"டூ மச்"
கேள்வி : "என்ன மாதவன்? இவ்வளவு அருமையான (தமிழ்) திரைப்படத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே? இந்த காலத்தில் அவசியம் பேச வேண்டியதைத்தானே பேசியிருக்கிறார்கள். நல்ல கதைத்தானே? உங்களின் எதிர்பார்ப்புதான் என்ன? திஸ் ஈஸ் டூ மச்." பதில் : அவசியம் பேச வேண்டிய விஷயம்தான். இதில் உங்கள் கருத்தேதான் என்னுடையதும். நாம் இருவருமே காண விரும்புவது அலைகளைத்தான். அந்த அலைகள் எப்படி உருவாக வேண்டும் என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். உங்களுக்கு சக்திவாய்ந்த புயலொன்று கடலில் உருவாக வேண்டும். கடல் கொந்தளிக்க வேண்டும். பெரும் சீற்றத்துடன் சுழன்று அடித்துக்கொண்டு அந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து அலைகளை உருவாக்க வேண்டும். கடலின் கொந்தளிப்பைப் பாருங்கள். சீறி வரும் புயலைப் பாருங்கள் என்று கூறுகிறீர்கள். இது போதாதா என்று கேட்கிறீர்கள். நான் பெரிதினும் பெரிது கேட்பவன். நான் காண விரும்புவது ஆழிப்பேரலைகளை. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் புயல்களுக்கு சுனாமிகளை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்று நம்புகிறேன். ஆழ்கடலின் அடித்தளத்தில் எவர் கண்களுக்கும் தெரியாமல் அதிர்ந்து சுனாமிப் பேரலைகளை உருவாக்கும்...