இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒப்புதல் வாக்குமூலம்

கவிதை ஒரு பெகாஸஸ் குதிரை அதன் மீது லாவகமாகப் பாய்ந்தேறி எண்ணங்களைத் துரத்திச் செல்லும் வித்தை அறிந்தவன் நானில்லை  தானாகவே தேடி வந்து முன் விழும் எண்ணப் பாறைகளுக்கு உருக்கொடுக்கும் சிற்பியுமில்லை  பேராற்றலுடன் சொற்களின் பின் ஓடி நொடியும் ஓட்டக்காரனுமில்லை  கவிஞனாவது என் இலக்கும் இல்லை என் கவிதைகளில் இலக்கணத்தைத் தேடுகிறீர்கள் என் கவிதைகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டுகிறீர்கள் என் கவிதைகளின் வகைமை என்னவென்று அலசுகிறீர்கள் என் கவிதைகளின் தரத்தை அளவிடுகிறீர்கள் என் கவிதைகளை பிறர் கவிதைகளுடன் ஒப்பிடுகிறீர்கள் என் கவிதைகளைப் பாராட்டுகிறீர்கள் என் கவிதைகளைத் தூற்றுகிறீர்கள்  இனியும் இவையெல்லாம் வேண்டாம் என் கவிதைகளைப் பொருட்படுத்தாதீர்கள் ஏனெனில் அவை கவிதைகளே இல்லை.

வேறு வழியில்லை

என்னைப் பற்றிய உண்மைகளை விடவும்  என்னைப் பற்றிய பொய்கள் என்னைச் சார்ந்தவர்களுக்கு  மிகவும் பிடிக்கிறது ஏனெனில் என்னைப் பற்றிய பொய்கள்  அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப் போவதாக இருக்கின்றன என்னைப் பற்றிய பொய்கள் அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கின்றன என்னைப் பற்றிய பொய்கள் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன இப்படி எதுவாக இல்லாவிட்டாலும் என்னைப் பற்றிய பொய்கள் வளைக்கக் கூடியதாக இருக்கின்றன தங்களுக்கு வேண்டியது போல் வளைத்துக் கொள்ள முடிகிறது அப்படி வளைக்கும் முயற்சியில் என்னைப் பற்றிய உண்மைகளின் அழகை சிறிது சிதைக்கவும் தயங்குவதில்லை அவர்கள் என்னைப் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் நிராகரிக்கிறார்கள் வெறுக்கிறார்கள் சிதைக்கிறார்கள் முடிவில் விலகி ஓடிச் சென்று விடுகிறார்கள் ஒரு கட்டத்தில் என்னைப் பற்றிய பொய்களே என்னைப் பற்றிய உண்மைகளாகவும் ஆகிவிடுகின்றன தனிமரமாய் இந்த வேடிக்கைகளை அவை தரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னைப் பற்றிய உண்மைகளுக்கு.

நான் இல்லாத சமயம்..

அன்பே, நான் இல்லாத சமயம் என்னைப் பற்றி  தேவதை என்றொருவன் சொல்லக்கூடும்  போக்கிரி என்று இன்னொருவனும் மடையன் என்று மற்றொருவனும் ஏமாற்றுப் பேர்வழி என்று எவனோ ஒருவனும் பித்தன் சித்தன் சாத்தான் என்று பல பேரும் பலவிதமாய் பேசக்கூடும் அத்தனையும் உண்மை! நம்புவாயாக.. ‘உன்னைப் பற்றி நீயே சொல்’ என்று கேட்பாயானால் 'நான் ஒரு நிலைக்கண்ணாடியாய் வாழ்ந்தேன்' என்பேன்.

அங்கு மட்டும்

'எங்கும் கடவுளே!'  என்று கூறும் எந்த மதத்தவனும்  வேற்று மத ஆலயத்துக்குச்  செல்ல மறுப்பதன் மூலம்  அங்கீகரிக்கிறான் - அங்கு மட்டும்  அவன் கடவுள் இல்லை  என்பதை.

புத்தனின் போதி

படம்
சளைக்காமல் சாகசம் பாடி  செவிக்குருதி யாசிக்கிறது மூட பக்தி வாளைச் சுழற்றியபடி  வம்பிழுக்க வருகிறது  மூர்க்க புத்தி  துளிச் சலனமின்றி  சாவதானமாக நிற்கிறது   புத்தனின்  போதி . 

மொத்தக் குருதியாலும்..

படம்
ஜெ யமோகனின் " இந்த இரவு இத்தனை நீளமானதென்று... " என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு.  அ ன்பு ஜெயமோகன், "தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய  "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.    2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்...

ஈரம்

கடந்து போகும் மேகங்கள் அத்தனையும் பொழிவதில்லை நீருடை மேகங்கள் கூடி நின்று ஆர்ப்பரித்து ஈரமீந்துவிட்டுப் போகின்றன வறட்டு மேகங்கள் வெறுத்து விலகிச் சென்று விடுகின்றன ஆயினும் அவைதம் நிழலால் நிலத்தை நனைத்துவிட்டே போகின்றன நீர் மேகமோ நிழல் மேகமோ நிலத்தின் ஈரம் இரண்டுக்கும்தான்.

வன்முறை

என்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - தாவரங்கள் எனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி எனக்குக் கவலையில்லை உன்னுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன - கால்நடைகள் உனக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி உனக்குக் கவலையில்லை அவனுடைய வன்முறையை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் - நீயும் நானும் அவனுக்குத்தான் அது கேட்பதில்லை கேட்டாலும் அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை

வெகுதொலைவில்..

அது ஒரு நதிப்பிரவாகம் . அதன் கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த   இலையென விழுந்தேன் .. அடித்துச் சென்றது பிரவாகம் . இருப்பினும் எப்படியோ சுழிக்குள் சிக்காமல்   சிதையாமல் மூழ்காமல் லாவகமாய் அதன்மேலே தவழ்ந்து சென்று வேறேதோவோர் கரையில்   ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் - ' என்னை விட்டு நான் வெகுதொலைவு வந்துவிட்டதை !'. ( எண்ணத்தூறல் - 6 )

மாதவன் இளங்கோ கவிதைகள்

படம்
பேரமைதி [ இணைப்பு ]                                                                     ------------------ மர்ம பாலம்  [ இணைப்பு ]                                                                     ------------------ அமைதிகளின் சத்தங்கள்.. [ இணைப்பு ]                                                                       ------------------ என் இனிய சக இந்தியனே... [ இணைப்பு ]         ...

தனிமை

ஐநூறு பேரமர்ந்துண்ணும்   பேருண்டிச்சாலை அது .   அத்தனை நாற்காலிகளும்   ஆக்கிரமிக்கப்பட்டு   இரைச்சல்களுக்கிடையே   உணவருந்துகையிலும்   தனிமையையும்   வெறுமையையும்   உணர்கிறேன்   ஆத்ம நண்பர்கள்   பல ஆயிரம் மைல்களுக்கு   அப்பால் இருப்பதால் ! ( எண்ணத்தூறல் - 2)

(என்னைக்) கொல்ல நினைக்கும் எவனோ ஒருவனுக்கு..

படம்
எவனோ ஒருவன் என்னை க்  கொலை செய்ய ஏங்குகிறான் ஏழை செல்வந்தனாக ஏங்குவது போல செல்வந்தன் மேலும் செல்வந்தனாக ஏங்குவது போல எழுத்தாளன் அங்கீகாரத்திற்கு ஏங்குவது போல குழந்தைகள் பொம்மைகளுக்கு ஏங்குவது போல சிங்கம் மானுக்கு ஏங்குவது போல அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான் ஏக்கம் மட்டுமல்ல; துடிக்கிறான்; சிந்திக்கிறான்; திட்டமிடுகிறான்; அத்தனையும் ஒளிந்துகொண்டே செய்கிறான் அவனுக்கு என்னை தெரியாது எனக்கும் அவனைத் தெரியாது இருப்பினும் அவன் என்னைக் கொன்றுவிட ஏங்குகிறான் இன்னும் சொல்லப்போனால், அவன் கொன்றுவிடத் துடிக்கும் மனிதர்களின் பட்டியலில் நான் இருப்பது கூட அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவன் என்னை தாராளாமாகக் கொல்லலாம்.. அதற்கான உரிமையை நான் அவனுக்குத் தருகிறேன் எனினும் அவனுக்கு நான் சொல்வதற்கென்று சில விஷயங்கள் இருக்கின்றன.. "என்னைக் கொன்றுவிடத் துடிக்கும் எவனோ ஒருவனே, நீ என்னை தாராளமாகக் கொல்லலாம் அதற்கான உரிமையை நானுனக்குத் தருகிறேன் எனக்குத் தெரியும் - நீ என் இசைவிற்கோ நீ என் அனுமதிக்கோ காத்திருக்காதவன் அதுபற்றி உனக்குக் கவல...

பேரமைதி

படம்
கூடு நோக்கிப் பறந்து சென்ற பறவையொன்றின் சிறகு ஒன்று முறிந்து விட, தடம்மாறி ஒற்றைச் சிறகோடு வெகுநேரம் போராடி வலுக்குன்றி பறவையது கீழே விழ, காற்றில் அதன் கால்தடங்களைத் தேடித் திரிந்தலையும் பறவைக்கூட்டங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை - அது வீழ்ந்த இடம் ஒரு முதலையின் வாய் என்றும்; அவைகளுக்கு முறிந்த சிறகு மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும்; வீழ்ந்த மறுகணமே விழுங்கிவிட்டு சலனமின்றி உறங்கிக் கிடக்கும் முதலையின் அமைதி - அந்த மகாசமுத்திரத்தின் பேரமைதி!

வாலி..

படம்
காலன் பறித்த கால் ......................................... உயிரைப் பறித்தல்லவோ பழக்கம் உனக்கு? அட, காலா! என் தமிழ்த்தாயின் ஒற்றைக் காலை வெட்டிச் சென்றதேனோ? வலி! வலி! வலி! நெஞ்சில் 'வாலி'! வாலி! வாலி! வாலி! நெஞ்சில் 'வலி'!

அமைதிகளின் சத்தங்கள்..

படம்
இரைச்சல் விழுங்கிய இசையின் அமைதி.. பெரும்கூட்டத்தில் சிக்குண்ட தனிமைவிரும்பியின் அமைதி.. மூடத்தனங்களுக்கு இடையே மேதைமையின் அமைதி.. இருளுக்குள் ஒளிந்துகொண்ட ஒளியின் அமைதி.. ஆணவச்செருக்கு அதிகார போதைகளுக்கிடையே அடக்கமானவனின் அமைதி.. உயர்குலத்து சிரிப்புகளுக்கிடையே ஒடுக்கப்பட்டவனின் அமைதி.. துரோகிகளுக்கு இடையே தூயநட்பின் அமைதி.. பொய்புரட்டுகளுக்குள் புதையுண்ட உண்மையின் அமைதி.. குறைகுடங்களின் தளும்பல்களுக்கிடையே நிறைகுடத்தின் அமைதி.. இயந்திரங்களுக்கிடையே இயற்கையின் பேரமைதி.. வெட்டிப்பேச்சுகளுக்கிடையே உழைப்பின் அமைதி.. ஆடம்பர பகட்டு வாழ்க்கையின் இடையே எளிமையின் அமைதி .. பிற சத்தங்கள் அனைத்துமென் செவிப்பறையை கிழித்து செவிடனாக்கிவிட அத்தனை அமைதிகளின் சத்தங்களும் தெளிவாகக் கேட்கத்தொடங்கின.. 'அமைதியடைந்தேன் நான்'! (எண்ணத்தூறல்)

மர்ம பாலம்

படம்
அது ஒரு நீண்ட பாலம். அவனொரு விந்தை மனிதன். பாலத்தை கடக்க அடியெடுத்து வைத்த ஒருவனுக்காய் மகிழ்வுற்றான் - வாழ்த்தினான். பாலத்தை கடந்து விலகிப் போன ஒருவனுக்காய் துயருற்றான் - பிரார்த்தித்தான். பாலத்தின் நடுவே கடக்கவியலாமல் அயர்வுற்று விடைபெற்ற வேறொருவனுக்காய் மீளாத்துயருற்றான். பிரார்த்தித்தான். அவனும் அதே பாலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் நின்றுகொண்டு தெளிவாகத் தெரியுமந்த பாலத்தின் மறுமுனைக்கும் தனக்குமான தூரத்திற்கு எதிர்காலம் எனப்பெயர் வைத்து, அது வருவதற்குள் முடித்துவிட ஒரு நீண்ட பட்டியலொன்றை தயாரித்தான். எண்ணற்ற கனவுகளும் எண்ணற்ற கவலைகளும் எண்ணற்ற எதிர்பார்ப்புகளும் எண்ணற்ற ஏக்கங்களும் எண்ணற்ற திட்டங்களும் எண்ணற்ற குறிக்கோள்களும் நிறைந்த பட்டியல் அது. பாரம் நிறைந்த அந்தப் பட்டியலை தன் தலையில் சுமந்துகொண்டு பாலத்தின் மறுமுனை நோக்கிய தன்னுடைய பயணத்திற்கு வாழ்க்கை என்றொரு பெயர் வைத்தான். எண்ணற்ற உறவுகளும் எண்ணற்ற துரோகங்களும் எண்ணற்ற மகிழ்ச்சிகளும் எண்ணற்ற துயரங்களும் எண்ணற்ற சாதனைகளும் எண்ணற்ற சோதனைகளும் எண்ணற்ற அனுபவங்களும் எண்ணற்ற பாடங்களும் ந...