இடுகைகள்

திருப்பத்தூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்னொரு நாள்...

படம்
சு மார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போது திருப்பத்தூர் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு மாபெரும் அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு என் தாத்தா என்னை அழைத்துச் சென்றிருந்தார். அதுதான் நான் கலந்து கொண்ட முதல் கட்சிக் கூட்டம். அதுவே கடைசியும் என்று நினைக்கிறேன்.  திடலில் நெருக்கியடித்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஆரவாரங்கள் ஆர்ப்பரிப்புகள், கைத்தட்டல்களுக்கு இடையேயும் கட்சித் தலைவரின் குரல் கனீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்த  இடத்திலிருந்து மேடை வெகுதொலைவில் இருந்தது. என் உயரத்துக்கு மேடை தெரியாத காரணத்தால் தாத்தா என்னைத் தன் தோள் மீது தூக்கிவைத்துக் கொண்டார். அவர் தோள்மீது அமர்ந்தபடிதான் மேடையில் முழங்கிக் கொண்டிருந்த 'கலைஞர் கருணாநிதி' அவர்களை நான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது.  கலைஞர் அப்போது ஏதோ ஒரு கதை சொன்னதாகக்கூட நினைவிருக்கிறது. அவருக்கு அருகில் சென்று பார்க்க முடியுமா என்று தாத்தாவிடம் கேட்டேன். அவரும் முயற்சி செய்தார், ஆனால் அந்தக் கூட்டத்தில் எங்களால் இரண்டடி கூட நகர முடியவில்லை. இன்னொரு ...

"Like your Papa giving.."

(மீள்நினைவு) அ ப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு; ஒன்பதாகவும் இருக்கலாம். அது இப்போது முக்கியமில்லை. எங்கள் தெருவில் திருவிழாவோ அல்லது அண்டை வீட்டில் வேறு ஏதோ ஒரு நிகழ்வோ என்று நினைக்கிறேன். ஒலிப்பெருக்கியில் எல்.ஆர். ஈஸ்வரி உரத்த குரலில் மாரியம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். எனக்குக் காலாண்டு தேர்வோ அல்லது அரையாண்டு தேர்வோ நடந்து கொண்டிருந்தது. எல்.ஆர்.ஈஸ்வரி என்னைப் படிக்க விடாமல் சதி செய்து கொண்டிருந்தார். விழாக்குழுவினருக்கு தேர்வைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் எந்தக் கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கொண்டாட்டம் அவர்களுக்கு முக்கியம். தேர்வு நாட்களில் மாணவர்களெல்லாம் தவ நிலையில் இருக்கும் முனிவர்களைப் போன்றவர்கள். அந்த சமயத்தில்தான் இதுபோன்ற திருவிழாக்களும், கிரிக்கெட் போட்டிகளும், சூப்பர் ஹீரோக்களின் திரைப்படங்களும் அப்சரஸ் அழகிகளான ரம்பை, மேனகை, ஊர்வசி போன்று மாணவர்கள் முன்பு தோன்றி, தவத்தைக் கலைக்க நடனமாடுவார்கள். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போதெல்லாம் அப்படி ஒரு முனிவனாய் என்னை நான் உ...