இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (2)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் மற்றுமொரு மதிப்புரை. இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா மற்றும் இதற்கு முந்தைய மதிப்புரையை எழுதியுள்ள பா. பூபதி இருவரும் நான் அறிந்திராதவர்கள். வாசகர்கள் இவ்விருவரின் விமர்சனங்களையும், கருத்துகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 'காதிரைச்சல்' எனும் கொடுங்கனவில் உழன்று கொண்டிருக்கையில் மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரைகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. காதிரைச்சலைப் (Tinnitus) பற்றி விரிவாக எழுதுகிறேன். மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா அவர்களின் மதிப்புரை: ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் முழு அறிமுகத்தையும் செய்துவிட்டார். அவர் கூறுவது போல இப்புத்தகம் புலம் பெயர்ந்தவர்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதாய் தோன்றினாலும், பல விழுமியங்களைத் தொட்டே செல்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இதுமட்டுமன்றி இந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுவதாக ஆசிரியரின் அறிமுகவுரையில் அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை வ

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (1)

படம்
திரு.சரவணன் அவர்களின் இந்த பின்னூட்டத்தின் மூலமாகவே மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகி இருந்த மதிப்புரை பற்றி அறிந்து கொண்டேன். //  http://mathippurai.com/2015/02/23/ammaavin-thaenkuzhal/ /// இதில் மதிப்புரை படித்து உங்கள் பெயரை இணையத்தில் தேடி இங்கு வத்தேன். நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். பொதுவாக வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு வந்து பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற குறையை பணத்தை அனுப்பி ஈடு செய்ய முயல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வரத்தான் முடியவில்லை, குறைந்தது அம்மாவை நல்ல வீட்டில் குடியிருக்க வைத்து வாடகை, செலவுகளுக்காகவாவது பணம் அனுப்பிவைக்க மாட்டார்களா? - சரவணன் நன்றி, சரவணன்! 'அம்மாவின் தேன்குழல்' புத்தகத்தை வாசித்து, மதிப்புரையை எழுதியுள்ள திரு.பா.பூபதி அவர்கள் முன்வைத்த கருத்துகளை பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பா.பூபதி அவர்களின் மதிப்புரை:  இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஆசிரியரின் முன்னுரை. மிகவும் நேர்த்தியான முன்னுரை. அதில் அவர் பிரயோகித்து இருக்கும் வார்த்தைகள் அவரின்