இடுகைகள்

பெல்ஜியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுமுறைத் தேர்வு முரண்பாடு : "குறைவே நிறைவு"

படம்
எ ழுத்தாளர் ஜெயமோகன் பேலியோ உணவுமுறைப் பற்றி எழுதியிருந்த கட்டுரைக்கு என்னுடைய கருத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் குறிப்பிட்டிருந்த இரத்தவகை உணவுமுறையைப் பற்றி நியாண்டர் செல்வன் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து மீண்டும் நான் ஒரு கடிதம் அனுப்பினேன். அவருடைய தளத்தில் கடிதங்கள் பிரசுரிக்கப்படுவதில் இருக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. துறை வல்லுநர்களிடமே உடனடியாகத் தொடர் பு கிடைத்துவிடுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய டின்னிட்டஸ் பிரச்சினையைப் பற்றி அவருக்குக் கடிதம் எழுதியபோதே இதை உணர்ந்திருக்கிறேன். யோகம், ஆயுர்வேதம், மருத்துவம் என்று பல்துறை வல்லுநர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்தது. டின்னிட்டஸ் பிரச்னையில் உழன்றுகொண்டிருக்கும் பல வாசகர்களிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. அவர்களில் பலருடன் இன்றளவும் தொடர்பிலிருக்கிறேன்; அவ்வப்போது நலம் விசாரித்தும் வருகிறேன். இந்தியாவில் வசித்து வரும் ருவாண்டா தேசத்துப் பெண்ணொருத்தி என்னை அண்ணனாகவே பார்க்கிறாள். இது டி...

குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் " ஹோட்டல் காஸ்ஆனஸ் ".    ஹோட்டல் காஸானஸ் "ஆனஸ்" என்பது ஆசனவாயேதான் (Anus). "என்னக் கொடுமை இது?" என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. "மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது" என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் 'யூப் ஃபன் லீஸ்ஹௌட்' என்கிற டச்சு வடிவமைப்பாளர்.  விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். 'குதவ...

ஒரு செரெண்டிபிட்டி அனுபவமும் சுஜாதாவும்

இ ந்த வாரம் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளிலிருந்து பேச்சாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிலிருந்து மொத்தம் எட்டு பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்களும்கூட பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வேறு. கருத்தரங்குக்குச் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஒரு பிரெஞ்சுப் பெண்மணி எங்களைக் கதிகலங்க வைத்துவிட்டார். அவருக்குப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்டிரு ந்த தலைப்பு "அலுவலகங்களை புதுமையாக வடிவமைத்து நவீனப்படுத்துவதின் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது எப்படி?" என்பது. அவருடைய மேடைப் பிரவேசமே சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கருப்பு நீள் அங்கி அணிந்துக்கொண்டு, கையில் ஒரு ரோபோவோடு மேடையேறிய அந்தப் பெண்மணி, பிரான்சு நாட்டின் கட்டிடக்கலையைப் பற்றி பேச ஆரம்பித்தார். நெப்போலியனின் அரண்மனையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவரது அலுவலகங்கள், பதினான்காம் லூயி கட்டிய வெர்சாய் அரண்மனை (Chateau de Ve...

ஆனந்தம் தரும் ஆக்சிஜன் தொழிற்சாலை

படம்
கோ டையில் ஒருநாள் தோட்டத்தில் நிறைய வேலை இருந்தது. இந்தியத் தம்பி ஒருவரும் உடனிருந்து உதவி செய்தார். அவர் இல்லையென்றால் அன்றைக்கு முடிப்பதாக இருந்த வேலையை செய்து முடித்திருக்க முடியாது. பிறகு தானும் வீட்டுக்குள்ளேயே காய்கறிகளை பயிரிட விரும்புகிறேன் என்று கூறினார். உடனே கடைக்குச் சென்று இரண்டு நீளமான பூந்தொட்டிகள் வாங்கி வந்தோம். சிவப்பு முள்ளங்கி விதைகளையும், கொஞ்சம் பூச்சட்டி மண்ணையும் கொடுத்து அனுப்பினேன்.  சிறிது நாட்கள் கழித்து, இந்தப் புகைப்படத்தை 'ரேடிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்' என்கிற குதூகல குறுஞ்செய்தியோடு வாட்ஸாப்பில் பகிர்ந்து நன்றி தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை பார்ப்பதற்கே பேரானந்தமாக இருந்தது. நல்ல விஷயங்களைப் பகிர்வதன் நோக்கமே இதுதானே. நமக்கு நல்லது என்று தோன்றுவனவற்றை நாமே முதலில் செய்து, பரீட்சித்துப் பார்த்து, திரும்பத் திரும்ப சளைக்காமல் அவற்றின் பலன்களை பிறருக்கு பகிர்ந்துகொண்டே இருப்பதன் மூலமாக ஒரு மாற்றத்தை நிச்சயம் உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன். என் மகனிடம், 'நீ ஆப்பிள் சாப்பிடுவது நல்லது' என்றோ, 'புத்தகம் வாசி' என்றோ நாங்கள் ...

ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்..

படம்
க டந்த வருடம் கோடை விடுமுறைக்கு தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத் தவிர. அவற்றிற்கு மட்டும் என்ன ஆனதோ? ஆனால், அவைகளிடம்தான் நானும் என் மகனும் அன்றாடம் மாலைவேளைகளில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குத் திரும்பியவுடன் முதலில் தோட்டத்திற்குத்தான் செல்வேன்.   'Hey Boys!' என்றுதான் அவர்களை அழைப்பேன். அவர்கள் வளர வளர அவர்களோடு நானும் என் மகனும் செல்ஃபியெல்லாம்  எடுத்திருக்கிறோம். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலையை பார்த்தவுடன் அனைவருமே வருத்தம் அடைந்தோம். 'My Boys!!' என்று சோக ஸ்மைலியோடு நண்பர்களுக்குச் செய்தி அனுப்பினேன். நண்பர்களுக்கும் காரணம் தெரியவில்லை. "தெரியவில்லை மேடி. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து நீரூற்றினோம். ஆனால் தக்காளிச் செடிகள் மட்டும் செத்துவிட்டது போல் தெரிகிற...

ஃப்ளோய்பெர்க் கோபுரம்

படம்
பெ ல்ஜியத்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் அறிந்திராத பல சுவாரசியமான இடங்கள் உள்ளன. அவற்றில் சில இடங்களைப் பற்றி நானே அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். வார இறுதி நாட்களில் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று வருவது என் வழக்கம். இவற்றுக்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், இவையும் என்னை வசீகரிக்கவே செய்கின்றன. பெல்கியம் நண்பர்களே அறிந்திராத ஆஃப்பீட் சுற்றுலா தளங்கள் இவை. அந்தப் பகுதிகளில் குடியிருப்பவர்களில்கூட ஒரு சிலர் மட்டுமே அவற்றின் சுவாரசியமான பின்னணி அறிந்திருப்பார்கள். Artwork of Vlooyberg by Jan Mennens சென்னையில் வசித்தபோது இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய நண்பர்களுக்கு நான்தான் சுற்றுலா வழிகாட்டி. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வேன். அதிசயம் என்னவென்றால் என்னை விட அவர்கள் சென்னையில் நிறைய இடங்களை தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த தக்ஷின் சித்ரா என்கின்ற ஒன்றெல்லாம் இருக்கிறது என்றே எனக்கு ஒரு பெல்ஜியம் நண்பர் சொல்லித்தான் தெரியும். சென்னை அடையாரிலுள்ள தியாசபிகல் சொசைட்டி, நான் மூன்று ஆண்டுகள் தங்கியிருந...

கடவுளைக் காண.. Reading between the lines..

படம்
ஞா யிறன்று மாலை பெல்கியத்தின் லிம்புர்க் மாகாணத்திலுள்ள பொர்க்லோன் என்கிற குறுநகருக்குச் சென்றிருந்தோம். லிம்புர்க் மாகாணத்தை பெல்கியத்திலேயே பழத் தோட்டங்கள் நிறைந்த வனப்பு மிகுந்த வளமான பகுதி என்று கூறலாம். இங்கு விளையும் பழங்கள் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வசந்த கால மாதங்களான மார்ச்சு மாதத்தில் தொடங்கி மேமாத இறுதி வரை ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் மரங்களில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறப் பூ க்கள் பூத்துக் குலுங்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதை என் மகன் மொழியில் கூறினால் உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும், 'அப்பா இந்த ப்ளேசை கட் பண்ணி கண்ணுக்குள்ள போட்டுக்கலாம் போல ப்யூடிபுளா இருக்கு பா' என்பான். லிம்புர்க் மாகாண பேரிக்காய்கள் ரஷ்யாவுக்கும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த வருடம் பெல்கிய பேரிக்காய்களுக்கு ரஷ்யா விதித்த தடையால் இங்குள்ள விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். பொர்க்லோன் நகருக்குச் சற்று வெளியே அமைந்த குன்றின் மீது 'Reading between the lines' என்று அழைக்கப்படும் ஒரு 'sea-through' தேவாலயத்தைக் கட்டியுள்...