இடுகைகள்

April, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (3)

படம்
மதிப்புரை.காம் தளத்தில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் அம்மாவின் தேன்குழல் புத்தக மதிப்புரையை எழுதியுள்ளார். கடந்த முறை இந்தியா வந்தபோது புத்தக விழாவில் ஜே.டி.சாலிஞ்சரின் 'The Catcher in The Rye' (தமிழில் 'குழந்தைகளின் ரட்சகன்' - எதிர் வெளியீடு) வாங்கி வந்தேன். இன்னும் வாசித்து முடிக்கவில்லை. தமிழில் திரு.சித்தார்த்தன் சுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்த மதிப்புரையை எழுதியவர் அவர்தானா என்று தெரியவில்லை. அவராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

இனி அவருடைய மதிப்புரை..

மாதவன் இளங்கோவும் தேன்குழல் மகாத்மியமும்…!

கவித்துவமான தலைப்பு. சமீப காலத்தில் `அம்மா’ என்கிற புனிதமான சொல் அரசியல் சாயம் பூசப்பட்டு, நுகர்வு கலாசாரத்தில் ஒரு `ப்ராண்ட்’ ஆக உருவெடுத்து வருகிறது. அம்மாவின் தேன்குழல் புத்தகம் சந்தைக்கு வந்து விட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து `அம்மா’ தேன்குழல் சந்தைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாதவன் இளங்கோ எழுதி வெளிவந்திருக்கும் `அம்மாவின் தேன்குழல்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளில் இத்தலைப்பினால் ஆன கதையின் மூலம் அம்மாவின் பாசத்தையும், புலம்…