இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தோப்பில் முகம்மது மீரான்

படம்
சமீபத்திய பதிவொன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன். • தமிழக இஸ்லாமிய சமூகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வியலைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பிரியாணியைத் தவிர! எத்தனைப் படங்கள் அவர்களின் வாழ்க்கையை நேர்மையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தால் அவற்றிலும் மிகையாக “அல்லா-அருணாசலா" போன்ற செயற்கைக் காட்சியமைப்புகள். சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களுக்கு ஒரு முஸ்லீம் பெரியவர் குடிதண்ணீர் வழங்குகிறார். அந்தப் புகைப்படத்தை புளகாங்கிதத்துடன், "முஸ்லீம் பெரியவரே தண்ணீர் கொடுக்கிறார்" என்று ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த "ரே"-வில் ஒளிந்திருக்கிறது சமூகத்தின் குரூரம். இதில் என்ன விந்தை இருக்கிறது. அவரும் நம்மில் ஒருவர்தானே என்கிற கேள்விதான் எனக்குள் எழுந்தது. ஆனால் அவரை அவ்வாறு இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை இந்தச் சமூகம். அதற்குப் படைப்பாளிகளின் பங்கு என்ன? மலையாளத்தில் வெளிவந்த "ஆதாமிண்டே மகன் அபு" (மற்றும் எத்தனையோ) படத்தைப் போன்று ஒன்று வந்திருக்கிறதா தமிழில்?  அது சரி.

அபூர்வ ராகம்

படம்
பாபுவை சந்திப்பது என்பது எனக்கு கைபேசி பாட்டரியை சார்ஜ் செய்துகொள்வது போன்றது. வாலியுடன் மோதுபவர்களின் பாதி பலம் வாலிக்குச் சென்றுவிடும் என்று கூறுவார்கள். பாபுவைச் சந்திக்கும் போதெல்லாம் என்னுடைய பலம் இரண்டு மடங்காகி விடுவதாக உணர்கிறேன். அவரைச் சந்திக்கச் செல்வதெல்லாம் என்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே. இது போன்ற இன்னொரு மனிதனை நான் என் நாற்பதாண்டு கால வாழ்க்கையில் சந்தித்ததில்லை. அவரொரு அபூர்வ ராகம். இதே தலைப்பில் அவரைப் பற்றியும், எங்கள் உறவு பற்றியும், அவருடனான என்னுடைய அனுபவங்கள் பற்றியும் ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. இப்போதைக்கு இந்தக் குறும்பதிவுடன் அதைச் செய்யத் தொடங்குகிறேன். இந்தியாவிலிருந்து பெல்ஜியத்துக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். என்னுடைய நண்பன் ஒருவன் சந்திக்கச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறான். "மீண்டும் நான் உன்னைச் சந்திக்கும் போது நீ வேறொரு ஆளாகியிருப்பாய். உன்னைக் கொலை செய்துவிடுவார். ஜாக்கிரதை." என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறான். உண்மையில் நான் அத்தகைய கொலைகாரனா என்று எனக்குத் தெர

அம்மாவின் காமெடிகள் (3)

அம்மாவிடமிருந்து வாட்சேப்பில் அழைப்பு வந்தது. எதற்கு என்பது நன்றாகத் தெரியும். அன்றைக்கு முன்தினம் இரவு முகநூலில் என்னுடைய "டின்னிடஸ் டு டீட்ஸே" பதிவைப் பகிர்ந்திருந்தேன். வாசித்துவிட்டு எப்போதும் போல் பதறி அடித்துக்கொண்டு என்னை அழைத்தாள்.  "என்னடா கண்ணா அது என்னமோ நெஞ்சுவலின்னிட்டு?" "அத விடுமா. டாக்டரை பாத்தாச்சு. சிம்பிள் ப்ராப்ளம்தான்"  "உன்னை நம்பமாட்டேன். நீ ஊருக்கு உடனே கிளம்பி வா. நம்ம டாக்டர்கிட்ட காமிக்கலாம்"  "மா… இங்க சோஃபி நம்ம டாக்டர் மாதிரியே நல்ல டாக்டர் மா." "இல்ல டா கண்ணா.. நம்ம டாக்டர் மாதிரி வராது. அந்த ஊரே சரியில்ல. அங்க போனதுக்கப்புறம்தான் உனக்கு புதுப்புது வியாதியா வருது. இங்க வந்துடுன்னு சொன்னா கேட்க மாட்டேங்குற. இங்க டெல்லில இருந்தாக்கூட உடனே வந்து பார்த்திருப்பேன்." "இந்த டயலாக ஆயிரம் முறை சொல்லியாச்சு. செண்டி போடாத மாம்ஸ். நாட்ல எலெக்ஷன் நடக்குது. அது எவ்ளோ முக்கியமான விஷயம்.. அதப் பத்தி பேசறத விட்டுட்டு.."  "ஒட்டு போட்டாச்சு பா. நம்ம வேல முடிஞ்சுது. இதுக்கு மேல நம்ம க

அம்மாவின் காமெடிகள் (2)

“ஹலோ..”  “சொல்லு மா” “சாப்டியா கண்ணா?” “இந்தியத் தாய்மார்களுக்கு வேற கேள்வியே கேட்கத் தெரியாதா?” “சரி.. அத விடு. நாம பேசினத பேஸ்புக்ல போட்டுட்டியாமே. நாட்டு நிலவரமே சரியில்ல. நமக்கு எதுக்கு பா வம்பு?”  “நீ கோட்ஸேவ பத்தி நல்லவிதமா சொன்னதாதான மா போட்டேன். அப்புறம் என்ன பிரச்சின? உன் பாஷைல சொல்லணும்னா, காந்திய திட்டினா இந்த அகிம்ச புடிச்ச பயல்களுக்கு கோவமா வரப் போவுது?” “எதுக்கு பா பிரச்சின. நீ வேணும்னா இப்படி மாத்தி எழுதிடு..” “எப்படி?” “காந்தியைக் கொன்றது ஒரு ஆண்”.

அம்மாவின் காமெடிகள் (1)

அம்மாவிடமிருந்து அதிகாலையிலேயே அழைப்பு. பதறி அடித்துக்கொண்டு எடுத்தால், "தூங்கிட்டு இருக்கியா பா?" என்று மறுமுனையிலிருந்து கூலாக ஒரு கேள்வி.  "இந்த நேரத்துக்கு என்ன மா பண்ணிட்டு இருப்பேன். என்ன காலைல கால்?" என்றேன். "நம்ம ஊர்ல புதுசா கோட்ஸே மகான் கோயில் கட்டியிருக்காங்க. அப்பா அங்க போயிருக்கார். உன்கிட்ட சும்மா பேசலாம்னு கூப்பிட்டேன்" "என்ன மா உளர்ர?"  "ஆமா கண்ணா. 'காந்தியின் தீவிரவாதம்' என்கிற தலைப்பிலே பேசப் போறாராம்." "வெயில் அதிகம்னு கேள்விப்பட்டேன். அதுக்காக இப்படியா.. கோட்ஸே கோயில்.. காலைலயே ஸ்பீச்.. காந்தி தீவிரவாதின்னுட்டு" "உண்மைதான் கண்ணா. காந்தி தீவிரமா அகிம்சை பழகியவர். எதிலுமே தீவிரமா இருக்கறவன் தீவிரவாதிதானே. அதான் தீவிரவாதத்த ஒடுக்கறதுக்காக அவருக்கு சாத்வீகமா முக்தி கொடுத்த கோட்ஸே ஒரு மிதவாதி."  "துப்பாக்கி ஏந்திய சாத்வீகமான மிதவாதி! சிவ சம்போ. தல சுத்துதுமா.. அப்போ இந்த இலக்கியத்துல தீவிரமா இருக்கறவங்கெல்லாம்?” “நிச்சயம் தீவிரவாதிகள்!” “ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இவங்

எளிமையின் கம்பீரம்

படம்
என்னுடைய ஆற்றலுக்கான ஊற்றுக்கண்களில் ஒருவரான "ஜோ டி குருஸ்" அண்ணனுக்குப் பிறந்த நாள்.  நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னைப் புத்தக விழாவில்தான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன். வாசு அறிமுகம் செய்துவைத்து என்னுடைய சிறுகதைத் தொகுப்பை அவருக்கு வழங்கினார். "கண்டிப்பாக வாசித்துவிட்டுச் சொல்கிறேன், தம்பி" என்று கூறினார். இதே போன்று அங்கு வந்த பல எழுத்தாளர்களுக்கும் புத்தகத்தைக் கொடுத்தோம். எல்லோரும் அதையே சொன்னார்கள். ஆனால் இரண்டு வாரங்களில் அண்ணனிடமிருந்து ஒரு கடிதம். "தம்பி, உங்கள் 'அம்மாவின் தேன்குழல்' சிறுகதையைப் பற்றி பேச வேண்டும். அழைக்கவும்." என்று கைப்பேசி எண்ணைத் தந்திருந்தார். அதே தினம் நண்பன் கார்த்திக் புகழேந்தியிடமிருந்து ஒரு அழைப்பு. "நண்பா, ஜோ டி குருஸ் அண்ணன் உங்கள் படைப்பைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். உங்களுடன் பேச விரும்புகிறார். பேசுங்கள்" என்று கூறினார். அப்போது நான் சென்னையில் இருந்தேன். நேரிலேயே சந்திக்கலாம் என்று அவரது அலுவலகத்துக்கே போய்விட்டேன். அவருக்கே உரித்தான புன்னகையுடன் இருக்கையிலிருந்து எழுந

கண்ணனுக்கு உபதேசம்

படம்
சிறுவயதில் கண்ணனாக ;-) டின்னிட்டஸ் அரக்கன் அவ்வப்போது தன் வேலையைக் காட்டுவான். நேற்று நள்ளிரவு வரை உறக்கமில்லை. இரண்டு வாரங்களாகவே இந்த நிலைதான். எப்படியோ உறங்கிவிட்டேன். கனவில் கண்ணன் வந்தான். கனவிலும் உறங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று "பூம்ம்ம்ம்ம்" என்று டின்னிட்டஸ் சத்தம். கண் விழித்துப் பார்த்தால் கண்ணன் என் காலருகே அமர்ந்திருந்தான்.  "கண்ணா, இது என்ன விளையாட்டு? கடவுள் என் காலருகே அமர்வதா?" "ஏன் இப்படிப் பதறுவதுபோல் நடிக்கிறாய்? உனக்குத்தான் இந்தக் கால், கை பாசாங்கெல்லாம் பிடிக்காதே. கதவு இந்தப் புறம் இருக்கிறது. நீ பாட்டுக்கு எழுந்து என்னைப் பார்க்காமல் சென்றுவிட்டால்? அதான் இங்கு அமர்ந்துகொண்டிருக்கிறேன்" "நீ துரியோதனுனுக்கு செய்த அநியாயம் உனக்கே திரும்பிவிடுமோ என்று அஞ்சுகிறாய். அது சரி. கர்ம வினையைப் பற்றி உனக்கு நான் சொல்லித்தர வேண்டுமா என்ன? ஆனால், கண்ணா! நான் ஒரு சாமான்யன். நீயோ கடவுள். என்னிடமிருந்து நீ பெறுவதற்கு என்ன இருக்கிறது" "அட போப்பா. கடவுள் மனிதனைக் காப்பாற்றியது அந்தக் காலம். இது மனிதர்கள் சக மனிதர்க

அலாவுதீனும் பூதமும்

படம்
"அலாவுதீன்" திரைப்படத்தை ஹாஸல்ட் நகரில் ஒரு 4Dx தியேட்டரில் பார்த்தோம். என்னவொரு வித்தியாசமான அனுபவம். கேமரா செல்லும் திசையிலெல்லாம் நம் இருக்கையும் நகர்கிறது. அரேபியாவின் நறுமணங்களைப் பற்றிய பாடல் வரிகள் வரும்போது உண்மையிலேயே நறுமணம் தெளிக்கப்படுகிறது. குகைக்குள் அலாவுதீன் விழுந்து உருண்டு ஓடி எழும்போது நம்மையும் அதையெல்லாம் செய்யவைக்கிறது இருக்கை. அலாவுதீனும் இளவரசியும் மாயக் கம்பளத்தில் அருவி மீது பறக்கும்போது நம் மீதும் சாரல் தெறிக்கிறது. காற்று வீசும் போது நமக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களின் கூந்தல் பறக்கிறது. அரங்குக்குள் மின்னல் வெட்டுகிறது. மழை பொழிகிறது. அடுத்தமுறை திரையரங்குக்குப் போகும்போது குடையை எடுத்துச் செல்ல வேண்டும். படம் முடிந்த பிறகு, என் மகனுக்கு அரங்கை விட்டு வெளியே வர மனமில்லை. இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். அரேபியாவுக்கே குடியேறிவிடலாமா என்கிறான். இன்னும் கொஞ்ச நாளைக்கு வாண்டுகளெல்லாம் வில் ஸ்மித் பின்னால் ஓடப் போகிறது. இப்போதைக்கு அவர்தான் சாயின் ஆதர்ச நாயகன்.  அவன் பூதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, "அப்பா நயோமி ஸ்காட்டைத்

வாசிப்புக்கு நேரமில்லை

"வாசிப்பு" தொடர்பாக வினா எழுப்பிய நண்பர் ஒருவருக்கு வாட்சேப் குழு ஒன்றில் எழுதிய பதில்: எழுத்தில் நான் கடைஞன். ஒரு மாணவன். அவ்வளவே. ஆனால், ஒரு வாசகன் என்பதை பெருமையுடன் உரக்கச் சொல்லமுடியும். என்னுடைய எழுத்து மட்டுமல்ல. நண்பர்களும் அவர்தம் பிள்ளைகளும் பலதரப்பட்ட நூல்களையும் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" மனநிலை. அதன் காரணமாகவே அறிஞர்களைப் பற்றியும் அவர்தம் நூல்களைப் பற்றியும் நான் அதிகமாக குறிப்பிடுவது. உண்மையில் என்னுடைய சிற்றறிவைக் கடந்து மேதைகளை நீங்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா. நூல்களை வெறுமனே அறிமுகப்படுத்தாமல், அதில் என்னுடைய அனுபவத்தையும் சேர்க்கும்போது அதில் நம்பகத்தன்மை கூடுகிறது.  என்னுடைய பார்வையும் நீ கூறிய அதே "நேரத்தின்" மீதே விழுகிறது. நேரமும், கவனமும் வாசிப்புக்கு மட்டுமல்ல, நாம் செய்யும் எந்தக் கலைக்கும், தொழிலுக்கும் அவசியமானது. நேரமும் கடவுளும் ஒன்றுதான். இருக்கிறது என்றால் இருக்கிறது. இல்லை என்றால் இல்லை. எனவே இது நேரம் சார்ந்த பிரச்சினை இல்லை. நேரமின்மை என்பது ஒரு அறிகுறி

சாமான்யர்களின் பக்தியும் கடவுளின் இரட்சகர்களும்

மனிதர்களுக்கு மதம் பிடித்துவிட்டது. அவரவர்க்கு அவரவர் மதம் பிடித்திருக்கிறது. எனக்கு மதம் பிடிக்கவில்லை. நான் க டவுளைவிட மனிதனை நேசிக்கிறேன். அவன் கடவுளை நேசிக்கிறானா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை. எந்தக் கடவுள் என்பதில் சுத்தமாக நாட்டமில்லை. "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்" என்றான் பாரதி. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அவரவர் அவநம்பிக்கையும் அவரவர்க்கே. அவரவர் தமதமது அறிவறி வகைவகை. மற்றோரின் நம்பிக்கையைச் சிதைப்பதை நான் விரும்புவதில்லை. அது மூட நம்பிக்கையாயிருப்பினும்கூட. உலகில் எத்தனையோ மூடத்தனங்கள். இதில் கடவுள் சார்ந்த விஷயங்கள் மட்டுமே மூடத்தனம் என்று கூறுவது பகுத்தறிவும் ஆகாது. உளவியல் அறிந்தவன் என்கிற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். எனக்கு ஒன்று தேவையில்லை என்பதால் மற்றவர்களுக்கும் அது தேவைப்படக்கூடாது என்று எண்ணுவது அறிவீனம். இந்த உலகம் அற்புதமானது; பிரம்மாண்டமானது. இங்கு எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது.  என்னுடைய அம்மாவும், மாமாவும் வாட்சேப்பில் தினமும் கடவுளர் படங்களை அனுப்புகிறார்கள். அதற்கு நன்றிகூட சொல்வேன். நம்மை சில ஜீவன்கள் நினைவில் வைத்

அறப்போர்

இந்தப் பதிவு "அறப்போர் இயக்கம்" பற்றியதல்ல. ஆனாலும் அவர்களைப் பற்றி குறிப்பிடவேண்டிய அவசியம் இருக்கிறது. அறப்போர் இயக்கம் மிகவும் சிறப்பாக அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் அம்பலப்படுத்தி வருகிறது. உண்மையில் பாராட்டப்படவேண்டிய முயற்சி அது. என்னுடைய கல்லூரி நண்பன் மோகன் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். தேசத்தின் மீது மிகுந்த அக்கறையும் காதலும் கொண்ட நண்பன். "நீங்கள் பெல்ஜியத்திலிருந்து எப்போது இந்தியாவுக்கு வரப் போகிறீர்கள்?" என்று நல்லெண்ணத்தோடு விமர்சிக்கும் நண்பன்.  ஆனால், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் எதிர்த்து என்ன பயன்? நரிக்கூட்டத்தின் தலைவன் இன்னொரு நரியாகத்தானே இருக்க முடியும். சிங்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். எல்லோரும் அவரவர் அளவில் சிறப்பாக, வெகுஜன சினிமா மொழியில் சொல்வதானால், தரமாக ஊழல் செய்கிறார்கள். கொஞ்சம் செய்தவன் அதைவிட அதிகமாகச் செய்தவனைக் கேள்வி கேட்கிறான். உண்மையில் முதலில் அறப்போர் புரிய வேண்டியது மக்களை எதிர்த்தே என்பதே என்னுடைய கருத்து. மக்கள் என்பதில் அனைவரும் அடக்கம். இது பற்றி மோகனுடன் பேசிக்கொண்டிருக்க

நானாகவே நான்

படம்
'வாழ்க்கையே போர்க்களம்' புளித்துப் போனதொரு வாசகம் போர்க்களங்களைச் சந்திப்பதில்  எனக்கு எந்தவித அச்சமுமில்லை என் யுத்திகளை என்னிடமிருந்து பறித்துக்கொள்ளாத வரை என் கவசங்களை என்னிடமிருந்து பிடுங்கி எறியாத வரை நீங்கள் கண்டடைந்த யுத்திகள் ஆகச் சிறந்தவைகளாகவே இருக்கட்டும் நீங்கள் வைத்திருக்கும் கவசம் வலிமையானதாகவே இருக்கட்டும் என் யுத்தியே எனக்குச் சரியானதென்று  என் கவசமே எனக்குப் பொருத்தமானதென்று நான் பூரணமாக நம்புகிறேன் உங்கள் ஆகச் சிறந்த யுத்தியைவிட உங்கள் கவசத்தின் வலிமையைவிட என் நம்பிக்கையின் வலிமை என்னைக் காக்கும் காக்கவில்லையெனிலும் என் யுத்தியினால் நான் அடைந்த தோல்விகள் ஒரு வகையில் எனக்கு வெற்றிகளே உண்மையில் வெற்றி தோல்விகளில் எனக்கு நம்பிக்கையில்லை வாழ்வதில் மட்டுமே - அதில் சுயமே ஜெயம். போலச் செய்தல் அவம் போலச் செய்தல் சலிப்பு உங்கள் கனவுகள் உங்களுக்கு எப்படியோ அப்படியேதான் எனக்கு என் கனவுகள் இவளுக்கு இவள் கனவுகள் அவனுக்கு அவன் கனவுகள் ஒருவனுக்குப் புகழ் பெருமை சாதனை இன்னொருவனுக்கு நகை வேறொருவனுக்கு நிலபுலம் மற்றொருவனுக்குக் கடவுள் காமம் காசு கார் என்று ஒவ்வொருவனுக்

ஆதி அகதி

படம்
நாடிலான் வீடிலான் உடுப்பிலான் உறவிலான் பண்பிலான் பாங்கிலான் அன்போ ஆத்திரமோ அளவில் அதிகம் அவனிடம் அலங்கோலம் அவன் கோலம் பிணக்காட்டில் பித்தாட்டம் திருவோட்டில் உணவுப்பண்டம் அந்நாளில் அவன் பெயர் சிவனென்றார் பின்னாளில் ஹிப்பி என்றார் இந்நாளில் அகதி என்பார் உலகத்தின் ஆதி ஹிப்பி அவனேதான் உலகத்தின் ஆதி அகதி சிவனேதான் உலகத்தின் ஆதி அகதி • நண்பன் எல் மெஹ்டியின் முடி திருத்தகத்தில் எழுதியது.

இருமை என்னும் இருண்மை

இந்துத்துவர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அத்தனை வல்லவர்களும் தங்களை எதிர்த்து நிற்கும் பொது எதிரிகளுக்கு அவர்களே வைத்திருக்கும் பெயர் - "நடுநிலை நக்கிகள்". நக்கிகள். ஆகா! எத்தனைக் கருத்தாழம் மிக்கச் சொல்! "இளம் எழுத்தாளர்” பெருமக்கள் பலரும் இதைப் பலமுறை பயன்படுத்தி தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும், தமிழ் மொழியின் நீள, அகல, ஆழத்தையும் நெஞ்சை நிமிர்த்தி உலகுக்குப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள்தான் இன்றைய தமிழ் இளைஞர்களை வழிநடத்தி க்கொண்டிருப்பவர்கள். வாழ்க இவர்தம் சமூகத்தொண்டு! வாழ்க தமிழ்!  "ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்" என்பதல்ல நடுவுநிலைமை. ஆற்றில் குதித்து நீந்திக் குளிக்கவேண்டிய நேரத்தில் களிப்புற்றிருக்கவும் தெரியவேண்டும், அதே சமயம் அது சீறிப் பாய்ந்து வரும்போது அணை கட்டித் தடுக்கவும் துணிவு வேண்டும். நடுவுநிலைமை என்பது ஒருவித தொடர் செயல்பாடு. சமூகத்து நிகழ்வுகளை தொடர்ந்து பகுப்பாய்வு செய்து மெய்ப்பொருள் காண முயன்றுகொண்டே இருப்பது அது. "வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்" என்று ஜெயகாந்தன் சொன்ன அந்த நேரத்த

சான்றோர்களும் சாமான்யர்களும் இடையே இலக்கியவாதிகளும்

சில நாட்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் லூவன் நகர மையத்திலுள்ள உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஒரு நண்பர், “இலக்கியப் புத்தகங்களை எதற்கு வாசிக்க வேண்டும், மாதவன்? இலக்கியவாதிகள் செய்வதையெல்லாம் பார்ப்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதுவும் அரசியலில் இருக்கும் இலக்கியவாதிகளின் அயோக்கியத்தனங்களைப் பார்க்கும்போது, இவர்களிடமிருந்து எனக்கு கற்றுக் கொள்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.” என்று சற்ற ு கோபமாகவே கூறினார். அந்த கோபத்தில் இருந்த அவரது நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பற்றி அன்றைக்கு நீண்ட நேரம் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன். தமிழில் “சான்றோர்” என்று ஒரு சொல் இருக்கிறது. கிருஷ்ணகிரியில் ஒருமுறை கவிஞர் பெருமாள் ராசு ஐயா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது “சான்றோன் என்பவன் பிறருக்குச் சான்றாக வாழ்பவன்” என்று பொருள் விளக்கம் தந்தார். என்னளவில் இலக்கியவாதி என்பவன் நிச்சயம் சான்றோன் அல்ல. அவன் வெறும் மனிதன். திறமை வாய்ந்த மனிதன். எழுத்துத் தொழில்நுட்பம் தெரிந்தவன். மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவன். இவை இரண்டைய