மாதவன் இளங்கோ கட்டுரைகள்

இயந்திரர்கள்"மோனலிசா ஓவியத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் இன்னொரு ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியம்.  சிலுவையைத் தூக்கிகொண்டிருக்கும் முற்கிரீடம் அணிந்த ஏசு கிறித்துவின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்த் திவலைகள் அவ்வளவு தத்ரூபமாக அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும். கிறித்துவின் முகத்தில் தெரியும் அந்த வலி உணர்வு நம்மை என்னவோ செய்யும்."


                                                                    ------------------

ஏன் முதல் ஏடு வரை..."சிறிது குழப்பமான தலைப்புதான்.

என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த இடுகையைப் படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!"                                                                     ------------------

என்னைக் கவர்ந்த மனிதர்கள்..


"அவர் பெயர் சுப்ரமணி  - படிப்பறிவில்லாத ஒரு மேஸ்திரி. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவரிடம் பணிபுரியும் கட்டிடத் தொழிலாளிகள்! அவர் என்னுடைய சிற்றூரில், நான்கைந்து இடங்களில் ஒரே சமயத்தில் கட்டிடங்களும், வீடுகளும் கட்டிக்கொண்டிருந்தார்."


                                                                      ------------------

உனக்குள் ஒருவன்.. அவனே நீ!"அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட."

                                                                    
                                                                      ------------------

பிரம்மாவைக் கண்டோம்
சைவத்தின் நுண்ணிய கருத்துகளையும், சித்தாந்த நெறிகளையும் அவர் போதித்துக்கொண்டே வர, என் தந்தையின் இன்னொரு நண்பர் காற்றைப் பிரித்தவாறு, அவற்றை எல்லாம் ஆமோதித்துக் கொண்டே வருவார். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் நடக்க, என் தம்பி அதுமுடியாமல் 'க்ளுக்' என்று சிரித்து விட்டு வாயைப் பொத்திக் கொள்வான். இப்படியாக பாடலும், கருத்தும், நடையும், சிரிப்புமாக மாதமாதம்  எங்களது  ஆன்மீகப் பயணம் ஆரவாரமாக இருக்கும்."

                                                                      ------------------

தீபாவளி - ஒரு FLASHBACK..."அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் - 'குகன்'.
அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. அவர்களுடைய வாழ்க்கைமுறையே வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சு வழக்கில் அவர்களை நாம் "குருவிக்காரங்க" என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை - எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதுமே ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை."


                                                                      ------------------

என் இனிய சக இந்தியனே..."வாகனங்களை ஓட்டிச்செல்லும்போது நாம் ஒவ்வொருவரும், ‘நம்முடைய குழந்தையோ, குடும்பத்தவர்களோ அல்லது நண்பர்களோ இன்னும் சிறிது நேரத்தில் சாலையைக் கடக்கலாம்’ என்கிற விழிப்புணர்வோடு ஓட்டினால் கூட, நிறைய விபத்துகள் தவிர்க்கப்பட்டு விடும். இதைக் கவிதை என்றெல்லாம் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்."


                                                                      ------------------

'ப்ரமான் சூபியங்க'


சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, "தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?" என்று கேட்டார்.

"இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு." என்றேன்.

அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, "நீங்கள் 'தாய்' (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?" என்று கேட்டேன்.

அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், "உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?" கேட்டார்.


                                                            ------------------

முடிதிருத்தகமும் மனிதமும்..


"சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று - 'முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது'. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது."


                                                                      ------------------

ஒன்பதாவது மேகமும் ஏழாவது சொர்க்கமும்


"குளிர் காலத்தில் சூரிய ஒளியே இல்லாததொரு இருட்டு வாழ்க்கையாக வேறு இருப்பதால், வைட்டமின் D குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ‘சூரியப்படுக்கையை‘ நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. என்னைப் போன்ற ஒரு சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சென்றுவிட்டு வருவதும் உண்டு."

                                                                    ------------------
முதற்பதிவு..."இன்றைய வாழ்க்கையே ஒரு RAT RACE போலாகிவிட்டது. எல்லோருமே முழுமூச்சாக அந்தக் களத்தில் இறங்கி, எதையோ நினைத்துக்கொண்டு, ஏதேதோ தேடி, எங்கெங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், யாருமே இந்த ஓட்டத்தை ரசிப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில், "Game is neither in the winning nor in the losing; It is in the playing" என்பார்கள். இலக்கு என்பது வெற்றி, தோல்விகளால் குறுக்கும் நெடுக்கும் பிண்ணப்பட்ட ஒரு மாய வலை.  அத்தகைய வலையில் மாட்டிக்கொண்டிருப்பதையே அறியாத குருட்டு மான்கள் நாம். அதனை அறிந்து கொள்ளவே முடியாத வண்ணம் 'result-oriented', 'goal-oriented' எனப் பட்டங்களும், பாராட்டுகளும், பரிவட்டங்களும் கட்டி நம்மை குருடர்களாக்கி விடுகிறது இந்த உலகம்."


                                                                      ------------------நன்றி: அனைத்து கட்டுரைகளையும் வெளியிட்டு சிறப்பித்த  வல்லமை மின்னிதழுக்கு நன்றி!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்