இடுகைகள்

மதிப்புரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு..

படம்
அம்மாவின் தேன்குழல்: அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு - எழுத்தாளர் ஜோ டி குருஸ் ஒ ரு காலத்தில் ஜமீன்தார் பிள்ளைகளுக்கும் அதன் பின்னான காலத்தில் அரசியல்வாதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே கிடைத்த வெளிநாட்டுப் பயண வாய்ப்பு 90களில் நமது அடித்தள மக்களின் பிள்ளைகளுக்கும் மென்பொருள் துறைமூலம் வாய்த்தது. சமுதாயத்தின் மேலடுக்குகளில் உள்ளவர்களும் பயணித்தார்கள் ஆனால் வழக்கம்போலவே கிடைத்த வாழ்வைத் தூய்த்தார்களே அல்லாது புலம்பெயர் வாழ்வை, அதன் சூழலை, பொருளாதாரச் செழுமையை, சிக்கல்களை அதன் நிகழ் தருணங்களில் கிடைக்கும் தரிசனங்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்ததில்லை. தான் பெற்ற இன்பம் தனக்கு மட்டுமே என்ற அவர்களின் வழக்கமான இயல்பு. அக்கறையான நமது பிள்ளைகள் புலம் பெயர்ந்தபோது அந்த வாழ்வுசார் புரிதலும், இக்கட்டான சூழல்களில் அவர்களுக்கு மின்னெலென பளிச்சிடும் தரிசனங்களும் அதன் சுவராஸ்யங்களும் தமிழுக்கு கொடையாக கிடைத்துவிடுகின்றன. அப்படியானதொரு கொடையாகத்தான் தம்பி மாதவன் இளங்கோவின் அம்மாவின் தேன்குழல் என்ற இந்தத் தொகுப்பை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாசிக...

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொ ள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய " முடி " சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்:  “ முடி ” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது.  முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்க...

கற்றலே வாழ்க்கை

படம்
இ ன்று உலக புத்தக தினம். காலை எழுந்தவுடன் என் மகனிடம், 'இன்று உலக புத்தக தினம். நாம் இருவரும் ஒன்றாக புத்தகம் ஒன்றை வாசிக்கலாமா?' என்று யோசனைதெரிவித்தேன். குதூகலத்துடன், 'என்ன புத்தகம்? என்ன புத்தகம்?' என்று கேட்டான். 'நீ போய் உன் அலமாரியிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா.' என்றேன். அவன் தேர்ந்தெடுத்த புத்தகம் 'ரிச்சர்ட் டேவிட் பாக்' எழுதிய 'ஜோனதன் லிவிங்க்ஸ்டன் சீகல்' என்கிற புத்தகம். சிறப்பான இந்நாளில் வாசிப்பதற்கு எத்தனை பொருத்தமானதொரு புத்தகம். இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை என் தந்தையார் எனக்கும் என் தம்பிக்கும் சிறுவயதில் தன்னுடைய கையொப்பமிட்டுப் பரிசளித்த புத்தகம். சிறுவயதில் நானும் என் தம்பியும் ஒன்றாக வாசித்த புத்தகம். இன்றைக்கு அவன் சுருங்கி என்னுடன் வாசித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் என்ன, ஒரு பத்தி படிப்பதற்குள் ஓராயிரம் கேள்விகள், கிளைக் கதைகள். மகாபாரதத்தை வியாச முனி சொல்லக் கேட்டு எழுதியபோது நிச்சயம் விநாயகர் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கவேண்டும். 'பறப்ப...

தீனன் நூலகம் (Tienen Bibliotheek)

படம்
செ ன்ற வாரம் தீனன் (Tienen) நகர குழந்தைகள் நூலகத்துக்கு என் மகனுடன் சென்றிருந்தேன். உண்மையில் குழந்தைகளுக்கான இதுபோன்றதொரு நூலகத்தை இதுவரை நான் கண்டதில்லை. இலக்கியம், தகவல் களஞ்சியங்கள், புதிர்கள், விளையாட்டு, பாட புத்தகங்கள் என்று வயதுவாரியாக அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். இது தவிர எண்ணற்ற குழந்தைத் திரைப்பட மற்றும் விளையாட்டு டி.வி.டி-கள், ப்ளூரே தகடுகள். நான் சிறுவயதில் பார்த்த ஹோம் அலோன், ஜுமாஞ்சி திரைப்படங்களிலிருந்து சென்ற வருடம் வெளியான தி குட் டைனசார் வரை அனைத்து திரைப்படங்களும் கிடைக்கிறது. எதை எடுப்பதென்றே தெரியாமல் ஒரு பத்து படங்கள் எடுத்து வந்தோம். ஒவ்வொரு குழந்தையும் பத்து டி.வி.டி-கள், இருபது புத்தகங்கள் வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஒரு மாதத்திற்குள் திருப்பித் தந்துவிட வேண்டும். தாமதமானால் அபராதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு நாளைக்கு 5 சென்டுகள் (மூணரை ரூபாய்). எடுத்துவந்த புத்தகங்களில் அதற்குள் நான்கு புத்தகங்களை வாசித்து முடித்துவிட்டான் என் மகன். அவன் வாசிக்கும் வேகம் எனக்கே பிரமிப்பூட்டுகிறது. அவனுடன் அமர்ந்து படிப்பதற்காக இந்தப் புகைப்படத்திலுள்ள பு...

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (3)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் அம்மாவின் தேன்குழல் புத்தக மதிப்புரையை எழுதியுள்ளார். கடந்த முறை இந்தியா வந்தபோது புத்தக விழாவில் ஜே.டி.சாலிஞ்சரின் 'The Catcher in The Rye' (தமிழில் 'குழந்தைகளின் ரட்சகன்' - எதிர் வெளியீடு) வாங்கி வந்தேன். இன்னும் வாசித்து முடிக்கவில்லை. தமிழில் திரு.சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்த மதிப்புரையை எழுதியவர் அவர்தானா என்று தெரியவில்லை. அவராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இனி அவருடைய மதிப்புரை.. மாதவன் இளங்கோவும் தேன்குழல் மகாத்மியமும்…! கவித்துவமான தலைப்பு. சமீப காலத்தில் `அம்மா’ என்கிற புனிதமான சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு, நுகர்வு கலாசாரத்தில் ஒரு `ப்ராண்ட்’ ஆக உருவெடுத்து வருகிறது. அம்மாவின் தேன்குழல் புத்தகம் சந்தைக்கு வந்து விட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து `அம்மா’ தேன்குழல் சந்தைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாதவன் இளங்கோ எழுதி வெளிவந்திருக்கும் `அம்மாவின் தேன்குழல்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இத்தலைப்பினால் ஆன கதையின் மூலம் அம்மாவின் ...

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (2)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் மற்றுமொரு மதிப்புரை. இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா மற்றும் இதற்கு முந்தைய மதிப்புரையை எழுதியுள்ள பா. பூபதி இருவரும் நான் அறிந்திராதவர்கள். வாசகர்கள் இவ்விருவரின் விமர்சனங்களையும், கருத்துகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 'காதிரைச்சல்' எனும் கொடுங்கனவில் உழன்று கொண்டிருக்கையில் மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரைகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. காதிரைச்சலைப் (Tinnitus) பற்றி விரிவாக எழுதுகிறேன். மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா அவர்களின் மதிப்புரை: ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் முழு அறிமுகத்தையும் செய்துவிட்டார். அவர் கூறுவது போல இப்புத்தகம் புலம் பெயர்ந்தவர்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதாய் தோன்றினாலும், பல விழுமியங்களைத் தொட்டே செல்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இதுமட்டுமன்றி இந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுவதாக ஆசிரியரின் அறிமுகவுரையில் அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை வ...

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (1)

படம்
திரு.சரவணன் அவர்களின் இந்த பின்னூட்டத்தின் மூலமாகவே மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகி இருந்த மதிப்புரை பற்றி அறிந்து கொண்டேன். //  http://mathippurai.com/2015/02/23/ammaavin-thaenkuzhal/ /// இதில் மதிப்புரை படித்து உங்கள் பெயரை இணையத்தில் தேடி இங்கு வத்தேன். நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு வந்து பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற குறையை பணத்தை அனுப்பி ஈடு செய்ய முயல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வரத்தான் முடியவில்லை, குறைந்தது அம்மாவை நல்ல வீட்டில் குடியிருக்க வைத்து வாடகை, செலவுகளுக்காகவாவது பணம் அனுப்பிவைக்க மாட்டார்களா? - சரவணன் நன்றி, சரவணன்! 'அம்மாவின் தேன்குழல்' புத்தகத்தை வாசித்து, மதிப்புரையை எழுதியுள்ள திரு.பா.பூபதி அவர்கள் முன்வைத்த கருத்துகளை பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பா.பூபதி அவர்களின் மதிப்புரை:  இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஆசிரியரின் முன்னுரை. மிகவும் நேர்த்தியான முன்னுரை. அதில் அவர் பிரயோகித்து இருக்கும் வார்த்தைகள் அவரின்...

சின்ன விஷயங்களின் மனிதனுடன்..

படம்
' வ ண்ணதாசன் (கல்யாண்ஜி) அவர்களை வாசிப்பது என்பது மொட்டு மலராவதை அருகிலிருந்து ரசிப்பது' போன்றது என்று நண்பர்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன்.  புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ' சின்ன விஷயங்களின் மனிதன் ' புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்தபோது இனிய அதிர்ச்சி. எத்தனை பொருத்தமான அட்டைப்படம்?  புத்தகத்தின் தலைப்பும் அப்படியே. சிறு விஷயங்களின் மீதான அவரின் கூர்ந்த அவதானிப்பை அப்படி ரசித்து ருசித்திருக்கிறேன். அவரது இந்தக் கவிதையே அதற்கு ஒரு உதாரணம்: "யானையைக் கூட அடிக்கடி பார்க்க முடிகிறது மாதக் கணக்காயிற்று மண்புழுவைப் பார்த்து." எளிமையான வரிகள். ஆனால் எத்தனை ஆழம்! இதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம் என்று பட்டியலிட்டால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேரிடையாக யானையையும், மண்புழுவைப் பற்றியும் பேசுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். கண்ணில் தெரிவதையெல்லாம் எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கூர்ந்த அவதானிப்புடையோர் சொற்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவு ஏன்? ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, காணாமல் போய்க்கொண்டிருக்கும் அத்தனை...