இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - வாசகர் சந்திப்பு காணொளி

படம்
ஐ ந்து வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். உண்மையிலேயே அது அவருடைய மின்னஞ்சல்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு அவநம்பிக்கை. கடிதம் என் கண்ணில் பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அதை அனுப்பி இருக்கிறார். நான்தான் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு கடிதம் எழுதியிருந்தார். சென்னைப் புத்தக விழாவில் எனக்கு அறிமுகமான நண்பன் இளங்கோ கனடாவில் வசித்து வருபவர். அவருடைய தமிழ் எழுத்து நடைக்கு நான் ரசிகன். இளங்கோவின் முகவரியைப் பெற்று அவருக்கு என்னுடைய புத்தகத்தை அனுப்பி வைத்து, "எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் இதைத் தர முடியுமா?" என்று கோரிக்கை வைத்தேன். "புத்தகம் வந்து சேர்ந்தது. நிச்சயம் அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது தருகிறேன்" என்று உறுதியளித்தார். அதன் பிறகு இளங்கோவிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. புத்தகம் அ.முத்துலிங்கத்தை சென்றடையும்; அவர் அதை வாசிப்பார் என்றெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பையும் நான் வைத்துக்கொள்ளவில்லை.. ஒரு காலத்தில் அவருடைய தளத்துக்குச் சென்று வாசிப்

நிலவு தேவதை

படம்
Rotterdam Film Festival : Jerome, Nilavazhagan, Arun Karthick, Madhavan.  பி ம்பங்கள் பற்றி நண்பர் நிலவழகன் சுப்பையா ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதைப் பற்றி பேசுவதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. ஜெர்மனியில் வசித்து வரும் அவர் ஒரு திரைப்பட ஆர்வலர். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு வாட்சேப்பிலும் முகநூலிலும் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தாலும், ஒரு நாள் தொலைபேசி வழியே பேசிய பிறகே நெருக்கமானோம். என்னுடைய மகன் சாயின் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். குறிப்பாக " பைசைக்கிள் தீவ்ஸ் " திரைப்படம் பற்றிய அவனுடைய காணொளியைப் பார்த்துவிட்டு அழைத்திருந்தார். நீண்ட நேரம் அவனுடைய எல்லா காணொளிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. பைசைக்கிள் தீவ்ஸ் காணொளியை பல நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். சிலர் பாராட்டினார்கள். சிலர் பதில்கூட சொல்லவில்லை. அதில் எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் இஃதொன்றும் புதிதில்லை. பொதுவாகவே குழந்தைகள் மீது இந்தியர்களுக்கு ஒரு அலட்ச

யூட்யூப் இணைப்புகள்

படம்
ச மூக வலைத்தளங்களில் இல்லாத நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என்னுடைய அண்மைய காணொளிகளை யூட்யூபில் தரவேற்றியிருக்கிறேன். குழந்தைகளுடன் உரையாடல் புத்தக வாசிப்பு : https://youtu.be/y8CcKqzi7H4 விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? : https://youtu.be/n6OmNeIkA88 நளபாகம் மிளகுக் குழம்பு : https://youtu.be/7QaA7JbRVJY குஸ்கா : https://youtu.be/Xx2EUdNB8hs மலபார் சுலைமானி : https://youtu.be/7Ap5t043dXM குல்ஃபி : https://youtu.be/zawg-VhwYyo இளமை திரும்புதே (Parents version) https://youtu.be/Vqn87Hpo4R8 இயக்குநருடன் ஒருநாள் - ஆவணப்படம் https://madhavan-elango.blogspot.com/2020/06/blog-post_21.html நண்பர்களின் நலம்விரும்பிகளின் அன்புக்கும் ஊக்கமூட்டலுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அந்நியன்

படம்
கு ழந்தைகள் எத்தனை வேகமாக வளர்கிறார்கள். முகநூல் ஒரு குளிர்பதனப் பெட்டியைப் போன்று தனக்குள் சேமித்து வைத்திருக்கும் நினைவுத்துண்டுகளை அவ்வப்போது அள்ளித் தருகிறது. அவற்றை மிகக் கவனமாகக் கைகளில் ஏந்தி, உருக வைத்து துளியும் சிந்தாமல் பருகுகிறேன். மகனுக்கு அப்போதெல்லாம் மிகவும் பிடித்தமான தண்ணீர் விளையாட்டுக்குக்கூட என் உதவி தேவைப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சத்யஜித் ரேயின் "ஆகந்துக்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, " என்னப்பா, படம் முழுவதும் உன் புராணமாக இருக்கிறது?" என்று சிரித்துக்கொண்டே என் சிந்தனைகளை விமர்சிக்கிறான். "வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது" என்கிற ஒரு வரியைக் கண்டடைந்ததாக ஜெயமோகன் எழுதியிருந்தார். அதே வாழ்க்கை என்பது “நம் குழந்தைகளுக்கு அந்நியர்களாக ஆகிக்கொண்டே இருப்பதுவும்தான்” என்கிற வரியை நான் நேற்று கண்டடைந்தேன். அவனோடு சேர்ந்து சிரித்துக்கொண்டே, "ஆம். நான் உனக்கு ஒரு ஆகந்துக்" என்றேன்.

உண்மையைத் தேடி..

படம்
ஒ ரு சமூகத்திலிருந்து உருவாகி வரும் கலைப் படைப்புகளின் செயற்கைத்தனத்துக்கும், அந்த சமூகத்தின் செயற்கைத்தனத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. செயற்கைத்தனங்களே  யதார்த்தமாகிவிட்ட தோற்றத்தைத் தரும் உணர்திறனற்ற சூழலிலிருந்து உன்னதமான கலையை உருவாக்குவதற்கான அக தரிசனங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. எதிலுமே விதிவிலக்குகள் உண்டு என்றாலும், யதார்த்த வாழ்க்கையிலிருந்தே யதார்த்தமானதொரு படைப்பை எளிதாக உருவி எடுக்க முடியும். மாறாக செயற்கைத்தனங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சமூகத்திலிருந்து பிறக்கும் கலைப் படைப்புகளும் செயற்கைத்தனமாக இருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது. உதாரணத்துக்கு சத்யஜித் ரே சென்னையில் இருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் ஒரு நாள் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த அனுபவத்தைக் கொண்டு அவர் என்ன திரைப்படம் எடுத்துவிட முடியும்? தரமான ஒரு குறும்படம்கூட எடுக்க முடியாது. உண்மையும் உணர்திறனும் அற்றுப் போனதொரு சூழல் அது. முகநூலுமே அப்படிப்பட்டதுதான். தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தின் பின்னணியில்தான் "முடி" சிறுகதையை எழுதினேன். ஆனால் குறிஞ்சிமலர்

"டூ மச்"

கேள்வி : "என்ன மாதவன்? இவ்வளவு அருமையான (தமிழ்) திரைப்படத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே? இந்த காலத்தில் அவசியம் பேச வேண்டியதைத்தானே பேசியிருக்கிறார்கள். நல்ல கதைத்தானே? உங்களின் எதிர்பார்ப்புதான் என்ன? திஸ் ஈஸ் டூ மச்." பதில் : அவசியம் பேச வேண்டிய விஷயம்தான். இதில் உங்கள் கருத்தேதான் என்னுடையதும். நாம் இருவருமே காண விரும்புவது அலைகளைத்தான். அந்த அலைகள் எப்படி உருவாக வேண்டும் என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். உங்களுக்கு சக்திவாய்ந்த புயலொன்று கடலில் உருவாக வேண்டும். கடல் கொந்தளிக்க வேண்டும். பெரும் சீற்றத்துடன் சுழன்று அடித்துக்கொண்டு அந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து அலைகளை உருவாக்க வேண்டும். கடலின் கொந்தளிப்பைப் பாருங்கள். சீறி வரும் புயலைப் பாருங்கள் என்று கூறுகிறீர்கள். இது போதாதா என்று கேட்கிறீர்கள். நான் பெரிதினும் பெரிது கேட்பவன். நான் காண விரும்புவது ஆழிப்பேரலைகளை. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் புயல்களுக்கு சுனாமிகளை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்று நம்புகிறேன். ஆழ்கடலின் அடித்தளத்தில் எவர் கண்களுக்கும் தெரியாமல் அதிர்ந்து சுனாமிப் பேரலைகளை உருவாக்கும்

மேரி ஓவர்லை

படம்
பி ன்நவீனத்துவ நாடகப் பயிற்சியாளர் மேரி ஓவர்லை காலமானார். நிகழ்த்துக்கலை தத்துவ உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய "ஆறு நோக்குநிலைகள்" கோட்பாடு அவர் உருவாக்கியதுதான். அதை வெறும் கோட்பாடாக விட்டு விடாமல் நடைமுறைப்படுத்திக் காட்டியவர். நாடக உலகில் அவரை அசலான அராஜகவாதி என்று அழைக்கிறார்கள். என்னுடைய ஆசான் அவரை மகாராணி என்பார்.  அவருடைய மறைவைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை. அவர் அப்படி வாழ்ந்தவர்தான். வெளிச்சத்துக்கு வர என்றுமே அவர் விரும்பியதில்லை. அதனால் தன்னுடைய கருத்துக்கள் மறைக்கப்பட்டு விடும் என்கிற கவலை அவருக்கு இருந்ததில்லை. படைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட அசலான கலைஞர்கள் அப்படித்தான். நிறைகுடங்கள் தளும்புவதில்லை. குறைகுடங்களின் தளும்பல்களைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே. இடைவெளி, வடிவம், உணர்ச்சி, இயக்கம், காலம், கதை ஆகிய ஆறு புலனுணர்வு மொழிகளையும் ஒவ்வொரு நிகழ்த்துக் கலைஞனும் நன்றாகக் கையாளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது. விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இந்த ஆறு நோக்குநிலைகள் பயிற்சிக்க

மோரைப் பெருக்கி மாங்காயை நசுக்கி கடலையை ..?

படம்
சி றுவயதில் கோடை விடுமுறைக்கு ஏலகிரி மலைக்கருகேயுள்ள எங்கள் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கம். கொண்டாட்டமாகக் கழிந்த நாட்கள் அவை.   வீட்டுக்கு அண்மையில் இருக்கும் தென்னந் தோப்பில் நண்பர்களோடு ஆட்டம் போட்டது, மாமரம் மீது ஏறிக் காரோட்டி மகிழ்ந்தது, கிப்ளிங்கின் ஜங்கிள் புக் வாசித்து விட்டு அதன் தாக்கத்தில் பல்கலை வித்தகரான சின்னத் தாத்தாவிடம் பூமராங் செய்து கொடுக்கச் சொல்லி அதை வீசியெரிந்து விளையாடியது, காய்ந்த பனையோலையையும் சோளத் தட்டையும் கொண்டு காற்றாடி செய்து அதைத் தூக்கிக்கொண்டு ஓடியது, செங்கற்களைக் கொண்டு கார் ரேஸிங் விளையாடியது, புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி மாமாக்களை ஆட்டச் சொல்லியது, அதே புளிய மரத்துக்கு அடியில் கயிற்றுக் கட்டிலில் உறங்கியது, உறங்கியெழுந்து பசிக்கு அம்மியில் நசுக்கிய மாங்காயுடன் சுவையான கம்பங்கூழ், தாகத்துக்கு இளநீர், நொறுக்குத் தீனியாக தோட்டத்திலிருந்து பச்சைக்கடலை பறித்து வயலில் ஓடும் தண்ணீரில் கழுவி உண்டது, உண்டி வில் செய்து கொய்யா, கோணக்காய்களைப் பறித்தது, பம்புசெட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் தெம்பாய் நனைந்து வயலுக்குள் பாம்பாய் தெறித்து

சாயலி இலக்கியம்

ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை அரங்கில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனை அழைத்திருந்தார் பொன் வாசுதேவன். அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அப்போதைய இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் வந்து, "சிறுகதைத் தொகுப்பா?" என்று வினவினார். "ஆமாம்" என்று கூறிவிட்டு புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். "கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியிடவில்லையா?" என்றார். "நான் கவிஞனில்லை. எழுத்தாளனே இல்லை. இதுவே ஒரு விபத்துதான்" என்றேன். "முதலில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு பிறகு சிறுகதைத் தொகுப்பை வெளியிட வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இன்று வரை அந்த அறிவுரையின் தருக்கம் எனக்கு விளங்கவேயில்லை. இந்நேரம் அவர் மூத்த எழுத்தாளராக பதவி உயர்வு பெற்றிருப்பார் என்று நினைத்து, கடந்த தேர்தலின் போது அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்தேன். நன்றாக எழுதக்கூடிய அவரொரு மிகப் பெரிய சாயலி (meme) எழுத்தாளராகியிருப்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன். அத்தனையும் அவதூறுப் பிரச்சார சாயலிகள். நானும் நிறைய

பிக்காஸோவின் மர்மம்

படம்
ஹெ ன்றி க்ளூஸோவும், பாப்லோ பிக்காஸோவும் இணைந்து உருவாக்கியுள்ள "பிக்காசோவின் மர்மம்" என்கிற ஆவணப்படம் பார்த்தேன். 1956-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் அதே ஆண்டு கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பௌல் ஹாஸார்ட்ஸ் என்கிற இயக்குநர் பிகாஸோவை வைத்து டச்சு மொழியில் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். வலோரிஸிலுள்ள பிகாஸோவின் ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்ட அந்தப்படம் அவ்வளவு பிரபலமடையவில்லை. ஓவியத்தில் நாட்டமுள்ளவர்கள், குறிப்பாக பிக்காஸோ ஓவிய ரசிகர்கள், பிக்காஸோவின் மர்மத்தை MUBI தளத்தில் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். இயக்குநரான க்ளூஸோவும் படத்தில் வருகிறார். எனக்கும் சமகாலப் படைப்பாளிகளின் ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஓவியர் மருதுவின் ஆவணப்படம்கூட எடுக்கலாம். அவருடைய ஓவியங்களிலும் பிக்காஸோ ஓவிய பாணியின் தாக்கம் இருக்கும். குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை எடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். அசோகமித்திரன் மிகச் சிறிய தாள்களில் இடத்தை க

மதச் சண்டை

பெ ல்கியத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில், வாரத்திற்கொருமுறை துணிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சலவையகங்களுக்குச் செல்வதுண்டு. எங்கு சென்றாலும் கூடவே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வது என் வழக்கம். ஆனால் அங்கு பல சுவாரசியமான உரையாடல்களை கேட்கும் வாய்ப்பு ஓரிரு முறை கிடைத்தவுடன், அவற்றை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதால் புத்தகத்தை எடுத்துச் செல்வதை நிறுத்திவிட்டேன். சலிப்பூட்டும் உரையாடல்களாக இருந்தால் வெளியே சென்று புல்வெளியில் படுத்துக்கொண்டே வானம் பார்க்க ஆரம்பித்து விடுவேன். அப்போதெல்லாம் கைப்பேசியில் கிண்டில் கிடையாதே. அப்போது நான் வசித்து வந்த லூவன் ஒரு மாணவர் நகரம். உயர்கல்வி பயில்வதற்காக பல தேசங்களிலிருந்து மாணவர்கள் புகழ்பெற்ற லூவன் பல்கலைக்கழகத்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதனாலேயே லூவன் எப்போதும் குதூகலமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும். ஒருமுறை சலவையகத்தில் நான்கு மாணவர்கள் மத ரீதியாகச் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் ஒருவர்கூட இந்தியரில்லை என்பதால் ஐந்தாவது ஆளாக நானும் சேர்ந்து அவர்க

"கிக் or கிண்டில்?"

படம்
க டந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ப்ருஸல்ஸ் நகர புத்தக அங்காடிகளிலும், அமேசான், போல் போன்ற தளங்கள் ஊடாகவும் கிட்டத்தட்ட இருபத்தைந்து புத்தகங்கள் வாங்கினேன். எல்லாவற்றையும் மே மாத இறுதிக்குள்ளாகவே வாசித்து முடித்துவிட்டார் மகர். மூன்று வாரங்களுக்கு முன்பே அடுத்து வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலைத் தயார் செய்து அனுப்பி விட்டான். அதுபற்றி எனக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருந்தான். சில இணையதள இணைப்புகளைக் கொடுத்து நாட்டுப்புறக் கதைகளை வாசிக்கச் சொன்னேன். ஆனால் அவனுக்கு என்னைப் போலவே புத்தகத்தைக் கையில் ஏந்தி வாசிக்கவே பிடித்திருக்கிறதாம். பத்து நாட்களுக்கு முன்பே அமேசானில் அவன் கேட்டிருந்த புத்தகங்களை ஆர்டர் செய்தேன். ஆனால் இந்த முறை சற்று தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் லெஃப் தல்ஸ்தோயின் குழந்தைகளுக்கான கதைகள் உட்பட நான்கு புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை. இவற்றையெல்லாம் இந்தியாவில் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் வாங்கியிருக்கலாம். இங்கு கிட்டத்தட்ட பதினாறாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. வழக்கமாக வருடத்திற்கொருமுறை இந்தியா வரும்போது ஒரு பெட்டி நிறைய புத

சாத்தானின் அப்பம்

படம்
இ யேசு கிறித்துவை அதிகமாக நேசித்த சீடன் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாஸே. தன்னுடைய ஜீவனை உலகுக்காக தியாகம் செய்வதாக அறிவித்த கிறித்துவுக்காகத் தன் ஜீவனைத் தந்தவன் யூதாஸ் மட்டுமே. அத்தகைய நல்மனம் துரோகிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது. உண்மையில் துரோகிகள் நேசிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் அன்பானவர்கள்; நண்பர்கள். தம் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் தங்களை நேசிப்பவர்கள். துரோகத்துக்கான காரணம், தங்கள் மீதான இந்த அன்பின் மிகுதிதான். துரோகத்தின் ஆதாரம் வெறுப்பு அல்ல. ஒருவன் தன் மீது தான் கொண்ட அன்பு; தற்காமம். தற்காமம் சாத்தானின் உணவு. அது நிரம்பியிருக்கும் இடத்தில் சாத்தான் பெரும் பசியுடன் நுழைகிறது. இயேசு கிறித்து அப்பத்தைக் கொடுத்ததால்தான் யூதாசுக்குள் சாத்தான் நுழைந்தது என்றுரைப்பது அறிவீனம். உண்மையில் சாத்தானுக்கான உணவு யாரிடம் அதிகம் இருக்கிறது என்பதையே பிற சீடர்களுக்கு கிறித்து காட்டிக் கொடுக்கிறார். இறுதி இராவுணவின் போது, "நான் உங்களை நேசிப்பது போல, நீங்கள் உங்களை நேசிப்பது போல, பிறரை நேசியுங்கள்" என்று அவர் கூறியது

மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிகள்

படம்
ராம், ஆன்ட்வெர்ப், பெல்ஜியம். கேள்வி: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஐந்து முக்கியமான வழிகள்? பதில்: நூல்களை வாசித்துவிட்டு நிறைய பேர் ஐந்து-பத்து என்று இதுபோன்று பட்டியல்களை வெளியிடுகிறார்கள், ராம். சுயமேன்மை நூல்களை ஒதுக்கி விட்டு இலக்கியத்துக்குள் நான் நுழைந்ததற்கான காரணமே இதுதான். அங்கு சிறிதளவேனும் உண்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் பட்டியலில், நான் உட்பட வழக்கமாக எல்லோரும் சொல்லும் நூல்களை வாசித்தல், திரைப்படம் பார்த்தல், பயணங்கள் புரிதல், அறச் செயல்கள், தியானம் செய்தல் போன்ற வழிகளையெல்லாம் பட்டியலிட விரும்பவில்லை. அவையெல்லாம் போலச் செய்பவர்களுக்கும், உறுதிப்படுத்தல் சார்பு மனநிலையுடையவர்களுக்கும் (Confirmation Bias) ஒருவேளை திருப்தியளிக்கலாம். நாற்பது வருடங்களாக தொடர்ந்து தியானம் செய்து "அமைதி கிலோ என்ன விலை?" என்று கேட்கும் மூர்க்கர்களையும் பார்த்திருக்கிறேன். தியானம் என்றால் என்னவென்றே தெரியாத நண்பர்கள் சிலர் சாந்த சொரூபிகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் கண்ணுற்றிர

கவிஞர்களின் பணியகம்

பெ ல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் இங்கே எந்த ஊருக்குச் சென்றாலும் ஆங்காங்கே "POETSBUREAU" இருப்பதைக் கண்டு வியந்தேன். டச்சு/ஃபிளம்மிய* மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து ஒற்றைச் சொல்லாக்கும் வழக்கம் உண்டு. எல்லா மொழிகளிலும் இந்த வழக்கம் உண்டெனினும், நானறிந்த வரையில் டச்சு மொழியில் அப்படி உருவாக்கப்பட்ட சொற்கள் மிக அதிகம். எளிய உதாரணம்: "Dansschool". "Dans" என்றால் நடனம். "school" (ஸ்கோல்) என்றால் பள்ளி. ஆனால் "Dans School" என்பதை "Dansschool" என்று ஒற்றைச் சொல்லாகத்தான் எழுதுவார்கள். இங்கே கல்லூரியில் டச்சு வகுப்புகளுக்கு செல்வதற்கு முன்பு வரை எனக்கு ஒரு சில அடிப்படையான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நான் மேற்சொன்னது போல் இரண்டு சொற்கள் மட்டுமல்ல, நான்கைந்து சொற்களையெல்லாம் சேர்த்து ஒரு சொற்றொடரளவுக்கு நீண்ட சொற்களெல்லாம் உண்டு. இவையனைத்துமே பயன்பாட்டிலுள்ள சொற்கள். இன்னொரு முக்கியமான விஷயம், மேற்சொன்ன “Dansschool” என்கிற சொல்லை, “Dans School” என்று பிரித்து எழுதலாகாது. அப்படித்தான் "Poetsbureau" என்கி

கெக்கெ பெக்

சிறுவயதில் யாராவது கோமாளித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரித்தால் என்னுடைய பாட்டி, "எதுக்குடா அவன் இப்படி கெக்கே பெக்கெனு சிரிக்கிறான்" என்பாள். அதற்குப் பொருள் என்னவென்று பாட்டியிடம் கேட்டதில்லை. கிறுக்குத்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பதைத்தான் அப்படி சொல்கிறாள் என்றே புரிந்து கொண்டோம். வியப்பு என்னவென்றால், "கெக்கெ பெக்" (Gekke Bek) என்பது டச்சு மொழியில் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் ஒரு மரபுவழி சொற்றொடர். பெல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் நான் செய்த முதல் காரியம், கல்லூரியில் சேர்ந்து மாலைவேளைகளில் டச்சு மொழி பயின்றதுதான். அதில் சிறப்பு என்னவென்றால், இங்கு மொழி வகுப்புகளை பிறிதோர் மொழியின் துணையின்றியே எடுக்கிறார்கள். அதனாலேயே புகைப்படங்களையும் வரைபடங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சில சமயங்களில் ஆசிரியர்கள் நடித்தும் காட்டுவார்கள். இதற்கான காரணங்களாக நான் காண்பவை இரண்டு: 1. பிற மொழிகளின் உதவியோடு ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்கும் போது நமக்குள் எப்போதும் ஒரு ஒப்பீடு நடந்து கொண்டே இருக்கும். ஆங்கிலத்தைக் கொண்டு டச்சு மொழியைக் கற்றுக் கொள்வது ம