இடுகைகள்

வர்ணம்

அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது.  திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன். "ஒரு நிமிடம்!" என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே!  இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார். பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், "மன்னிக்கவும்." நான் குறுக்கே நுழைந்து தொல்லை தருகிறேன் என்பது போன்று என்மீது கோபப்பார்வை வீசியவரிடம் தொடர்ந்து கூறினேன், "மன்னிக்கவும். நான் வந்து வெகுநேரம் ஆயிற்று." "மன்னிக்கவும். கவனிக்கவில்லை!" என்றார். "பரவாயில்லை. தங்கள் கவனத்தை கவரும் அளவிற்கு என் முகம் 'பளிச்சென' இல்லாததற்கு தாங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!" என்று உடனே கூ...

ப(ய)ணங்கள் முடிவதில்லை...

நூறுகளைக் கடந்தவன் - ஆயிரங்கள் வேண்டி ! ஆயிரங்களை ருசித்தவன் - லகரங்களை நோக்கி ! லகரங்களை க்   கண்டவன் - கோடிகளைத் தேடி ! கோடிகளைக் கண்டவனோ - நிம்மதியை நாடி ! ( எண்ணத்தூறல் - 4)

பொய்

உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது . காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது . அவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது . அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது . இப்படி எதுவாக இல்லாவிட்டாலும் , பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது . தமக்கு வேண்டியது போல் வளைத்துக்கொள்ள முடிகிறது . இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை . உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் , வெறுக்கிறார்கள் , நிராகரிக்கிறார்கள் , முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள் . ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது . தனிமரமாய் இந்த வேடிக்கையை அதுதரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர , உண்மைக்கு வேறு வழியில்லை . ( எண்ணத்தூறல் - 3)

மாதவன் இளங்கோ கவிதைகள்

படம்
பேரமைதி [ இணைப்பு ]                                                                     ------------------ மர்ம பாலம்  [ இணைப்பு ]                                                                     ------------------ அமைதிகளின் சத்தங்கள்.. [ இணைப்பு ]                                                                       ------------------ என் இனிய சக இந்தியனே... [ இணைப்பு ]         ...

மாதவன் இளங்கோ கட்டுரைகள்

படம்
இயந்திரர்கள் "மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தூக்கிகொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்." [மேலும் படிக்க...]                                                                     ------------------ ஏன் முதல் ஏடு வரை... "சிறிது குழப்பமான தலைப்புதான். என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த இடுகையைப் படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!"  [மேலும் படிக்க...]     ...

மாதவன் இளங்கோ சிறுகதைகள்

படம்
அம்மாவின் தேன்குழல் "வெளிநாட்டவர்கள்கூட இப்படிப் பேச மாட்டார்கள். ஆனால் ஒரு மூன்று, நான்கு வருடம் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டு, விடுமுறைக்கு வரும் நம் மக்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே? என்னவோ, இந்தியாவிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலவும், நாமெல்லாம் இங்கு ஏதோ பரிதாபமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் பேசுவார்கள். இது போன்ற மனிதர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சல் வந்து விடுவது உண்டு." [மேலும் படிக்க...]                                                                     ------------------ கல்லூரி கட்டணம் "இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொ...