இடுகைகள்

சுஜாதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு செரெண்டிபிட்டி அனுபவமும் சுஜாதாவும்

இ ந்த வாரம் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளிலிருந்து பேச்சாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிலிருந்து மொத்தம் எட்டு பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்களும்கூட பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வேறு. கருத்தரங்குக்குச் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஒரு பிரெஞ்சுப் பெண்மணி எங்களைக் கதிகலங்க வைத்துவிட்டார். அவருக்குப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்டிரு ந்த தலைப்பு "அலுவலகங்களை புதுமையாக வடிவமைத்து நவீனப்படுத்துவதின் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது எப்படி?" என்பது. அவருடைய மேடைப் பிரவேசமே சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கருப்பு நீள் அங்கி அணிந்துக்கொண்டு, கையில் ஒரு ரோபோவோடு மேடையேறிய அந்தப் பெண்மணி, பிரான்சு நாட்டின் கட்டிடக்கலையைப் பற்றி பேச ஆரம்பித்தார். நெப்போலியனின் அரண்மனையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவரது அலுவலகங்கள், பதினான்காம் லூயி கட்டிய வெர்சாய் அரண்மனை (Chateau de Ve...

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

படம்
சு ஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை. இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.   ...

'நோ ப்ராபளம்' - is that actually a problem?

இ ன்று மதியம் ப்ரசல்ஸ் மாநகரில் ஒரு இத்தாலிய பேருண்டிச்சாலையில் ஒரு ஐம்பது பேரோடு உணவருந்திக்கொண்டிருந்தேன். எனக்கு இடப்புறம் இரண்டு இந்தியர்களும், எனக்கெதிரே ஒரு சுவீடன் நாட்டுக்காரரும், துருக்கி தேசத்துப் பெண்ணொருத்தியும், எனக்கு வலப்புறம் பெல்கிய நண்பர்களும் அமர்ந்திருந்தார்கள். விவாதம் பிரெக்ஸிட்டில் தொடங்கி, இடையே செயல்திறன் மிக்க நாடு சுவீடனா? பெல்கியமா? என்றும் அதையொட்டியொரு அதிதீவிர வாக்குவாதம், பின்னர் கால்பந்து போட்டியென்று எதையெதையோ பேசிக்கொண்டிருந்தபோது, நான் எனக்குள் நேற்றிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்றான இஸ்தான்புல் தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி பேச ஆரம்பித்த அடுத்த கணம், எனக்கு அருகே இருந்த இந்தியர் மிகுந்த கவலையோடு, நான் அடுத்த வாரம் டர்கிஷ் ஏர்லைன்ஸில் இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக இந்தியா செல்வதாக இருந்தது. இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார். எதிரே இருக்கும் பெண்மணி துருக்கி தேசத்தைச் சேர்ந்தவள் என்று அவருக்குத் தெரியாது. அவளுடைய கணவர் ஒரு பெல்கியர். நண்பரின் புலம்பலைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன். அவளுக்கோ கட...