள்? அவ்வளவு ஏன், சிவப்பு விழுந்தால்கூட பலர் நிற்பதில்லை. நமக்கு முன்னால் விதியை மதிக்காமல் சென்று கொண்டிருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அது நம் கையில் இல்லை. ஆனால், நாம் வண்டியை நிறுத்திவிட்டால் நமக்குப் பின்னால் வருபவன் நின்றே ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை, அவன் நம்முடைய வாகனத்தை இடிக்கலாம

இரட்டை வாள்

படம்
' மி யாமோட்டோ முசாஷி' பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'கென்ஸே' அவர். கென்ஸே என்றால் ஜப்பானிய மொழியில் 'வாள் புனிதர்' என்று பொருள். சிறந்த வாட்போர்த்திறன் கொண்ட போர்வீரர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பட்டம் அது. ஆனால் அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு ஒருவர் வெறும் சாமுராயாக இருந்தால் போதாது. ஜப்பானிய தற்காப்புக் கலையான 'கென்ஜுட்சு'-வில் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். கென்ஜுட்சுவின் ஒரு தனித்துவமான வடிவமான இரட்டை வாள் சண்டை உத்திதான் 'நிதோஜுட்சு'. அதில் கைதேர்ந்தவர் முசாஷி. அதை உருவாக்கியவரும் அவரே. ஜப்பானிய டைகோ டிரம்மர்களால் ஈர்க்கப்பட்டு இந்த பாணியை உருவாக்கி இருக்கிறார். வாள்வீச்சு மட்டுமல்லாமல் எழுத்து, வாழ்க்கைத் தத்துவம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, சித்திர எழுத்து, ஓவியம், போர்த்தந்திரம் என்று பல பரிமாணங்கள் கொண்ட சுவாரசியமான மனிதர். முசாஷியின் ஒன்பது கோட்பாடுகளில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்த ஒன்று - "பல வித்தைகளில் தேர்ச்சித்திறம் பெற்றிருக்கவேண்டும்” என்பது. நமக்குத் தெரிந்த உத்தியே ஆக

டின்னிட்டஸ் டு டீட்ஸே

க டந்த மூன்று வாரங்களாக மார்புப் பகுதியில் ஊசியால் தைப்பது போன்றதொரு வலி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அத்தோடு மூச்சுத்திணறலும் கைகோர்த்துக் கொண்டுவிட்டது. மனைவியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வருபவன். உணவுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வந்தவன். இதயக் கோளாறாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் தாயகத்திலிருந்து திரும்பியதிலிருந்து உடலியக்கமே அதிகம் இல்லாமல் போய்விட்டது. நடுவில் பன்றிக் காய்ச்சல் வேறு வாட்டி வதைத்துவிட்டது. கடந்த புதனன்று நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கிறிஸ்டோபர், "உனக்கு சுவாசக் கோளாறு இருக்கிறதா? என்னால் இந்த இம்பல்ஸை வடிகட்ட முடியவில்லை" என்றார். "ஆமாம். ஓரிரு வாரங்களாகவே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவரிடம் போகவேண்டும்" என்றேன். அடுத்தநாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு காரோட்டிக்கொண்டு போகும்போது மீண்டும் நெஞ்சுப் பகுதியில் பயங்கர வலி. அதைத் தொடர்ந்த மூச்சுத்திணறல். ஒழுங்காக வீடு போய் சேர்வோமா என்கிற சந்தேகம் எழுந்

அம்பேத்கர் அழுதுகொண்டிருக்கிறார்..

படம்
நே ற்று முழுவதும் ஒரு பேயைப் போல் வாசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஆப்தால்மிக் மைக்ரைன் காரணமாக ஒருமுறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் நான் பார்வையின்றி இருந்தபோது, அம்பேத்கரைத்தான் நினைத்துக்கொண்டேன். தனக்குப் பார்வை குறைபாடு வந்தபோது, "புத்தகங்கள் படிக்க முடியாமல் போய்விடுமே!" என்று அழுதாராம். நானும் அதேபோல் அந்த இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு, "இப்படியே இருந்துவிட்டால் இனிமேல் எப்படி புத்தகங்கள் வாசிக்கப்போகிறேன்" என்று சிந்தித்து வருந்திக்கொண்டிருந்தேன். உண்மையில் வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை. இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்ற காலத்தில் அம்பேத்கர் ஒரு நாளைக்கு இருபது மணிநேரங்கள் படிப்பாராம். "வாசிக்க நேரம் இல்லை" என்று கூறுபவர்கள் கவனிக்க. அவரிடம் நான் காதல் கொண்டதற்குப் பல காரணங்களில் முதன்மையான காரணமும் இதுவே - "புத்தகங்களின் மீதான அவரது காதல்". பாம்பே சட்டக் கல்லூரி முதல்வராக அவர் இருந்தபோது அவரது வீட்டு நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயி