இடுகைகள்

எழுத்தாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - வாசகர் சந்திப்பு காணொளி

படம்
ஐ ந்து வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். உண்மையிலேயே அது அவருடைய மின்னஞ்சல்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு அவநம்பிக்கை. கடிதம் என் கண்ணில் பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அதை அனுப்பி இருக்கிறார். நான்தான் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு கடிதம் எழுதியிருந்தார். சென்னைப் புத்தக விழாவில் எனக்கு அறிமுகமான நண்பன் இளங்கோ கனடாவில் வசித்து வருபவர். அவருடைய தமிழ் எழுத்து நடைக்கு நான் ரசிகன். இளங்கோவின் முகவரியைப் பெற்று அவருக்கு என்னுடைய புத்தகத்தை அனுப்பி வைத்து, "எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் இதைத் தர முடியுமா?" என்று கோரிக்கை வைத்தேன். "புத்தகம் வந்து சேர்ந்தது. நிச்சயம் அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது தருகிறேன்" என்று உறுதியளித்தார். அதன் பிறகு இளங்கோவிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. புத்தகம் அ.முத்துலிங்கத்தை சென்றடையும்; அவர் அதை வாசிப்பார் என்றெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பையும் நான் வைத்துக்கொள்ளவில்லை.. ஒரு காலத்தில் அவருடைய தளத்துக்குச் சென்று வாசிப்...

வேர் பிடித்த விளைநிலங்கள்

படம்
வே தாகமத்தில் பதிமூன்றாம் அதிகாரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகளைக் கடந்த வருடம் இங்கு பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பலரிடம் பலமுறை அதைப் பற்றி சொல்வதுண்டு. சொல்வதற்குக் காரணமும் உண்டு. பொதுவாகவே நான் சந்திக்கும் இளைஞர்கள் அத்தனைப் பேரிடமும் பாகுபாடின்றி அவர்களின் வளர்ச்சிக்காக என்னுடைய வழிகாட்டுதல்களை வழங்குவதுண்டு. கேட்பதற்குக் காதுள்ளவர்கள் கேட்கிறார்கள். அதில் சிலர் செயல்படுத்தவும் செய்கிறார்கள். மற்றவர்கள் காதுள்ளவர்களின் வளர்ச்சியைப் பார்த்துப் பொருமுகிறார்கள்.அத்தகைய அனுபவம் அண்மையில்கூடக் கிடைத்தது. ‘நெய்தலின் பிள்ளை’ ஜோ டி குருஸ் அண்ணனுடைய தன்வரலாற்று நூலான "வேர் பிடித்த விளைநிலங்கள்" தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் மேற்சொன்ன பதிமூன்றாம் அதிகாரத்து வரிகளிலிருந்தே நூலைத் தொடங்கி இருக்கிறார். எனக்கும் அண்ணனுக்குமான பந்தம் ஆத்மார்த்தமானது. அவரும் நானும் பல புள்ளிகளில் இணைந்திருப்பதாக உணர்ந்ததுண்டு. தற்போது இந்தப் பதிமூன்றாம் அதிகாரப் புள்ளியிலும். இன்னும் பல புள்ளிகள் என்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புலப்படுகிறது. நூலின் தொடக்க வர...

தீர்க்கதரிசனம்

இ ன்று அசோகமித்திரனின் நினைவுநாளில் அவருடைய "படைப்பாளிகள் உலகம்" வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக தற்செயலாக ப்ரியா இந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அதில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். "நிச்சயம் வாசிக்கவும்". இதை அவர் எழுதியது 1980-ஆம் ஆண்டு. கட்டுரைக்கு கிட்டத்தட்ட என் வயது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் என் நண்பர் பாபுவிடம், "We were better off with All India Radio" என்று கூறினேன். அது தவறு என்பது போல ிருக்கிறது இந்தக் கட்டுரை. நான் சமீபத்தில் எழுதியிருந்த "போதிதர்மரும் தங்கமீன்களும்" கட்டுரையில் வரும் ஒரு சில கருத்துக்களை அன்றே பதிவு செய்திருக்கிறார். காலங்கள் மாறிவிட்டது. கருத்து மாறவில்லை; மாறவேண்டியதில்லை. மாற்றம் வரவேண்டியது மனங்களில். எனவே இந்தக் கட்டுரையில் வாட்சேப், பேஸ்புக் போன்ற சில வார்த்தைகளைச் சேர்த்து மறுபிரசுரம் செய்து விடலாம். அதுவும் அந்தக் கடைசி வரி - “தீர்க்கதரிசனம்".  /..... ஒரு பிரமுகரின் ஒவ்வொரு அம்சத்தையும் உடனுக்குடன் அத்தாட்சியோடு உலகுக்குத் தெரிவி...

போதிதர்மரும் தங்கமீன்களும்

படம்
எ ன்னுடைய எட்டு வயது மகன் மாதம்தோறும் ஒன்றிரண்டு புத்தகங்கள் தவறாமல் வாசிக்கிறான். எந்த நேரமும் கதைகள், கட்டுரைகள், நாட்குறிப்பு, பாடல்கள், சொந்தக் கருத்தாக்கங்கள் என்று எந்நேரமும் எழுதிக்கொண்டு அவனொரு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். செய்யும் கலையில் லயித்திருக்கும் அஃதொரு ஆழ்ந்த தியானநிலை என்பதை ஒரு படைப்பாளியாக அறிவேன். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென்று என்னிடம் வந்து அவனுடைய கதைகளைப் புத்தகமாக்குவது பற்றிக் கேட்டான். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து, "நீயே அவருக்குக் கடிதம் எழுது.." என்று கூறினேன். அவனாகவே அவருக்குக் கடிதமும் எழுதிவிட்டான். அவரும் பெருந்தன்மையோடு அந்தக் கடிதத்தை  நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதை வாசித்து விட்டு பேராசிரியை லோகமாதேவி அவர்களிடமிருந்து என் மகனுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. அதில் இரண்டு, மூன்று இடங்களில் கடிதம் எழுதியதற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்குக் காரணம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று நான் முடிவெடுத்து ஒதுங்கியது. அவருக்...

காந்தியம் தோற்கும் இடங்கள்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான், என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னை காந்தியவாதியாக பாவித்தார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. வரலாற்றுப் புத்தகங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே. எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாகதான் இருந்தது; அவர்மீதான விமர்சனங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழு...

மொத்தக் குருதியாலும்..

படம்
ஜெ யமோகனின் " இந்த இரவு இத்தனை நீளமானதென்று... " என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு.  அ ன்பு ஜெயமோகன், "தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய  "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.    2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்...

சித்தி (Siddhi)

படம்
இ லக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் 'சிறுகதை'. இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் சிறுகதை என்றால் சிறிய கதை என்றே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடும். 'சிறுகதை என்றால் என்ன?' என்பதை பல இலக்கிய மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை ஓரளவுக்கு வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளும் பொழுதெல்லாம் "கல்லாதது உலகளவு" என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள். கடந்தமுறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள்.  வழக்கமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவேன். அதற்கென்றே தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கிவிடுவதுண்டு. ஏற்கனவே வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருந்ததால், அந்த முறை புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குப்  போகாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். "உங்களுக்காக நான் எடுத்த...

கலையில் மடிதல்

படம்
' ஓ ட்டன் துள்ளல்' நடனக் கலைஞரும், நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் எழுதியிருந்த " கலையில் மடிதல் " பதிவை நேற்று வாசித்தேன். ஓட்டன் துள்ளல் என்பது ஒரு தனிநபர் நடனக் கலை. நேரு இதை "ஏழைகளின் கதகளி" என்று வர்ணித்திருக்கிறார். கேரள மாநிலம் அவிட்டத்தூரில் ஒரு ஆலயத்தில் துள்ளல் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிர் துறந்திருக்கிறார் கீதானந்தன். அதைப் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிகளை வாசித்துவிட்டு, காணொளியையும் பாருங்கள். It gave me Goosebumps!  " ... நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார். அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. மேடையிலேயே விழுந்துவிடலாம். ஆனால் அந்த ஆட்டம் வடிவமுழுமை பெறவேண்டும் என அவர் நினைத்தார். கலைஞர்களுக்குரிய இயல்புகளில் ஒன்று தன் கலைவடிவின் ஒத்திசைவு, முழுமைக்கான அவர்...

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

படம்
த மிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று யாரேனும் என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் ' செல்லம்மாள் ' சிறுகதையைத்தான் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன். He is truly an unparalleled genius. மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கிய 'கடவுள் என்பவர் யார்?' என்று கேட்டால், நமக்கும் மேலான சக்தி என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் 'செல்லம்மாள்' கதையை எழுதியவர் நிச்சயம் அந்தக் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்.  புதுமைப்பித்தனே தான் எழுதிய 'காஞ்சனை' சிறுகதையில் தன்னை 'இரண்டாவது பிரம்மா' என்றும் 'நகல் பிரம்ம பரம்பரையின் கடைக்குட்டி' என்று அழைத்துக்கொள்கிறார். காஞ்சனை கதையை எழுதிய அதே வருடம் (1943) செல்லம்மாள் கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுதியது பிரம்மனாக இல்லாத பட்சத்தில், அந்த இரண்டாவது பிரம்மா உருவாக்கிய 'காஞ்சனை' பிசாசுதான் ஒருவேளை 'செல்லம்மாள்' கதையை எழுதியிருக்க வேண்டும்...

ஒரு செரெண்டிபிட்டி அனுபவமும் சுஜாதாவும்

இ ந்த வாரம் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளிலிருந்து பேச்சாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிலிருந்து மொத்தம் எட்டு பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்களும்கூட பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வேறு. கருத்தரங்குக்குச் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஒரு பிரெஞ்சுப் பெண்மணி எங்களைக் கதிகலங்க வைத்துவிட்டார். அவருக்குப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்டிரு ந்த தலைப்பு "அலுவலகங்களை புதுமையாக வடிவமைத்து நவீனப்படுத்துவதின் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது எப்படி?" என்பது. அவருடைய மேடைப் பிரவேசமே சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கருப்பு நீள் அங்கி அணிந்துக்கொண்டு, கையில் ஒரு ரோபோவோடு மேடையேறிய அந்தப் பெண்மணி, பிரான்சு நாட்டின் கட்டிடக்கலையைப் பற்றி பேச ஆரம்பித்தார். நெப்போலியனின் அரண்மனையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவரது அலுவலகங்கள், பதினான்காம் லூயி கட்டிய வெர்சாய் அரண்மனை (Chateau de Ve...

ஞாநி

படம்
ஞா நி யின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கொரு பேரிழப்பு. இதை ஒரு க்ளீஷாவாக சொல்லவில்லை. உண்மையிலேயே. நான் இந்தியா வந்திருந்த போது ஞாநியின் அழைப்பை ஏற்று அவர் இயக்கிய 'விசாரணை' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு, ஞாநி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான மகேந்திரனுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். "இவர் பெல்ஜியத்தில் இருக்கும் என்னுடைய நண்பர். இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தனையும் அருமை." என்று கூறிய போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள். தன் மகன் மனுஷ் நந்தனை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசுவது போல் இருக்கிறது அவருடைய உடல்மொழி.  அதன் பிறகு மகேந்திரன் அவர்களுக்கு என்னுடைய புத்தகத்தை வழங்கினார். அவரோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு பார்வை பார்த்து விட்டு, 'இதில் உங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள்!' என்று கூறியபோது, எனக்கு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்துவிட்டது. அடக்குவதற்கு சற்றுத் திணறித்தான் போனேன். ...