இடுகைகள்

கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதம்ப சாம்பார்

படம்
க டந்த இரு தினங்களாக சமையலறையை என்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு கதம்ப சாம்பார் செய்தேன். இது என்னுடைய சொந்த சமையல் குறிப்பு. பெயர்கூட நான் வைத்ததே. ஏற்கனவே அந்தப் பெயரை யாராவது பயன்படுத்தி இருந்தால் சண்டைக்கு வராதீர்கள். இந்தச் சோதனை முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்த சாயிக்கும் ப்ரியாவுக்கும் நன்றி.  கதம்ப சாம்பார் செய்துகொண்டிருக்கும் போதே இந்தக் குட்டி காணொளியை எடுத்து எங்கள் குடும்ப வாட்சேப் குழுவுக்கு அனுப்பினேன். அங்கு எனக்கு ஒரு நான்கைந்து "அப்ரென்டிசுகள்" இருக்கிறார்கள். அதிலும் எனக்கு வாய்த்த மைத்துனர்கள் இருக்கிறார்களே. சுடுதண்ணீருக்குக்கூட செய்முறை விளக்கம் கேட்கும் ரக சமையல் பழகுநர்கள்.  மகள் காயத்ரி, "கதம்பம் என்றால் என்ன சித்தப்பா?" என்று கேட்டாள். கதம்பம் என்றால் கூட்டுக்கலவை என்று பொருள். வீட்டிலுள்ள எல்லா காய்கறிகளையும் நறுக்கிப் போட்டு, குறைவான அளவு தேங்காய்த் துருவலைச் சேர்த்து, சாம்பார் பொடி மட்டுமல்லாது, மிளகு, தனியா, சீரகப் பொடிகளையும் அளவாகச் சேர்த்து சமைத்தேன். வழக்கமாக சாம்பாரில் சேர்க்கும் புளிக் க...

எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு..

படம்
எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு,  நேற்று பக்தர்களுக்கு என்னுடைய செய்தியைச் சொன்னேன். இன்றைக்கு உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நானும் ஒரு அக்நாஸ்டிக் வகையறாதான். உங்களின் அத்தனை நியாயங்களையும் அறிந்தவன். அதே சமயம் கடவுள் தத்துவத்தைப் புரிந்து கொண்டவன். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதத்திலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளை ஓட்டி விட்டோம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு  அரைத்த மாவையே அரைக்கப் போகிறோமோ தெரியவில்லை. இந்தப் பதிவு மறுப்பாளர்களுக்கும், சாமான்ய பக்தர்களுக்குமானது. அடிப்படைவாதிகளுக்கானது அல்ல. அவர்கள் நாம் சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. சில மூர்க்க நாத்திகர்களும் அப்படித்தான் என்றாலும், அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்பவர்க ள் என்பதால், சற்று காது கொடுத்துக் கேட்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மனிதனின் மிகப் பெரிய பிரச்சனைகள் யாவை என்று என்னைப் பட்டியலிடச் சொன்னால் இவற்றைச் சொல்வேன். 1. பிரிவு 2. நோய்மை 3. பணம் 4. மரணம் இவையே மனிதனின் மிகப் பெரிய பிரச்சினைகளும், அச்சங்களும் ஆகும்...

“எழுத்தில் தொலைதல்” - ப்ரியா இளங்கோ

ம களிர் தினத்தன்று மனைவியிடமிருந்து ஒரு கடிதம். ப்ரியா, என்னுடைய தோழி ஒருவருக்கு நேற்று எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பியிருந்தாள். இனி அதிகம் எழுதப் போகிறாளாம். இனி நமக்கு வேலை இல்லை. மகளிர் தினத்தன்று எனக்கு "காட்டாறு" என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி! தன் மீதும் என் மீதும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகவும் இருப்பதாலும், ப்ரியா எழுதியுள்ள முதல் படைப்பாக (கடித இலக்கிய வகைமையில் சேருமன்றோ?) இருப்பதாலும் முகநூலிலும் இங்கும் பதிவு செய்ய விழைகிறேன். "எழுத்து ஒரு அராபிக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவிட்டால், அப்பப்பா! என்னென்ன வேகங்கள், அழகுகள், தொடுவானமும் தாண்டிய தூரங்கள்!" - லா.ச.ரா இனி ப்ரியாவின் கடிதம்.. அ ன்புள்ள தேவிக்கு, என்னைப் போன்றதொரு ஆர்வக்கோளாறு மற்றும் கற்றுக்குட்டியின் தமிழ் எழுத்தைப் பாராட்டியும் ஊக்குவிக்கவும் வேறு செய்கிறீர்கள். நன்றி. இருப்பினும் எழுத்தில் என் எல்லை மிக மிகக் குறுகியது என்று நான் அறிவேன். “நீ ஒரு பக்கம் எழுத வேண்டுமானால் 100 பக்கங்களை முதலில் வாசி” என்பார் மாதவன். தமிழ் இலக்கியமோ உலக...

உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்..

குறிப்பு : "உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்.." - கடந்த முறை இந்தியாவிலிருந்து பெல்கியம் திரும்பும் பொழுது அபுதாபி விமான நிலையத்தில் உறவுகளின்,  நண்பர்களின் சிந்தனைக்காக எழுதியது. இ ந்தியாவுக்கு இரண்டு வார விடுமுறை எல்லாம் போதாது. நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று நினைத்த பலரை இந்த முறையும் சந்திக்க இயலவில்லை. செய்ய நினைத்த பல விஷயங்களைச் செய்ய முடியவில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுபவன் நான். ஆனால், காலம்? அது ஓடிக்கொண்டே இருக்கிறதே. எனக்காக நிற்க மறுக்கிறதே, என் நினைவுகளைப் போலவே. இன்னும் சில நிமிடங்களில் அபுதாபியிலிருந்து ப்ரசல்சுக்குச் செல்லும் விமானம் கிளம்பிவிடும். ஆனால், அதற்கு முன்பு சில வார்த்தைகள். இது வெறும் பகிர்வல்ல. அனுபவிக்காத எதையும் எழுதவோ பகிரவோ கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன். ஆனால் எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. எத்தனை பேர் ஏலாதி படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இதை என்னுடைய ஏலாதி என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆறுக்கு அதிகமாகவே இருப்பினும்.    1. உடல்நலம் பேணுங்கள்   பசித்தால் மட்டும் புசியுங்கள். இன்...

பொறாமை எனும் நஞ்சு..

படம்
க டந்த வாரம் நான் எழுதிப் பதிவிட்டிருந்த " புறங்கூறாமை எனும் அறம் " பதிவுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், புலனம் வழியாகவும் பல நண்பர்கள் பாராட்டிச் செய்தி அனுப்பி இருந்தார்கள். ஒரு சிலருக்கு உடனே பதிலனுப்பிவிட்டேன். ஆனால், தொடர்புகொண்ட அனைவருக்குமே உடனே பதில் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் எடுத்து பதில் அளிக்க விழைவதும் ஒரு காரணம்.  ஒரு சிலர், "சுய மேன்மை" (personal excellence) சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளிலேயே அதுதான் சிறந்தக் கட்டுரை என்றார்கள். உண்மையிலேயே மனநிறைவு அளிக்கும் சொற்கள் இவை. நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட பதிவாயினும், அதை ஒரு வசைக் கட்டுரையாகவும் பலர் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். ஆனால் அதற்கு மாறாக, வந்துகொண்டிருக்கும் எதிர்வினைக ள் எனக்கு உவகையளிப்பதாகவே உள்ளது;  மனதில் நம்பிக்கைப் பிறக்கிறது; புத்தொளி பாய்ச்சுகிறது. என்னையும், என்னுடைய செயல்களையும் தொடர்ந்து சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன். அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவங்...

காந்தியம் தோற்கும் இடங்கள்

படம்
இ ரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான், என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னை காந்தியவாதியாக பாவித்தார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. வரலாற்றுப் புத்தகங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே. எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாகதான் இருந்தது; அவர்மீதான விமர்சனங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழு...

மொத்தக் குருதியாலும்..

படம்
ஜெ யமோகனின் " இந்த இரவு இத்தனை நீளமானதென்று... " என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு.  அ ன்பு ஜெயமோகன், "தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய  "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.    2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்...

இந்தியா குறித்த ஏளனம்…

எ ழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 'இந்தியா குறித்த ஏளனம்..' பதிவுக்கு நான் எழுதிய கடிதம் - அவருடைய தளத்தில்: http://www.jeyamohan.in/91987#.WPRra9J97IV என்னுடைய கடிதம்: அன்பு ஜெயமோகன் ‘இந்தியா குறித்த ஏளனம்..’  கடிதத்தைப் பார்த்தேன். பிரகாஷ் எந்த நாட்டில் வசிக்கிறார் என்று தெரியவில்லை. ஐரோப்பிய பின்னணியிலிருந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறியதில் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், சீனர்-ஜப்பானியர்களைக் குறித்த பார்வை எனக்கு சரியெனத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்தான். இவர்கள் நல்ல வெளிநாட்டுக்காரன் கெட்ட வெளிநாட்டுக்காரன் என்றெல்லாம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பார்த்தாலும் அதற்குக் காரணம் சீனர்கள் நடந்துகொள்ளும் விதம் காரணமாக இருக்கலாமே ஒழிய, பிறிதொரு காரணம் இருப்பதாய்த் தெரியவில்லை. மேலும், இந்திய உணவைப் பார்க்கும்போது அவர்கள் அருவெறுப்படைவது பற்றி எழுதியிருந்தார். அதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து முற்றிலும் மறுக்கிறேன். எனக்கு உள்ளூர் நண்பர்கள் அதிகம். முதல் முறையாக இந்திய உணவை சுவைப்பதற்கு...