பொய்

உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கிறது. இப்படி எதுவாக இல்லாவிட்டாலும், பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. தமக்கு வேண்டியது போல் வளைத்துக்கொள்ள முடிகிறது . இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது. தனிமரமாய் இந்த வேடிக்கையை அதுதரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, உண்மைக்கு வேறு வழியில்லை.

(எண்ணத்தூறல் - 3)கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்

சித்தி (Siddhi)