இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலை 8.45 மணிக்கு புனித யாகோபு சதுக்கத்தில்

காலை 8.45 மணி . லூவன் நகரத்தின் புனித யாகோபு சதுக்கம் பேருந்து நிறுத்தம் . என்னுடைய நாள் துவங்கும் நேரமும் இடமும் இது . தினமும் ஆறு மணிக்கே எழுந்து விட்டாலும் , ஆறிலிருந்து எட்டு வரை நான் செய்யும் அத்தனைக் காலைக்கடன்களையும் ஒருவித தியான நிலையிலேயே செய்து முடிப்பேன் . ஆறுமணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டுத் தூங்கும் நண்பர்கள் பலர் காலையில் செய்வதை பார்த்திருக்கிறேன் . அலாரம் அடிக்கும் போது , கை மட்டும் விழித்துக்கொண்டு ஒரே அழுத்தாக சேவலின் கழுத்தை நெறிப்பது போல , அலாரத்தை அழுத்தி உறக்கநிலைக்கு அனுப்பிவிட்டு அதுவும் தூங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து முறையாவது அந்தக் கையுடன் அலாரம் பரிதாபமாகப் போராடும் . நான் நிச்சயம் அந்த ரகம் அல்ல . அலாரம் அடித்த அடுத்த நொடி குபீரென்று விழித்தெழுந்து , ஸ்னூஸ் செய்துவிட்டு , கண்களை மூடிக்கொண்டு படுக்கையிலேயே அமர்ந்து தியானம் செய்யத் தொடங்குவேன் . தியானம் தொடங்கிய சில நொடிகளில் தலை தொங்கிவிடும் . இதுபோன்று ஒரு பத்து ஸ்னூஸ்களுக்கு என் தியானம் தொடரும் . அதிலும் திங்கட்கிழ...