இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படைப்பாளியும் எதிர்ப்புகளும்

முகநூலில் என்னுடைய இயக்கம் அதிகரித்திருப்பதை அங்கு என்னைத் தொடரும் உணர்ந்திருக்கலாம். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். 'பாலில் விஷம்' என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லை. ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருந்தேனே ஒழிய என்னுடைய அன்றாட நடப்பு குறிப்புகள் எழுதுவதை என்றுமே நிறுத்தியதில்லை. முகநூலை எனது நாட்குறிப்புச் சுவடியாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் இங்கே நான் பகிரும் பதிவுகள் என்னுடைய நாட்குறிப்புச் சுவடியின் ஒரு பகுதி மட்டுமே. நான் இதுவரை எழுதியிருக்கும் அத்தனையுமே பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதற்கு என்னைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று எண்ணுகிறேன்.  நண்பர் வெங்கட் ஒருமுற

காஃப்கா கஃபேவும் ப்ரூகல் பாதையும்..

படம்
நண்பர்கள் பாபு, ஆலினுடன் ப்ரசல்ஸ் நகர வீதியில் உலவிக் கொண்டிருந்தபோது ஒரு அருந்தகத்தின் பெயர் என் கவனத்தை ஈர்த்தது - "காஃப்கா கஃபே". அருந்தகத்துக்கு காஃப்காவின் பெயரா என்று ஆச்சர்யப்பட்டோம். "நீ காஃப்காவை வாசிக்கிறாயா? ஹெவி ஸ்டஃப் ஆயிற்றே!" என்றார் ஆலின். நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் எனக்கு காஃப்கா, அல்பேர் காம்யு போன்ற எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதே என் பெல்ஜியம் நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்கெல்ல ாம் இந்தியாவில் என்ன வேலை என்பது போன்று பார்வை வீசியிருக்கிறார்கள். காஃப்காவின் "உருமாற்றம்" (The Metamorphosis) பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். அதைவிடவும் அவருடைய "தீர்ப்பு" (The Judgement) கதைதான் சிறந்ததென்பது என் தீர்ப்பு. என்னை உலுக்கிப்போட்டதொரு இலக்கியப் படைப்பு அது.  உண்மையிலேயே இந்த அருந்தகத்துக்கு ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்களா என்றொரு சம்சயம் எனக்கு. நம்மூரில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் இவர்கள் பெயரிலெல்லாம் தேநீர் கடைகளைப் பார்த்து நமக்குப் பழக்கமில்லையே. சாரு ந

நூறு செம்மறி ஆடுகள்

படம்
ப்ரஸல்ஸ் விமான நிலையத்துக்கு ஒரு மாத காலத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய சுவாரசியமான செய்தி ஒன்றை இன்று வாசித்தேன். விமான நிலையத்துக்கு அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் வந்து போவார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. ஏனெனில் இந்த முறை விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மேன்மைவாய்ந்த நூறு செம்மறி ஆடுகள்.  விமானங்கள் புறப்படும்போதும் தரையிறக்கத்தின் போதும் எழும்பும் சத்தம் வெளியில் கேட்க ாமலிருக்க, விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மண்மேடுகளில் வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் பாரிய புல்லறு பொறிகளைக் கொண்டு புல்மட்டத்தை சரிசெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து அந்தப் பணியைச் செய்வதற்கு செம்மறி ஆடுகளை வரவழைத்துள்ளார்கள். ஜூன் மாத இறுதி வரை அவை அங்கு மேய்ச்சலில் இருக்கும். புல்வெளி மேடுகளுக்கான பராமரிப்பு வேலையும் ஆயிற்று. ஆடுகளுக்குச் சுவையான விருந்தும் ஆயிற்று. இது ஒரு கால்நடை நட்புத் தீர்வு மட்டுமல்ல, நல்லதொரு சூழல் நட்புத் தீர்வும்கூட.  இதைப் பற்றி நண்பர் கார்த்திக்கிடம் மாலை பேசிக்கொண

சிலைகளும் குறிப்புகளும் (1)

படம்
ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில் நடந்து செல்லும்போது கண்களுக்கு விருந்தாகும் எளிமையான நினைவுச்சின்னங்கள், சிற்ப வேலைப்பாடுகளில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லையென்றாலும் சிலவற்றுக்குப் பின்னால் சுவாரசியம் தாங்கிய கதைகளும் இருக்கவே செய்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரேக்கக் கடவுளான ஜீயஸ் காளையாக உருமாறி வந்து ஐரோப்பாவைத் தூக்கிக்கொண்டு செல்லும் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் பெயர்காரணத்தை விளக்கியிருந்தேன். அந்தப் படம் பெல்ஜியத்திலுள்ள லூவன் நகரில் எடுத்தது. அங்குதான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வசித்தேன். என் சொந்த ஊரை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அதே அளவுக்கு லூவனையும் நேசிக்கிறேன். மாணவர்களின் நகரமான லூவன் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளின் கதைக்களமாக இருந்திருக்கிறது என்பதை வாசித்தவர்கள் அறிவீர்கள்.  ஊசிமுனையில் குத்தப்பட்ட வண்டு, நிர்வாண கோலத்தில் மிதந்துகொண்டிருக்கும் பெண், தலையில் தண்ணீரை ஊற்றியபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், ரொட்டி விற்பவன் என்று சாதாரண மனிதர்களுக்கான நினைவுச்சின்னங்களை லூவன்