இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்பத்தை இசை யாழே

படம்
எ ன் வாழ்க்கையில் நான் மிகவும் பலவீனமாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று. உண்மையில் அதுபோன்ற பலவீனமான தருணங்கள்தான் இன்றைய என்னுடைய பலத்துக்கே காரணமாயிருக்கிறது.என்னுடைய  பலவீனத்தைக் கூட வெட்கமின்றியும் தயக்கமின்றியு ம் பேசும் இன்றைய துணிவுக்கும் அவையே காரணம். நூறு புத்தகங்கள் வாசிப்பதால் கிட்டும் ஞானத்தை ஒரு துன்பகர நிகழ்வு எளிதாக போதித்து விடும். அதே சமயம் என்னை அந்தத் தருணங்களில் தம் தோள்களில் தாங்கிப் பிடித்திருந்தவர்கள் இல்லாவிடில் இன்றைக்கு நான் ஏது? 'இன்றைய நான்' ஏது? அந்தத் தருணங்களையும், அந்த நல்மனங்களையும் நினைத்துப் பார்த்து என்னுடைய மீள்நினைவுகளை அவ்வப்போது எழுதி வருகிறேன். அவற்றில் சிலவற்றை அப்போதே பகிர்ந்துவிடுகிறேன். சிலவற்றை அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். பலவற்றை பகிராமல் கணினிக்குள்ளேயே பூட்டி வைத்து அதற்கான காலம் வரட்டும் என்று காத்திருக்கிறேன். அவற்றையெல்லா ம் தொகுத்து 'மீள்நினைவுகள்' என்று நூலாகவும் வெளியிடலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் பார்க்கலாம்.       என் வலிகளை தன் தோள்களில் தாங்கிப் பிடித்து பிரார்த்தித்த ஒரு சிறு

தீர்க்கதரிசனம்

இ ன்று அசோகமித்திரனின் நினைவுநாளில் அவருடைய "படைப்பாளிகள் உலகம்" வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக தற்செயலாக ப்ரியா இந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அதில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். "நிச்சயம் வாசிக்கவும்". இதை அவர் எழுதியது 1980-ஆம் ஆண்டு. கட்டுரைக்கு கிட்டத்தட்ட என் வயது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் என் நண்பர் பாபுவிடம், "We were better off with All India Radio" என்று கூறினேன். அது தவறு என்பது போல ிருக்கிறது இந்தக் கட்டுரை. நான் சமீபத்தில் எழுதியிருந்த "போதிதர்மரும் தங்கமீன்களும்" கட்டுரையில் வரும் ஒரு சில கருத்துக்களை அன்றே பதிவு செய்திருக்கிறார். காலங்கள் மாறிவிட்டது. கருத்து மாறவில்லை; மாறவேண்டியதில்லை. மாற்றம் வரவேண்டியது மனங்களில். எனவே இந்தக் கட்டுரையில் வாட்சேப், பேஸ்புக் போன்ற சில வார்த்தைகளைச் சேர்த்து மறுபிரசுரம் செய்து விடலாம். அதுவும் அந்தக் கடைசி வரி - “தீர்க்கதரிசனம்".  /..... ஒரு பிரமுகரின் ஒவ்வொரு அம்சத்தையும் உடனுக்குடன் அத்தாட்சியோடு உலகுக்குத் தெரிவி

“எழுத்தில் தொலைதல்” - ப்ரியா இளங்கோ

ம களிர் தினத்தன்று மனைவியிடமிருந்து ஒரு கடிதம். ப்ரியா, என்னுடைய தோழி ஒருவருக்கு நேற்று எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பியிருந்தாள். இனி அதிகம் எழுதப் போகிறாளாம். இனி நமக்கு வேலை இல்லை. மகளிர் தினத்தன்று எனக்கு "காட்டாறு" என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி! தன் மீதும் என் மீதும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகவும் இருப்பதாலும், ப்ரியா எழுதியுள்ள முதல் படைப்பாக (கடித இலக்கிய வகைமையில் சேருமன்றோ?) இருப்பதாலும் முகநூலிலும் இங்கும் பதிவு செய்ய விழைகிறேன். "எழுத்து ஒரு அராபிக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவிட்டால், அப்பப்பா! என்னென்ன வேகங்கள், அழகுகள், தொடுவானமும் தாண்டிய தூரங்கள்!" - லா.ச.ரா இனி ப்ரியாவின் கடிதம்.. அ ன்புள்ள தேவிக்கு, என்னைப் போன்றதொரு ஆர்வக்கோளாறு மற்றும் கற்றுக்குட்டியின் தமிழ் எழுத்தைப் பாராட்டியும் ஊக்குவிக்கவும் வேறு செய்கிறீர்கள். நன்றி. இருப்பினும் எழுத்தில் என் எல்லை மிக மிகக் குறுகியது என்று நான் அறிவேன். “நீ ஒரு பக்கம் எழுத வேண்டுமானால் 100 பக்கங்களை முதலில் வாசி” என்பார் மாதவன். தமிழ் இலக்கியமோ உலக